செவ்வாய், 12 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU...PART 2....மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..2.​



''நாரசிம்ஹவபு: ஸ்ரீமான்' என்று, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே பீஷ்மர் துதிக்கிறார் பகவானை!.. பெரியோர்கள் அருளிய பொருளுரையின்படி, சஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் மிக உயர்ந்த காயத்ரீ மந்திரத்தின் ஸாரம். அதில், ஸ்ரீ நரசிம்மரே துதிக்கப்படுகிறார்!.... நினைத்த பொழுதில், உடனடியாக எடுத்த அவதாரமென்பது, 'ஸ்ரீநரசிம்மாவதார'த்தின் ஏற்றம்!... 

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU.. PART 1...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி...1.



வணக்கம் நண்பர்களே!!...நீண்ட நாள் ஆச்சு சந்திச்சு!!.. நலமா இருக்கீங்கன்னே நினைக்கிறேன்.. 

தமிழ் வாசல் குழுமத்துல, 'விலங்குகள்' ங்கற தலைப்புல வந்த இழையில், விலங்குகள் சம்பந்தப்பட்ட இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்தோம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விலங்கு.., ஆசான் ஜீவ்ஸால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. கீதாம்மா, 'மீன்' பத்தி ரொம்பவே அற்புதமாக எழுதியிருந்தாங்க... எனக்கு 'சிம்மம்' கிடைச்சுது... திரு. தமிழ்த்தேனீ அவர்கள், 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்று தொடங்குமாறு சொல்லியிருந்தார்.. அவ்விதமே தொடங்கிய தொடர் பதிவின் பகுதிகளை இங்கே பகிர்கிறேன்!..