சனி, 26 மே, 2012

ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

திருக்கயிலை மலை
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய, நமசிவாய மந்திரத்தின் மகிமையைப் போற்றும்

ஸ்ரீ சிவபஞ்சாக்ஷரஸ்தோத்ரம்

நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!

சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!

வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி :

2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம்

3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்
மஹீவே தேவம் மஹாவேத பாலம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்

4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்

5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்

6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா:
ததா பர்வதே ராஜதே தே திரூடா:
இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா
ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து

7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸரயாமோ குஹம் தம்

8. லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப்ராகாஸம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸூரேஸம்

9. ரணத்தம்ஸகே மஞ்ஜூலே த்யந்த ஸோணே
மநோஹாரி லாவண்ய பியூஷபூர்ணே
மந: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

10. ஸூவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபாமாநாம்
லஸத்தேம பட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்

11. புலிந்தேஸகந்யா கநாபோக துங்க
ஸ்தநாலிங்கநாஸக்த காஸ்மீர ராகம்
நமஸயாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்

12. விதௌ க்லுப்த தண்டாந் ஸ்வலீலாத்ருதாண்டாந்
நிரஸ்தேஸூண்டாந் த்விஷத்காலதண்டாந்
ஹதேந்த்ராரி ஷண்டாந் ஜகத்தாரண ஸெளண்டாந்
ஸதா தே ப்ரசண்டாந் ஸ்ரயே பாஹூதண்டாந்

13. ஸதா ஸாரதா: ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீநா:
ஸதா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்

14. ஸ்புரந்மந்த ஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்சத்
கடாக்ஷõவலீ ப்ருங்க ஸங்கோஜ்லாநி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீஸஸூநோ
தவாலோகயே ஷண்முகாம்போருஹாணி

15. விஸாலேஷூ கர்ணாந்த தீர்கேஷ்வஜஸ்ரம்
தயாஸயந்திஷூ த்வாதஸஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதஸ் சேத்
பவேத் தே தயாஸீல கா நாம ஹாநி:

16. ஸூதாங்கோத்பவோ மே ஸி ஜீவேதி ஷட்தா
ஜபத் மந்தரமீஸோ முதா ஜிக்ரதே யாத்
ஜகத்பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய:

17. ஸ்புரத் ரத்ந கேயூர ஹாராபிராம:
சலத்குண்டதல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸ: கரே சாருஸக்தி:
புரஸ்தாத் மாமாஸ்தாம் புரோரேஸ் தநூஜ:

18. இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராத் ஸங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம்

19. குமாரேஸ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா
பதே ஸக்திபாணே மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரித்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் தவம்

20. ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட ஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ராயாணோந்முகே மய்யநாதே ததாநீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம்

21. க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூ கோபாத்
தஹ ச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம்

22. ப்ரணம்யாக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே நேக வாரம்
ந வக்தும் க்ஷமோ ஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே  மநாகப்யுபேக்ஷ£

23. ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாக: ஸிம்ஹ வக்த்ரஸ்ச தைந்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மந: க்லேஸமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாம்

24. அஹம் ஸர்வதா துக்க பாராவஸந்நோ
பவாந் தீநபந்து: த்வதந்யம் ந யாசே
பவத் பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாஸயோமாஸூத த்வம்

25. அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே

26. த்ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருதயம்
குஹே ஸந்து லீநா மமாஸேஷ பாவா:

27. முநீநா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்
அபீஷ்ட ப்ரதாஸ் ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்யஜாநா மபி ஸ்வார்த்ததாநோ
குஹாத் தேவமந்யம் ந ஜாதே ந ஜாதே

28. களத்ரம் ஸூதா பந்து வர்க: பஸூர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா:
யஜந்நோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமாரா

29. ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்யாக்ரபிந்தா: ஸூதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைல

30. ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே ந கிம் தேவஸேநாதி நாத
அஹம் சாதி பாலோ பவாந் லோக தாத:
க்ஷமஸ்வாபராதம் ஸமஸதம் மஹேஸ

31. நம: கேகிநே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேஸாய துப்யம்
புந: ஸிகந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து தத

32. ஜயாநந்தபூமந் ஜயாபார தாமந்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே த
ளஜயாநந்தஸிந்தோ ஜயாஸேக்ஷ பந்தோ
ஜய த்வம் ஸதா முக்தி தாநஸ ஸூநோ தத

33. புஜங்காக்ய வ்ருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய த
ஸ புத்ரநாத் களத்ரம் தநம் தீர்க்க மாயு
லபேத் ஸ்கந்தஸாயுஜ்ய மந்தே நர: ஸ: தத

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதவிரசிதம்
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கஸ்தோத்ரம் ஸம்பூரணம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்தத் துதி, தீராத நோய்களையும் தீர்க்கும் வல்லமை உடையது. பில்லி, சூனியம், ஏவல் முதலியவற்றால் துன்புறுவோர், இந்தத் துதியைப் பாராயணம் செய்ய, முருகன் அருளால் அவை விலகும்.

வெற்றி பெறுவோம்.!!!!!!

சனி, 19 மே, 2012

ஸ்ரீ லிங்காஷ்டகம்.

ஸ்ரீ லிங்காஷ்டகம்.

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சந்நிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

நாம் பிரயாணம் மேற்கொள்ளும் சமயங்களில், நமக்கு வழியில் எவ்வித ஆபத்துகளும் அண்டாது நம்மைக் காக்கும்,

மார்க்க பந்து ஸ்தோத்திரம்

சம்போ மஹாதேவ தேவ
சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ
சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம் ரத்ந கிரீடம்
பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம்
சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

அங்கே விராஜத் புஜங்கம்
அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம்
ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

நித்யம் சிதானந்த ரூபம்
நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம்
க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும் (சம்போ)

கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம்
காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம்
கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

மந்தார பூதேருதாரம்
மந்தார கேந்த்ர ஸாரம்
மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும் (சம்போ)

அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம்
ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே
மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச; (சம்போ)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய, ஸ்ரீ அன்னபூர்ணாஷ்டகம்

நித்யாநந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷமா ஹேச்வரீ
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுரா தீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

நாநாரத்ன விசித்ரபூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விலம்பலமான விலஹத் வ§க்ஷ¡ஜ கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாரசிகரீ காசீபுராதீச்வரீ
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

யோகா நந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைக நிஷ்ட்டாகரீ
சந்த்ரார்காநல பாஸமான லஹ்ரீ த்ரைலோக்ய ரக்ஷ¡கரீ
ஸர்வைச்வர்யகரீ தப : பலகரீ காசீபுராதீச்வரீ
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

கைலாஸாசலகந்தராலயகரீ கெளரீ ஹ்யுமா சாங்கரீ
கெளமாரீ நிகமார்த்தகோசரகரீ ஹ்யோங்கார பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ¡ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

த்ருச்யா த்ருச்ய விபூதிவாஹனகரீ ப்ரஹமாண்ட பாண்டோதரீ
லீலாநாடக ஸுத்ர கேலநகரீ விஜ்ஞான தீபாங்குரீ
ஸ்ரீ விச்வேச மந: ப்ரஸாதனகரீ காசீபுராதீச்வரீ
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

ஆதிக்ஷ¡ந்தஸமஸ் தவர்ணநிகரீ*சம்போஸ்த்ரிபாவகரீ
காச்மீரா த்ரரிபுரேச்வரீ த்ரிநயநீ விச்வேச்வரீ சர்வரீ
ஸ்வர்கத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

உர்வீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணீ நீலஸமான குந்தலதரீ நித்யான்ன தானேச்வரீ
ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசீபுராதீச்வரி
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷ¡யணீ ஸுந்தரீ
வாமா ஸ்வாது பயோதாரா ப்ரிய ரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ
 பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

சந்த்ரார்காநலகோடிகோடிஸத்ருசீ சந்த்ராம்சு பீம்பாதரீ
சந்த்ரார்கா க்னிஸமானகுண்டலதரீ சந்த்ரார்க வர்ணேச்வரீ
மாலாபுஸ்தக பாசஸாங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

க்ஷத்ர த்ராணகரீ மஹாபயஹரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ
தக்ஷ¡க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ

அன்னபூர்ணே ஸ்தாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ¡ந்தேஹி சபார்வதீ
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:
பாந்த்தவா : சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்

வெற்றி பெறுவோம்!!!!

சனி, 12 மே, 2012

ஸ்கந்த குரு கவசம்

சத்குரு ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அருளிச் செய்த‌து ,ஸ்கந்த குரு கவசம், மிக அரிய பீஜ மந்திரங்களை உள்ளடக்கிய இந்தத் துதியை ஒருமைப் பட்ட மனதோடு பாராயணம் செய்தால், ஆறுமுகப் பெருமானருளால் எல்லா நன்மைகளும் அடையலாம்.

ஸ்கந்த குரு கவசம்

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.

ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம்; குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா
பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்

அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ
என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
ஆறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்
அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்

சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக் கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நம்முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும்
உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமே
உரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகா காத்திடுவீர்; அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாயிருந்தும்
முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நம: வரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத்தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தி உந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் கால பயமில்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடா
அக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றாள்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்ம மய மாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்

பழமுதிர்ச் சோலையில் பரஞ்சோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டாய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
கந்தா சரணம் கந்தா சரணம்
சரண மடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே; சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைத்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே

திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுரு நாதாகேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடிகொண்டு விரட்டிடுவாய்
துக்கங்களனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக்கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தென்னைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுகமானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ
ஞான தண்டபாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்

அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறை வெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமாரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தருளைச் சிவன்மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடைசூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகா கேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில்

கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ்ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே; ஆதிமூலமான குரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்கப் பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலையிருந்தாயோ
திருவாவினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப் புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமோடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகா வென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருகே உலகமப்பா
அருளெல்லாம் முருகன்; அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேகமில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேகமில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா.

சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம்; சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்தமாகி விடு
அழிவற்ற பிரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமுறைகள் திருமறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதைச் சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர்; யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலையகன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்; அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன்; அறுகுபோல் வேறோடிடுவன்
வாழையடி வாழையைப் போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு; கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்தரவுகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும்; இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
                                           
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னில் அவனாகிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்தஜோதியான கந்தன் கந்தகிரியிலிருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம் கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை யோதி தினம் நல்லவரம் பெறுவீரே
ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்று
ஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தின் அட்டமா சித்தி கிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துத்தர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே

கன்னிமார் ஓடையில் நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையும் கைகூடும்
கன்னிமார் ஓடைநீரை கைகளிலே நீ எடுத்துக்
கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால் உன்
சித்தமலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.

திருத்தணி திருப்புகழ் 
ஸ்ரீ அருணகிரிநாதர், திருத்தணித் திருத்தலத்தைப் பற்றிப் பல திருப்புகழ் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்று இதோ!!

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதிராகும் விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் துயர்மூழ்கிக்

கனத்த விசாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறும் கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் பெருமாளே! 

முருகப்பெருமானின் அருள் பெற்று,
வெற்றி பெறுவோம்!!!!!

வெள்ளி, 4 மே, 2012

திருத்தொண்டத்தொகை

'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்றார் தமிழ் மூதாட்டி ஔவை. தொண்டர்தம் புகழ்பாடும் திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டது. நாயன்மார்களது திருநாமங்களனைத்தும் இடம் பெற்ற, இந்நூலை, ஆரூர் இறைவனே, "தில்லை வாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி நாயனார் பாடி முடித்தார். இறைவன் தொண்டர்தம் உள்ளத்துறைபவன். எனவே, சிவனருளை இப்பதிகங்களை ஓதினால் எளிதில் பெறலாம்.
இது பெரியபுராணத்துக்கு முதல் நூலாகக் கருதப்படுகிறது.

திருத்தொண்டத்தொகை

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற் சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.

குழந்தைப் பேறும், இகபர சுகங்களும் வழங்கும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய,

திருவெண்காட்டுப் பதிகம். 

பாடல் எண் : 1 பண் : சீகாமரம்
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே

பாடல் எண் : 2 பண் : சீகாமரம்
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

பாடல் எண் : 3 பண் : சீகாமரம்
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி
எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

பாடல் எண் : 4 பண் : சீகாமரம்
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.

பாடல் எண் : 5 பண் : சீகாமரம்
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.

பாடல் எண் : 6 பண் : சீகாமரம்
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

பாடல் எண் : 7 பண் : சீகாமரம்
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.

பாடல் எண் : 8 பண் : சீகாமரம்
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

பாடல் எண் : 9 பண் : சீகாமரம்
கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே.

பாடல் எண் : 10 பண் : சீகாமரம்
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

பாடல் எண் : 11 பண் : சீகாமரம்
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.

  திருச்சிற்றம்பலம்
இறைவன் திருத்தாள் பணிந்து,

வெற்றி பெறுவோம்!!!!