சனி, 22 பிப்ரவரி, 2014

AMMIYE.. ARPUTHAME!...அம்மியே!! அற்புதமே!!..

ஆகவே மக்களே!.. மீண்டும்  ஒரு 'கேப்' விட்டு வந்தே ஆச்சு!..(யாருப்பா அங்க 'நிம்மதியா இருந்தோம்' ங்கறது.. ஸாரி பாஸ்.. நோ வே.. என்ன பண்ணலாம் சொல்லுங்க!!..)

தலைப்பைப் பார்த்ததும், 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து'ன்னல்லாம் எழுதுவேன்னு ஐடியா பண்ணீங்கன்னா அதுக்கும் ஸாரி!.. இது வேற..

சமீபத்துல ஒரு வீட்டு கிரஹப்பிரவேசம் போயிருந்தேன்.. அட்டகாசமா, மாடுலர் கிச்சனெல்லாம் செட் பண்ணி வீடு சூப்பரா இருந்துது!..  வேடிக்கை பாத்துட்டே நின்னேனா!.. அப்படியே கண்ணு ஒரு பொருள விட்டு நகரவேயில்ல.. அது ஒரு அழகான, குட்டி அம்மி..