திங்கள், 26 நவம்பர், 2012

THIRUVILAKKKU AKAVAL....திருவிளக்கு அகவல்

குத்து விளக்கு தெய்வாம்சம் பொருந்தியது. இதன் அடிப்பாகம் பிரம்மா,   நடுப்பகுதி விஷ்ணு, மேற்பகுதி சிவன் ஆகியவர்களின் அம்சமாகும். விளக்கில் ஊற்றும் நெய், திரி, சுடர் ஆகியவை முறையே, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியவர்களின் அம்சமாகும். ஆக, விளக்கை வழிபாடு செய்தால் சகல தேவர்களையும் வழிபாடு செய்த பலன் பெறலாம். ஐந்து முக தீபம் கோயில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைத் தரக் கூடியது. குத்துவிளக்கு பூஜை சகல நன்மைகளையும் தர வல்லது.

திருவிளக்கு அகவல் என்று போற்றப்படும் இந்தத் துதியைப் பெரும்பாலான இல்லங்களில் விளக்கேற்றும் சமயத்தில் பாராயணம் செய்கிறார்கள். அழகு தமிழில் அமைந்துள்ள இந்த அருமையான துதியைப் பாராயணம் செய்து வணங்குபவர்களுக்கு இறையருளால் எல்லா நலமும் கிடைக்கும். திருக்கார்த்திகை தீப தினத்தன்று இந்தத் துதியைப் பாராயணம் செய்து விளக்கேற்றுவது சிறப்பு.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே  ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே  காமாக்ஷித் தாயாரே
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷண‌ங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன் முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
குடும்பக் கொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடம்மா!
குறைகள் தீர்த்திடம்மா!! குடும்பத்தைக் காத்திடம்மா!
கற்பகவல்லித்தாயே வளமெல்லாம் தாருமம்மா!!
சகலகலாவல்லி நீயே! சகல வித்தைகளும் தாருமம்மா!!
அபிராமவல்லியே! அடைக்கலம் நீயே அம்மா!
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

வெற்றி பெறுவோம்!!!

சனி, 24 நவம்பர், 2012

SRI THULASI ASHTOTHRA SATHA NAAMAVALI....ஸ்ரீ துளசி அஷ்டோத்திர சத நாமாவளி

கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் துளசிதேவிக்கும் அன்றைய தினம் திருமணம் நடந்ததாக ஐதீகம். இது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும். 
பிருந்தாவன துளசி விரதம்: பகுதி 1
பிருந்தாவன துளசி விரதம்: பகுதி 2
ஸ்ரீ துளசிக்கு பூஜை செய்ய உதவும் ஸ்ரீ துளசி அஷ்டோத்திர சத நாமாவளி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. துளசிச் செடியின் கீழ் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, பூஜிக்க எல்லா நலன்களும் பெறலாம். 
 1. ஓம் துளஸ்யை நம:
 2. ஓம் பாவந்யை நம:
 3. ஓம் பூஜ்யாயை நம:
 4. ஓம் வ்ருந்தாவநநிவாஸிந்யை நம:
 5. ஓம் ஜ்ஞாநதாத்ர்யை நம:
 6. ஓம் ஜ்ஞாநமய்யை நம:
 7. ஓம் நிர்மலாயை நம:
 8. ஓம் ஸர்வபூஜிதாயை நம:
 9. ஓம் ஸத்யை நம:
 10. ஓம் பதிவ்ரதாயை நம:
 11. ஓம் வ்ருந்தாயை நம:
 12. ஓம் க்ஷீராப்திமதநோத்பவாயை நம:
 13. ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:
 14. ஓம் ரோகஹந்த்ர்யை நம:
 15. ஓம் த்ரிவர்ணாயை நம:
 16. ஓம் ஸர்வகாமதாயை நம:
 17. ஓம் லக்ஷ்மீஸக்யை நம:
 18. ஓம் நித்யஸுத்தாயை நம:
 19. ஓம் ஸுதத்யை நம:
 20. ஓம் பூமிபாவந்யை நம:
 21. ஓம் ஹரித்யாநைகநிரதாயை நம:
 22. ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:
 23. ஓம் பவித்ரரூபிண்யை நம:
 24. ஓம் தந்யாயை நம:
 25. ஓம் ஸுகந்தந்யை நம:
 26. ஓம் அம்ருதோத்பவாயை நம:
 27. ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:
 28. ஓம் துஷ்டாயை நம:
 29. ஓம் ஸுக்தி த்ரிதய ரூபிண்யை நம:
 30. ஓம் தேவ்யை நம: 
 31. ஓம் தேவர்ஷிஸம்ஸ்துத்யாயை நம: 
 32. ஓம் காந்தாயை நம:
 33. ஓம் விஷ்ணுமந: ப்ரியாயை நம:
 34. ஓம் பூதவேதாலபீதிக்ந்யை நம:
 35. ஓம் மஹாபாதகநாஸிந்யை நம:
 36. ஓம் மநோரதப்ரதாயை நம:
 37. ஓம் மேதாயை நம:
 38. ஓம் காந்தாயை நம:
 39. ஓம் விஜயதாயிந்யை நம:
 40. ஓம் ஸங்கசக்ரகதாபத்மதாரிண்யை நம:
 41. ஓம் காமரூபிண்யை நம:
 42. ஓம் அபவர்கப்ரதாயை நம:
 43. ஓம் ஸ்யாமாயை நம:
 44. ஓம் க்ருஸமத்யாயை நம:
 45. ஓம் ஸுகேஸிந்யை நம:
 46. ஓம் வைகுண்டவாஸிந்யை நம:
 47. ஓம் நந்தாயை நம:
 48. ஓம் பிம்போஷ்ட்யை நம:
 49. ஓம் கோகிலஸ்வராயை நம:
 50. ஓம் கபிலாயை நம:
 51. ஓம் நிம்நகாஜந்மபூம்யை நம: 
 52. ஓம் ஆயுஷ்யதாயிந்யை நம:
 53. ஓம் வநரூபாயை நம:
 54. ஓம் துக்கநாஸிந்யை நம:
 55. ஓம் அவிகாராயை நம:
 56. ஓம் சதுர்புஜாயை நம:
 57. ஓம் கருத்மத்வாஹநாயை நம:
 58. ஓம் ஸாந்தாயை நம:
 59. ஓம் தாந்தாயை நம:
 60. ஓம் விக்னநிவாரிண்யை நம:
 61. ஓம் ஸ்ரீவிஷ்ணுமூலிகாயை நம:
 62. ஓம் புஷ்ட்யை நம:
 63. ஓம் த்ரிவர்கபலதாயிந்யை நம:
 64. ஓம் மஹாஸக்த்யை நம:
 65. ஓம் மஹாமாயாயை நம:
 66. ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:
 67. ஓம் ஸுமங்கல்யர்சனப்ரீதாயை நம:
 68. ஓம் ஸெளமங்கல்யவிவர்திந்யை நம:
 69. ஓம் சாதுர்மாஸ்யோத்ஸவாராத்யாயை நம:
 70. ஓம் விஷ்ணுஸாந்நியதாயிந்யை நம:
 71. ஓம் உத்தானத்வாதஸீபூஜ்யாயை நம:
 72. ஓம் ஸர்வதேவப்ரபூஜிதாயை நம:
 73. ஓம் கோபீரதிப்ரதாயை நம:
 74. ஓம் நித்யாயை நம:
 75. ஓம் நிர்குணாயை நம:
 76. ஓம் பார்வதீப்ரியாயை நம:
 77. ஓம் அபம்ருத்யுஹராயை நம:
 78. ஓம் ராதாப்ரியாயை நம:
 79. ஓம் ம்ருகவிலோசநாயை நம:
 80. ஓம் அம்லாநாயை நம:
 81. ஓம் ஹம்ஸகமநாயை நம:
 82. ஓம் கமலாஸநவந்திதாயை நம:
 83. ஓம் பூலோகவாஸிந்யை நம:
 84. ஓம் ஸுத்தாயை நம:
 85. ஓம் ராமக்ருஷ்ணாதிபூஜிதாயை நம:
 86. ஓம் ஸீதாபூஜ்யாயை நம:
 87. ஓம் ராமமன:ப்ரியாயை நம:
 88. ஓம் நந்தநஸம்ஸ்த்திதாயை நம:
 89. ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம:
 90. ஓம் முக்தாயை நம:
 91. ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயிந்யை நம:
 92. ஓம் ப்ராதர்த்ருஸ்யாயை நம:
 93. ஓம் க்வாநிஹந்த்ர்யை நம:
 94. ஓம் வைஷ்ணவ்யை நம:
 95. ஓம் ஸர்வஸித்திதாயை நம:
 96. ஓம் நாராயண்யை நம:
 97. ஓம் ஸந்ததிதாயை நம:
 98. ஓம் மூலம்ருத்தாரிபாவந்யை நம:
 99. ஓம் அஸோகவநிகாஸம்ஸ்த்தாயை நம:
 100. ஓம் ஸீதாத்யாதாயை நம:
 101. ஓம் நிராஸ்ரயாயை நம:
 102. ஓம் கோமதீஸரயூதீரஸோபிதாயை நம:
 103. ஓம் குடிலாலகாயை நம:
 104. ஓம் அபாத்ரபக்ஷ்யபாபக்ந்யை நம:
 105. ஓம் தாநதோயவிஸுத்திதாயை நம:
 106. ஓம் ஸ்ருதிதாரணஸுப்ரீதாயை நம:
 107. ஓம் ஸுபாயை நம:
 108. ஓம் ஸர்வேஷ்டதாயின்யை நம:
துளசி ஸ்தோத்திரம்.

பிருந்தா பிருந்தாவநீ விச்வபூஜிதா விச்வபாவநீ
புஷ்பஸாராநந்தரீ ச துளசி கிருஷ்ணஜீவனீ |
ஏதந் நாமாஷ்டகஞ் சைவ ஸ்தோத்திரம் நாமார்த்த ஸம்யுதம்
ய: படேத்தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோச்வமேத பலம்லபேத் ||

ஸ்ரீ விஷ்ணுவால் துளசியைப் போற்றிச் சொல்லப்பட்ட இந்த எட்டு திருநாமங்களும் மிக மகிமை வாய்ந்தவை. இதைப் பாராயணம் செய்பவர்கள், அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

வெற்றி பெறுவோம்!!!!!

புதன், 21 நவம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்.....அலறல் சத்தங்களின் இல்லம்


ராகங்கள் பதினாறு
ரோகங்கள் பலநூறு
இது நாம் அறிந்த வரலாறு!
நம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
இன்று 
நோய் வந்தால் 
தீரும் 
நாம் சேர்த்துவைத்த செல்வம்!

இதோ
இந்த மருத்துவ வளாகம்
இன்று
வியாபார நிலையம்!

உயிரா
உடலா
தாயா
சேயா
கடைவிரித்து விற்குது இந்த மருத்துவமனை
உறவுகளை
காசிருந்தால் மீட்கலாம் 
இது உண்மையில் வேதனை!

கை போனது
கால் போனது
கரு போனது
உரு போனது
கூடி நிற்குது ரத்தம் கேட்கும் பிரிவில்!

தீக்குளித்தது
பாலியல் களித்தது
காத்துக்கிடக்குது அவசரப் பிரிவில்!

இங்குள்ள பிரசவ அறை
சமயங்களில் 
சவங்களையும் பிரசவிக்கிறது!

இங்கு 
பணம் பத்தும் செய்யும்
பிணம் பிழைத்து எழும்!
நம் சினம் முற்றச் செய்து 
புதுவிதி கொண்டு சுழலும்
இந்த மருத்துவ உலகம்!

ஆண்டி என்றாலும் காசு
அரசன் என்றாலும் காசு
அது இல்லையெனில்
ஆண்டவனே என்றாலும்  தூசு!

பொன் நகை கொடுத்து
போராடுகிறார்
முடிவில் புன்னகையுமின்றி போகிறார்!

"கரணம் தப்பினால் மரணம்"
இது வித்தை.
இங்கு கட்டணம் குறைத்தால் மரணம்
இது என்ன விந்தை?

எம தர்மன் உலாவிடும் முக்கியச்சாலை
இந்த வைத்தியச்சாலை!
எம் தர்மம் பணசக்தி என்பதே 
இன்றைய வைத்திய மூளை!

மற்றவர் நலனை மதித்தால் 
பூக்கும் அழகிய கோலம்!
மற்றவர் பொருளை மதிப்பதால்
இங்கு
ஆவது அலங்கோலம்! 

இன்று
மனுஷனை மனுஷன்
சாப்பிடும் வளாகம்
இந்த
மருத்துவ வளாகம்!
அத்துமீறும் இந்த அதகளம்
மாற
தேவையா அதற்கும் ஒரு ரணகளம்?

நோய் மீட்டு காக்கும் ஈசனே...
நீ 
எம்மைக் காக்கும் இறைவனே
குறை கண்டு சொல்வதால்  
குற்றம் கொள்ள வேண்டாம் 
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே....

-தனுசு-

ஞாயிறு, 18 நவம்பர், 2012

KANDAR KALI VENBA.......கந்தர் கலிவெண்பா
ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் அருளிய 'கந்தர்கலி வெண்பா', முருகப்பெருமானின் பெருமைகள் அனைத்தையும் விரித்துரைக்கும் அற்புத நூலாகும். பரம்பொருளின் ஐந்தொழில்களான, படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை முருகபெருமான் செய்தமை கூறி அவரே பரம்பொருள் என நிறுவுவது. கந்தபுராணப் படனம் முழுமையும் செய்த பலன் தர வல்லது இந்நூல். ஐந்து வயதில், குமரகுருபரஸ்வாமிகளுக்கு செந்தூர் முருகன் பேசும் வல்லமையைத் தர, ஸ்வாமிகள் குகக் கடவுளின் மேல் இயற்றியது இந்நூல்.

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு  

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த  

குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் 
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத  

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாதித் - தாரணியில்

இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் - முந்தும்

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்  

ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து

உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள்

மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பத்து - மந்த்ரமுதல்

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய

கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்

தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம்

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக

ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது

தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக்

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப்

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு

மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்

யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக - ஞானம்

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும் 
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்

துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட

பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தலாகப்

பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த

சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்

புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்

நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி

இளம்பருதி நூறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவம் - உளந்தனில்கண்டு

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த

கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்

பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்

ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்

தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரகம் - சந்ததமும்

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்

எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு

பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் - தன்னிரண்டு

கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய

முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலிதித்து

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன்

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல்

தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனால்

சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்

வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்ந்த மேலோனே - மூவர்

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம்

சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்

தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே - நாறுமலர்க்

கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும்

பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் - தீது அகலா

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை

எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்

இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.


முருகனருளால் 

 நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!!

ஞாயிறு, 11 நவம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்..தீபாவளி!!!!!!
ஒளி வந்தால்
விலகும் இருள்!
தீப ஓளி கண்டால்
நிறையும் அருள்!

இந்த தீபம் 
தெய்வமான ஒருவிழா!
ஒரு பாவம் 
வதமான பெருவிழா!

தீயாய் வந்தது
தீயில் தீய்ந்து போன திருவிழா!
சூரன் எனும் அசுரன்
சாய்ந்து போன ஒளிவிழா!

இந்த 
ஒளிவெள்ளம்
என்றும்
நம் உள்ளத்தில் நிரந்தரமாக
கருப்பு சிவப்பு ஒன்றாக
மனிதன் புனிதன் என்றாக
அதைக் கொண்டாடி
வெடிங்கடா வெடியை
இடியே நடுங்க!
கொளுத்தும் மத்தாப்பும்
அதைப்பார்த்து சிரிக்க. 
-தனுசு-

வெள்ளி, 9 நவம்பர், 2012

GANGASHTAKAM.....கங்காஷ்டகம்


இந்தப் பாரத பூமியின் பெருமைகளுள் ஒன்றான, வற்றாத ஜீவ நதியாக விளங்கும் கங்கையின் பெருமைகளை சொல்லி முடியாது. எவனொருவன், மரணத்தருவாயில் கங்காஜலத்தை ஒரு துளியேனும் அருந்தி உயிர்விடுகிறானோ அவன் மரணமில்லாப்பெருவாழ்வை அடைகிறான். கங்காமாதா, தன்னில் நீராடுபவர் மட்டுமில்லாமல், தன்னை நினைத்துப் பூஜிப்பவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை தருகிறாள். கங்கையின் மகிமைகளை விவரிக்கும் கங்காஷ்டகம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் அருளப்பட்டது. தீபாவளி தினத்தில், கங்காஷ்டகத்தை பாராயணம் செய்வ்தால், கங்காமாதாவின் பரிபூரண அனுக்கிரகம் கிடைத்து, வேண்டுவனவற்றை எல்லாம் பெறலாம்.

பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி |
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி ||

சிவனாரின், ஜடாமுடிமேல், மாலையாக இருக்கும் கங்கையே, உன் அணுவளவு நீரை எவர் பருகுகிறாரோ, ஸ்பரிசிக்கிறாரோ, அவர், சுவர்க்க லோக வாசம் பெறுவர்.

ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ|
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது||

பேரண்டத்தை உடைத்துக் கொண்டும், சிவனாரின், ஜடாமுடியில் சலசலத்துக் கொண்டும், சுவர்க்கத்திலிருந்து கீழே வந்து, மேருவின் குகையின் அருகிலிருக்கும் குன்றிலிருந்து பூமியில் விழுந்து, ஓடி, மானிடர்களின் பாவமூட்டையை விரட்டியடித்து, அதற்குப் பின் சமுத்திரத்தில் கலந்து விடும் புனித கங்கை நம் எல்லோரையும் பரிசுத்தமாக்கட்டும்.

மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி|
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் ||

யானைகளின் துதிக்கைகளும், முதலைகளும் கங்கையின் வேகத்தை கொஞ்சம் தடை செய்கின்றன. சித்த மாதர்கள் குளிக்கும் போது, அவர்கள் நெஞ்சில் அணிந்துகொண்டிருகும் குங்குமம் கரைவதால், கங்கை சற்று மஞ்சள் நிறமுள்ளதாக விளங்குகிறது. அதிகாலை, மாலை வேளைகளில், முனிவர்கள் பூஜைசெய்வதால், தர்ப்பை, பூக்கள் ஆகியவை கரையோரமாக மிதந்து செல்கின்றன. கங்கையில் மூழ்கிக் குளிக்கும் யானைகளின் காதோரம் வழியும் நீர்ப்பெருக்கால், வாசனை நிரம்பியதாகவும், அதனால் வண்டுகள் மொய்க்கும்படியாகவும் விளங்கும் நீரை உடையதாக விளங்குகிறது கங்கை. அத்தகைய கங்கையின் பிரவாகம் நம்மைக் காக்கட்டும்.

ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்|
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் ||

ஆதியில், ஆதிபிதாமஹர் என்று கூறப்படும் பிரம்ம தேவனின் நித்ய கர்மானுஷ்டானங்களுக்கான பாத்திரத்தில் இருக்கும் நீராகவும், அதன் பின், ஆதிசேஷனின் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் பகவான் ஸ்ரீமந் நாராயணனின் பாதத்தில் வசிப்பவளாகவும், அதன்பின், சிவனாரின் ஜடாமுடியின் பூஷணமாகவும் திகழும் ஜஹ்நு மஹரிஷியின் புதல்வியாகிய, பாவங்களைப் போக்கக் கூடிய கங்கை என்னைக் காக்கட்டும்.

சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ |
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ |
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ |
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி ||

கங்கை இமயத்தில் உற்பத்தியாகி, தனது நீரில் நீராடும் மக்களை உய்விக்கிறாள்.  அவர்களின் சம்சார பயத்தை நீக்கி சமுத்திரத்தில் கலக்கிறாள். ஆதி சேஷன் போலும், சிவனாரின் சிரசில் வில்வதளம் போலும் விளங்குகிறாள். அத்தகைய பெருமை வாய்ந்த கங்கை காசியில் ஓடி வருகிறாள்.

குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி |
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: ||

கங்கா மாதா!!, உன் நீரலை ஒருவர் மேல் பட்டு விட்டால், அவருக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. உன் தீர்த்தத்தை சிறுதுளி யேனும் பருகிவிட்டால் அவருக்கு சுவர்க்க வாசம் நிச்சயம். பெருகி ஓடும் உன் பிரவாகத்தில் ஸ்நானம் செய்தவருக்கு தேவேந்திரப் பதவி கூட எளிதாகக் கைகூடும்.

பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி |
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத ||

பகவதி தேவியான கங்கா தேவியே!, மின்னும் அலைகளைக் கொண்டவளே!!, எல்லா பாவங்களையும் அகற்றுபவளே !!, சுவர்க்கத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!!, உன் கரையோரம், உன் தீர்த்தத்தை மட்டும் பருகி, ஸ்ரீ கிருஷ்ணரை ஆராதிக்கிற என் மேல் மனமிரங்கி அருள்வாய்.

மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

தாயே ஜாஹ்னவி!!, சங்கரரோடு இயைந்திருப்பவளே!!, உன் கரையில் தங்கி, தலைமேல் கைகளைக் கூப்பிக் கொண்டு, ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், என் (உடலை விட்டு)பிராணன் பிரயாணம் செய்யும் சமயமும் வரலாம். அந்த நேரத்திலேனும், ஹரியும் ஹரனும் வேறு வேறானவர்கள் அல்லர் என்னும் நிலையான பக்தி எனக்கு உண்டாகட்டும்.

கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி ||

இந்த கங்காஷ்டகத்தை தூய்மையான மனதுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்பவரது பாவ‌மெல்லாம் நீங்கி, அவர்கள் விஷ்ணு லோகத்தை அடைவார்கள்.

வெற்றி பெறுவோம்!!!!

வியாழன், 8 நவம்பர், 2012

KAVASHTAKAM......கவாஷ்டகம்

கோமாதா என்று போற்றித் துதிக்கப்படும், பசுவின் பெருமைகளைக் கூறும் கவாஷ்டகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்ய அனைத்துப் பாவங்களும் அகன்று, நினைத்ததெல்லாம் கைகூடும்.

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை ஸுரபியைச நமோ நம:
கவாம், பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே.

கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீரதாயை தனதாயை புத்திதாயை நமோ நம:

சுபாயைச சுபத்ராயை கோப்ரதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:

பவித்ரரூபாம் பூதாஞ்ச பக்தானாம் ஸர்வகாமதம்
யதா பூதம் ஸர்வம் விசுவம் தாம் தேவீம் சுர பிம்பஜே.

கவார்ச்சனம் மகா புண்ணியம் தேவானுக்கிரக காரகம்
மகா பாப ப்ராயச்சித்தம் புக்தி முக்தி ப்ரதாயகம்.

யஸ்மாத் சரீரேஸான் நித்யம் த்ரிவிம்சத்கோடி தேவதா
ஸாதேனுர்பவ பூஜ்ய நித்யம் ஸ்ரீ கிருஷ்ணஸ்யாஜயா.

தர்மராஜ பிரதிஷ்டாம்ஸ்தி கோ, லக்ஷ்மீ பிரமதாமதா
கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸாந்நித்யம் ஸேவ்ய பிரயத்னதா

கோபிரதிஷ்டா விநாசைவா வியர்த்தா ஸர்வ பிரதிஷ் டிதா
ஸர்வபிரதிஷ்டா மூலம்ஸ்யாத் ரக்ஷணீயா பிரயத்நதா

ஜாத்வாபூஜா ரகஸ்யஞ்ச பக்தி யுக்திச்ச மானவா
யபூஜ யச்சஸுரபி ஸச பூஜ்யோ பவேத்புஜிஹி.

அஷ்டகமிதம் ஸபுண்யம் பக்தியுக்திச்சயப் ப்டேத்
ஸ்ர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா.

வெற்றி பெறுவோம்!!!!!
படம்: நன்றி..கூகுள் படங்கள்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

DIVYA PRABANTHA PAASURA RAAMAYANAM...திவ்யப் பிரபந்த பாசுர இராமாயணம்மானுட வடிவில் திருஅவதாரம் செய்து, மண்ணுலகத்தோரை வாழ்விக்க வந்த அற்புத தெய்வமாம், ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் அவதார மகிமைகளை, எளிய, இனிய பாசுரங்களாகச் சொல்லும், திவ்யப் பிரபந்த பாசுர இராமாயணத்தை இயற்றி நமக்களித்தவர், 'வியாக்கியானச் சக்கரவர்த்தி' பெரியவாச்சான் பிள்ளை அவர்கள். கி.பி.1228ம் ஆண்டு அவதரித்த இவர், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களுக்கு விரிவுரை எழுதியவர். 

சொல்லழகும் பொருளழகும் பொருந்திய இந்தப் பாசுர இராமாயணம், பாராயணம் செய்வதற்கு மிக எளிமையாக இருக்கிறது. இதைப் பக்தியுடன் பாராயணம் செய்ய, இராமாயணம் முழுமையும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.

பால காண்டம்


திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க

அயோத்தியா காண்டம்

கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து

ஆரண்ய காண்டம்

திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து

கிட்கிந்தா காண்டம்

வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப

சுந்தர காண்டம்

சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய

யுத்த காண்டம்


கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!!!

வெற்றி பெறுவோம்!!!