வெள்ளி, 28 செப்டம்பர், 2012

UMA MAHESHWARA STHOTHRAM.....ஸ்ரீ உமாமஹேச்வர ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஆதிசங்கரரால் அருளப்பட்டது இந்த உமாமஹேச்வர ஸ்தோத்திரம். உமாமகேச்வர விரத தினமான, புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று, விரதமிருந்து, சிவபெருமானை பக்தியுடன்  பூஜித்து, இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.  இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்பவர் , ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து முடிவில் சிவலோகமடைவர் என்று பலஸ்ருதி கூறுகிறது. இந்த விரதம் பற்றிய செய்திகளை அறிய இங்கு சொடுக்கவும்.

1.நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

இளம் வயதினராக, ஒருவரோடு ஒருவர் பரஸ்பரம் இணைந்து, சிவசக்தி ஸ்வரூபராகவும், மலைமகளோடும், வ்ருஷப கொடியோடும் அருட்காட்சி தந்தருளும் சங்கரர், பார்வதிதேவி இருவருக்கும் நமஸ்காரம்.

2.நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

சிவனும் சிவையும், (தாம் இருவரும்)  இணைதலாகிய‌  இனிய விழா கண்டும், தம்மை நமஸ்கரித்த பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தும்,  ஸ்ரீ நாராயணன் விரும்பி அர்ச்சிக்கும் பாதுகைகளைக் கொண்டும் விளங்கும் ஸ்ரீ சங்கரர், பார்வதி தேவிக்கு எங்கள் நமஸ்காரம்.

3.நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவர்களும்,, பிரம்மா, விஷ்ணு தேவேந்திரன் முதலியவர்களால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி சந்தனம் முதலியவை தரித்தவரகளுமான, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதிதேவிக்கும் நமஸ்காரம்.

4. நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

இந்த ஜகத்தையே காத்தருளும் லோக நாயகனும் நாயகியும் ஆனவர்களாயும், வெற்றித்திருவுருவாய் விளங்குபவர்களாயும், இந்திராதி தேவர்களால் போற்றப்படுகிறவர்களாயும் விளங்குகிற ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

5. நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

பிறவிப்பிணிக்கு அருமருந்தானவர்களாயும்   'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தாகிய கூண்டில், (கிளிகளாக) விளையாடுபவர்களாயும், இவ்வுலகனைத்தையும் படைத்தும் காத்தும் பிரளய காலத்தில் ஒடுக்கியும் அருளும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

6.நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மிக சுந்தரமான தோற்றமுடைய சிவனாரும், சிவையாகிய சக்தியும், மிகவும் அத்யந்தமாக, தமது உள்ளத்தாமரைகளால் இணைந்து இருக்கிறார்கள். இவ்வுலகனைத்துக்கும் நன்மை செய்பவர்களாய் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதிக்கும் நமஸ்காரம்.
7.நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

கலிதோஷம் நீக்குபவ‌ராயும்,  மங்கலமான‌ சரீரம் கொண்டவராயும், கைலாஸத்தில் வாசம் செய்யும் இறைவருமான‌  ஸ்ரீசங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

8.நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

(மும்)மலங்களைப்  நீக்குபவரும், இவ்வுலகனைத்திலும் உயர்ந்தவரும், உள்ளார்ந்த தியானத்தில் தேக்கப்பட்டவருமாயும் இருக்கிற ஸ்ரீ சங்கரருக்கு, பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.

9.நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

பௌர்ணமி நிலவு போன்ற திருமுகத்தாமரைகளுடனும், சூர்ய. சந்திர, அக்னியாகிய முக்கண்களுடனும்,  தேரை வாகனமாகக் கொண்டு செல்பவர்களான, ஸ்ரீசங்கரருக்கும் பார்வதிதேவியருக்கும் நமஸ்காரம்.

10.நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

ஜடாமுடி அணிந்தும், மூப்பு, இறப்பு முதலியவை இல்லாதவராயும், விஷ்ணு, பிரம்மாதி தேவர்களால் பூஜிக்கபடுபவராயும் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

11.நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

முக்கண்கள் உடையவராயும்,   வில்வ தளம், மல்லிகை மாலை இவற்றை தரித்தவராயும்,  சோபை, சாந்தம் முதலியவற்றின் நாயகராயும் மிளிர்கின்ற ஸ்ரீசங்கரருக்கும், பார்வதிதேவிக்கும்  நமஸ்காரம்.

12.நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

'பசு' எனப்படுகின்ற,  ஜீவாத்மாக்களைப் பாதுகாப்பவராயும், இவ்வுலகனைத்தையும் காப்பதையே எப்போதும், மனத்தில் வைத்தவராயும், அனைத்து தேவாசுர கணங்களால் போற்றப்படுபவராயும் இருக்கின்ற, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.

13.ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!!

பன்னிரண்டு பத்யங்களைக் கொண்ட இந்த ஸ்லோகத்தை அனுதினமும், பக்தியுடன், மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்பவர், ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து, நூறாண்டுகள் வாழ்ந்து முடிவில், சிவலோகப் ப்ராப்தி அடைவர்.

வெற்றி பெறுவோம்!!!!!

புதன், 26 செப்டம்பர், 2012

தாமரை


தாமரைப்பூவே
வையமும் வானமும்
கை வண‌ங்கும் அழகே!
நீயும்
நிலவும் ஒரினமா?

சூரியனும்
சந்திரனும்
ஒரு சேர தாலாட்ட
நீர் நிலையின் கோயிலென
சரஸ்வதி அமரும் பூவே...

வாலிபர்களை
வளைத்து வழியவைப்பதும்
கன்னியரே
உன்னை பறிக்க துடிப்பதும்
உன் அழகுக்கு சாட்சி!

நீ
குடியிருக்கும் குளத்தில்
அல்லி உன்னைப்பார்த்து
கோபம் கொள்கிறதோ!
பின் ஏன் சிவக்கிறது?
 தவளையும்
நீர்ப்பாம்பும்
மல்யுத்தம் செய்வது
உன்னை திருமணம் செய்யவா?

நண்டும்
கெண்டை மீனும்
நடனமாடுவது உன்னை கவரவா?

தும்பிகள்
உன்னை சுற்றி வருவது
பிரியா வரம் கேட்கவா?
நீ
பூத்ததால்
அந்த தடாகமும்
பெருமையோடு சிரிப்பதுதான் அலையா?இத்தனை பாராட்டு சூழ
சிரிக்கும் பூவே
உன்னை
நானும் விரும்புவதில் தவறென்ன?

உன்னுடன்
சொல்லளந்து ஸ்நேகம் கொள்ள வந்தேன்
சம்மதமா?

-தனுசு-


வெற்றி பெறுவோம்!!!

வியாழன், 20 செப்டம்பர், 2012

SAPTHA RISHI ASHTOTHRA SATHA NAAMAAVALI .. சப்தரிஷி அஷ்டோத்திர சத நாமாவளி

விநாயக சதுர்த்தி தினத்துக்கு மறுநாள் வரும் பஞ்சமி 'ரிஷி பஞ்சமி' என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது. ஸப்த ரிஷிகளான ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி ஆகியோரைத் துதிக்கும் இந்த விரதம் பெண்களால் செய்யப்படுவது. இவ்விரத தினத்தன்று சப்தரிஷிகளைப் பூஜிக்க உகந்த 'சப்தரிஷி அஷ்டோத்திர சத நாமாவளி'யைக் கீழே கொடுத்திருக்கிறேன். இவ்விரதம் பற்றி மேலும் விவரங்கள் அறிய இங்கு சொடுக்கவும்.
 1. ஓம் ப்ரஹ்ம ரிஷிப்யோ நம:
 2. ஓம் வேதவித்ப்யோ நம:
 3. ஓம் தபஸ்விப்யோ நம:
 4. ஓம் மஹாத்மப்யோ நம:
 5. ஓம் மான்யேப்யோ நம:
 6. ஓம் ப்ரஹ்மச்ர்யரதேப்யோ நம:
 7. ஓம் ஸித்தேப்யோ நம:
 8. ஓம் கர்மடேப்யோ நம:
 9. ஓம் யோகிப்யோ நம:
 10. ஓம் அக்னிஹோத்ர பராயணேப்யோ நம:
 11. ஓம் ஸத்யவ்ரதேப்யோ நம:
 12. ஓம் தர்மாத்மப்யோ நம:
 13. ஓம் நியதாஸுப்யோ நம:
 14. ஓம் ப்ரஹ்மண்யேப்யோ நம:
 15. ஓம் ப்ரஹ்மாஸ்த்ர வித்ப்யோ நம:
 16. ஓம் காயத்ரீ ஸித்தேப்யோ நம:
 17. ஓம் ஸாவீத்ரீ ஸித்தேப்யோ நம:
 18. ஓம் ஸரஸ்வதீ ஸித்தேப்யோ நம:
 19. ஓம் யஜமானப்யோ நம:
 20. ஓம் யாஜகேப்யோ நம:
 21. ஓம் ரித்விக்ப்யோ நம:
 22. ஓம் அத்வர்யுப்யோ நம:
 23. ஓம் யஜ்விப்யோ நம:
 24. ஓம் யஜ்ஞதீக்ஷிதேப்யோ நம:
 25. ஓம் பூதேப்யோ நம:
 26. ஓம் புராதனேப்யோ நம:
 27. ஓம் ஸ்ருஷ்டிகர்த்ருப்யோ நம:
 28. ஓம் ஸ்திதி கர்த்ருப்யோ நம:
 29. ஓம் லய கர்த்ருப்யோ நம:
 30. ஓம் ஜப கர்த்ருப்யோ நம:
 31. ஓம் ப்ரஹ்ம தண்ட தரேப்யோ நம:
 32. ஓம் ப்ரஹ்மசீ'ர்ஷ வித்ப்யோ நம:
 33. ஓம் ப்ரதி ஹர்த்ருப்யோ நம:
 34. ஓம் உத்காத்ருப்யோ நம:
 35. ஓம் தர்மப்ரவர்த்தகேப்யோ நம:
 36. ஓம் ஆசார ப்ரவர்த்த கேப்யோ நம:
 37. ஓம் ஸம்ப்ரதாய ப்ரவர்த்கேப்யோ நம:
 38. ஓம் அனுசா' ஸித்ருப்யோ நம:
 39. ஓம் வேதவேதாந்த பாரகேப்யோ நம:
 40. ஓம் வேதாங்க ப்ரசாரகேப்யோ நம:
 41. ஓம் லோக சி'க்ஷகேப்யோ நம:
 42. ஓம் சா'பானுக்ரஹ ச'க்தேப்யோ நம:
 43. ஓம் ஸ்வதந்த்ர ச'க்திமத்ப்யோ நம:
 44. ஓம் ஸ்வாதீன சித்தேப்யோ நம:
 45. ஓம் ஸ்வரூப ஸுகேப்யோ நம:
 46. ஓம் ப்ரவ்ருத்திதர்ம பாலகேப்யோ நம:
 47. ஓம் நிவ்ருத்திதர்ம கர்சி'ப்யோ நம:
 48. ஓம் பகவத் ப்ரஸாதிப்யோ நம:
 49. ஓம் தேவ குருப்யோ நம:
 50. ஓம் லோக குருப்யோ நம:
 51. ஓம் ஸர்வ வந்த்யேப்யோ நம:
 52. ஓம் ஸர்வ பூஜ்யேப்யோ நம:
 53. ஓம் க்ருஹிப்யோ நம:
 54. ஓம் ஸூத்ரக்ருத்ப்யோ நம:
 55. ஓம் பாஷ்யக்ருத்ப்யோ நம:
 56. ஓம் மஹிமாஸித்தேப்யோ நம:
 57. ஓம் ஜ்ஞானஸித்தேப்யோ நம:
 58. ஓம் நிர்துஷ்டேப்யோ நம:
 59. ஓம் ச'மதனேப்யோ நம:
 60. ஓம் தபோ தனேப்யோ நம:
 61. ஓம் ஹோத்ருப்யோ நம:
 62. ஓம் ப்ரஸ்தோத்ருப்யோ நம:
 63. ஓம் அணிமாஸித்தேப்யோ நம:
 64. ஓம் ஜீவன் முக்தேப்யோ நம:
 65. ஓம் சி'வபூஜா ரதேப்யோ நம:
 66. ஓம் வ்ரதிப்யோ நம:
 67. ஓம் முனிமுக்யேப்யோ நம:
 68. ஓம் ஜிதேந்த்ரியேப்யோ நம:
 69. ஓம் சா'ந்தேப்யோ நம:
 70. ஓம் தாந்தேப்யோ நம:
 71. ஓம் திதிக்ஷூப்யோ நம:
 72. ஓம் உபரதேப்யோ நம:
 73. ஓம் ச்'ரத்தாளுப்யோ நம:
 74. ஓம் விஷ்ணு பக்தேப்யோ நம:
 75. ஓம் விவேகிப்யோ நம:
 76. ஓம் விஜ்ஞேப்யோ நம:
 77. ஓம் ப்ரஹ்மிஷ்டேப்யோ நம:
 78. ஓம் பகவத்ப்யோ நம:
 79. ஓம் பஸ்ம தாரிப்யோ நம:
 80. ஓம் ருத்ராக்ஷ தாரிப்யோ நம:
 81. ஓம் ஸ்நாயிப்யோ நம:
 82. ஓம் தீர்த்தேப்யோ நம:
 83. ஓம் சு'த்தேப்யோ நம:
 84. ஓம் ஆஸ்திகேப்யோ நம:
 85. ஓம் விப்ரேப்யோ நம:
 86. ஓம் த்விஜேப்யோ நம:
 87. ஓம் ப்ரஹ்மப்யோ நம:
 88. ஓம் உபவீதிப்யோ நம:
 89. ஓம் மேதாவிப்யோ நம:
 90. ஓம் பவித்ர பாணிப்யோ நம:
 91. ஓம் தபச்' ச'க்தேப்யோ நம:
 92. ஓம் மந்த்ரமூர்த்திப்யோ நம:
 93. ஓம் அஷ்டாங்க   - யோகிப்யோ நம:
 94. ஓம் வல்கலாஜின - தாரிப்யோ நம:
 95. ஓம் ஸுமுகேப்யோ நம:
 96. ஓம் ப்ரம்ஹ நிஷ்டேப்யோ நம:
 97. ஓம் ஜடிலேப்யோ நம:
 98. ஓம் கமண்டலுதாரிப்யோ நம:
 99. ஓம் ஸபத்னீகேப்யோ நம:
 100. ஓம் ஸாங்கேப்யோ நம:
 101. ஓம் ஸம்ஸ்ருதேப்யோ நம:
 102. ஓம் ஸத்க்ருதேப்யோ நம:
 103. ஓம் ஸுக்ருதிப்யோ நம:
 104. ஓம் வேதவேத்யேப்யோ நம:
 105. ஓம் ஸ்ம்ருதி கர்த்ருப்யோ நம:
 106. ஓம் ஸ்ரீ கச்'யபாதி ஸர்வ மஹிர்ஷிப்யோ நம:
 107. ஓம் அருந்தத்யாதி ஸர்வரிஷி பத்னீப்யோ நம:
 108. ஓம் அருந்ததீ ஸஹித கச்'யபாதி ஸப்தரிஷிப்யோ நம:| நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸ‌மர்ப்பயாமி||

சப்த ரிஷிகளைப் பூஜித்து 

வெற்றி பெறுவோம்!!!!

திங்கள், 17 செப்டம்பர், 2012

SRI VINAYAKAR ASHTOTHRA SATHA NAAMAAVALI....ஸ்ரீ விநாயகர் அஷ்டோத்திர சத நாமாவளி


விநாயக சதுர்த்தி தினத்தன்று விநாயகரை அர்ச்சிக்க உகந்த ஸ்ரீ விநாயக அஷ்டோத்திர சத நாமாவளியை கீழே கொடுத்திருக்கிறேன். மலர்கள், மற்றும் அருகம்புல்லால் இந்த நாமாவளியைக் கூறி, ஸ்ரீ விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.

ஓம் விநாயகாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கௌரீ புத்ராய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
ஓம் அவ்யயாய நம;
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
ஓம் இந்த்ர ஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ச'ர்வ த‌நயாய நம:
ஓம் ச'ர்வரீப்ரியாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம:
ஓம் அநேகார்ச்சிதாய நம;
ஓம் சி'வாய நம:
ஓம் சு'த்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சா'ந்தாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முநிஸ்துத்யாய நம:
ஓம் பக்தவிக்நவிநாச'நாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர் பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் ச'க்திஸம்யுதாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சூ'ர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பிரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம:
ஓம் காமிநே நம:
ஓம் ஸோம ஸூர்யாக்நிலோசநாய நம:
ஓம் பாசா'ங்குச'தராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
ஓம் பீஜபூர பலாஸக்தாய நம:
ஓம் வரதாய நம:
ஓம் சா'ச்'வதாய நம:
ஓம் க்ருதிநே நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் கதிநே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷூசாபத்ருதே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரிபேத்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாச'நாய நம:
ஓம் சந்த்ர சூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம:
ஓம் தீராய நம:
ஓம் வாகீசா'ய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வப்ரியாய நம;
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம:
ஓம் அத்புத மூர்த்திமதே நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் ஆச்'ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் ஸெளம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் சா'ந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம:
ஓம் ஸ்ரீகண்டாய நம:
ஓம் விபுதேச்'வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம:   
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம: 
ஓம் சை'லேந்த்ரநுஜோத்ஸங்க  
  கேலநோத்ஸுகமாநஸாய நம:
ஓம் ஸ்வலாவண்ய ஸுதாஸார‌
  ஜிதமந்மத விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயிநே நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம:
ஓம் துஷ்டாய நம:
ஓம் பிரஸந்நாத்மநே நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம:

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.


ஸ்ரீ விநாயகரை வணங்கி

வெற்றி பெறுவோம்!!!!


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

KAARIYA SIDDHI MAALAI....காரிய சித்தி மாலை

நினைத்த காரியங்கள் நிறைந்த வெற்றி பெற, காஸ்யப முனிவர் அருளி, கச்சியப்பர் மொழி பெயர்த்த, காரிய சித்தி மாலையைப் பாராயணம் செய்தால் விநாயகப் பெருமான் அருளால், எண்ணிய யாவையும் திண்ணமாக நடக்கக் காணலாம். மூன்று தினங்கள், மூன்று சந்தி வேளைகளிலும்,(காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி) பக்தியுடன் பாராயணம் செய்ய, நினைத்த காரியங்கள் நடப்பது உறுதி என நூற்பயன் கூறுகிறது.

பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

வெற்றி பெறுவோம்!!!!வெள்ளி, 14 செப்டம்பர், 2012

SRI GOWRI ASHTOTHRA SATHA NAAMAAVALI ...ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி

கௌரி பூஜை தினத்தன்று சகல நலமும் வளமும் தரும் கௌரி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சித்தல் சிறப்பு. மலர்களாலும், குங்கும,அட்சதையாலும் அர்ச்சிக்கலாம். நாமாவளிகளின் ஆரம்பத்தில் ஓம் என்றும் முடிவில் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்.
 1. ஓம் கௌர்யை நம:
 2.  "   கணேசஜனன்யை
 3.  "  கிரிராஜ தநூபவாயை
 4.  "  குஹாம்பிகாயை
 5.  "  ஜகன் மாத்ரே
 6.  "  கங்காதர குடும்பின்யை
 7. "  வீரபத்ர ப்ரஸூவே                                
 8.  "  விச்'வ வியாபின்யை
 9.  "  விச்வ ரூபிண்யை
 10.  "  அஷ்ட மூர்த்யாத்மிகாயை
 11.  "  கஷ்டதாரித்ரிய ச'மந்யை
 12.  "  சி'வாயை
 13.  "  சா'ம்பவ்யை
 14.  "  ச'ங்கர்யை
 15.  "  பாலாயை
 16.  "  பவான்யை
 17.  "  பத்ரதாயின்யை
 18. " மாங்கல்யதாயின்யை
 19. " ஸர்வ மங்களாயை
 20. " மஞ்ஜு பாஷிண்யை
 21. " மஹேச்'வர்யை
 22. " மஹாமாயாயை
 23. " மந்த்ராராத்யாயை
 24. " மஹா பாலாயை
 25. " ஹேமாத்ரிஜாயை
 26. " ஹேமவத்யை
 27. " பார்வத்யை
 28. " பாபநாசி'ன்யை
 29. " நாராயணாம்ச'ஜாயை
 30. " நித்யாயை
 31. " நிரீசா'யை
 32. " நிர்மலாயை
 33. " அம்பிகாயை
 34. " ம்ருடான்யை
 35. " முனிஸம்ஸேவ்யாயை
 36. " மாநிந்யை
 37. " மேனகாத்மஜாயை
 38. " குமார்யை
 39. " கன்யகாயை
 40. " துர்காயை             
 41. " கலிதோஷ நிஷூதின்யை
 42. " காத்யாயின்யை
 43. " க்ருபா பூர்ணாயை
 44. " கல்யாண்யை
 45. " கமலார்ச்சிதாயை
 46. " ஸத்யை
 47. " ஸர்வமய்யை
 48. " ஸரஸ்வத்யை
 49. " அமலாயை
 50. " அமரஸம்ஸேவ்யாயை
 51. " அன்னபூர்ணாயை
 52. " அம்ருதேச்வர்யை
 53. " அகிலாகம ஸம்ஸ்துதாயை
 54. " ஸுகஸச்சித் ஸுதாரஸாயை
 55. " பால்யாராதித பூதிதாயை
 56. " பானுகோடி ஸமத்யுதயே
 57. " ஹிரண்மய்யை
 58. " பராயை
 59. " ஸூக்ஷ்மாயை
 60. " சீ'தாம்சு'க்ருத சே'கராயை
 61. " ஹரித்ராகுங்குமாராத்யாயை
 62. " ஸார்வகால ஸுமங்கல்யை
 63. " ஸர்வ போகப்ரதாயை
 64. " ஸாமசி'காயை
 65. " வேதாந்த லக்ஷணாயை
 66. " கர்மப்ரஹ்ம மய்யை
 67. " காம கலநாயை
 68. " காங்க்ஷிதார்த்த தாயை
 69. " சந்த்ரார்க்காயித தாடங்காயை
 70. " சிதம்பர ச'ரீரிண்யை
 71. " ஸ்ரீ சக்ரவாஸின்யை
 72. " தேவ்யை
 73. " காமேச்'வரபத்ன்யை
 74. " கமலாயை
 75. " மாராரி ப்ரியார்த்தாங்க்யை
 76. " மார்க்கண்டேய வரப்ரதாயை
 77. " புத்ரபௌத்ர வரப்ரதாயை
 78. " புண்யாயை
 79. " புருஷார்த்த ப்ரதாயின்யை
 80. " ஸத்ய தர்மரதாயை
 81. " ஸர்வ ஸாக்ஷிண்யை
 82. " ச'தசா'ங்கரூபிண்யை
 83. " ச்'யாமலாயை       
 84. " பகளாயை
 85. " சண்ட்யை
 86. " மாத்ருகாயை
 87. " பகமாலின்யை
 88. " சூ'லிந்யை
 89. " விரஜாயை
 90. " ஸ்வாஹாயை
 91. " ஸ்வதாயை
 92. " ப்ரத்யங்கிராம்பிகாயை
 93. " ஆர்யாயை
 94. " தாக்ஷாயிண்யை
 95. " தீக்ஷாயை
 96. " ஸர்வ வஸ்தூத்தமோத்தமாயை
 97. " சி'வாபிதாநாயை
 98. " ஸ்ரீ வித்யாயை
 99. " ப்ரணவார்த்த ஸ்வரூபிண்யை
 100. " ஹ்ரீங்காராயை
 101. " நாதரூபாயை
 102. " த்ரிபுராயை
 103. " த்ரிகுணாம்பிகாயை
 104. " ஸுந்தர்யை
 105. " ஸ்வர்ண கௌர்யை
 106. " ஷோடசா'க்ஷர தேவதாயை
 107. " பராத்பராயை
 108. " மஹாத்ரிபுர சுந்தர்யை
 109. " ஸ்ரீ ஸ்வர்ண கௌர்யை நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.    


ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்று

வெற்றி பெறுவோம்!!!.

வியாழன், 13 செப்டம்பர், 2012

குழந்தையும் தெய்வமும் ஒன்றென......

aalosanai.jpeg


எல்லோரையும் போல்
எனக்கும்
மாலை சூடி
மேளம் கொட்டி
ஊரும் உறவும் சூழ
கல்யாணம் நடந்தது!

வறுமையில் திண்டாடியபோதும்
குலம் தழைக்க
கண்ணா
நீ பிறந்தாய்
கொண்டாடினோம்!

இன்று நீ
குழந்தை தொழிலாளி!
"கூடாது" என்று சட்டம் சொல்கிறது!
வறுமை கூடாது என
சட்டம் இயற்ற முடியாத இவர்களால்
நான் எங்கு போய் முட்டிக்கொள்ள?

நீ
கருவறையில் உறங்குகையில்
நான்
விழித்தூக்கம் இழந்தேன் உனக்காக!
இந்த உலகை காக்க வருபவன்!
ஊரை ஆள வருபவன்!
கனவில் மிதந்து
எண்ணியே சுமந்தேன்!

வேர் விட்டிருந்த வறுமையால்
மழையும் வெயிலும் மறந்து
கல்லும் மண்ணும் சுமந்தேன்!
உடல் சோர்ந்து
ஓய்வை தேடிய போதும்
அது எனக்கு
வலியும் வேதனையும் தரவில்லை உன்னால்!

உன்னை உலகுக்கு கொண்டுவர
இந்த
வலுவில்லா தேகம் பட்ட வேதனை கேட்டால்
வலுவான கோட்டையும் அழுதுவிடும்!
மூச்சை உள்ளிழுத்து
முக்கி
பனிக்குடம் உடைத்து
உறையை கிழித்து
குருதி பொங்க
உன் நிலவு முகத்தை
நிலத்தில் விழவைத்தேன்!

அன்று பட்ட வேதனைகள் தாண்டி
இன்று என்
கண் பார்க்கும் வேதனை என் சொல்வேன்?

இதற்குதானா
உன்னை
இந்த உலகுக்கு கொண்டுவந்தேன்!
என் வறுமை என் பிள்ளை வரை தொடருவதா?

இறைவன்
பொதுவானவன் என்றால்
ஏழையை ஏன் படைத்தான்!

"உலகை ஆள்பவன் இறைவன்"
இது மிகப்பொருத்தம்!
ஆனால்
நாட்டை ஆள்பவரெல்லாம் ஊழல்வாதி!
நாளும் சிக்கிச் சிதைவதோ
ஏழைகள் இலாகாதான்.  

ஓரெட்டு பணிசெய்ய‌
அதை
ஐந்தெட்டு பார்த்திருக்க வைத்த
வறுமையின்  உருவமே!
நீ மறைந்தே இரு
கண்ணுக்கு தெரிந்தால்
உன்னை கூறு போட
ஏழைகள் கூட்டம் காத்திருக்கு.

-தனுசு-

 நன்றி படம் உதவி -தினமலர்.

இது தகவல்.

14 வயதுக்கு உட்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் குழந்தைகள்.
இவர்களை எந்த பணியில் அமர்த்தினாலும் அது குற்றமே.

பிச்சை எடுக்க வைத்தல். குழந்தைகள் மீது வன்கொடுமை, துன்புறுத்துதல்,தெருவோரம் அலையும் அனாதை குழந்தைகள் போன்ற அவலங்களைப் பார்க்கும் போது உடனடியாக நாம் தொடர்பு கொள்ள வேண்டியது 1098 என்ற சைல்ட் லைன்.

அன்புடன்
-தனுசு-

வியாழன், 6 செப்டம்பர், 2012

பள்ளித்தோழியே நீ நலமா!
சகோதரர் தனுசுவின் இரு சூழ்நிலைக் கவிதைகளை உங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

என் பள்ளித் தோழியே
நீண்ட நாள் பட்டு
உன் முகத்தைப்பார்த்தேன்!
கண்ணில் ஆனந்த நீர் பட்டு
நெஞ்சில் இனித்தாய் மீண்டும்!
நீ நலமா?

காலமும் நினைவும்
கால்வலி பார்க்காமல்
நம்மை கடந்து ஓடிவிட்டது!

இந்த தொய்வில்லா ஓட்டத்தில்
காலம் நம்மை பிரித்து
நினைவு மறதியானது!

உன் நினைவை
இப்போது மீட்டதும் அதே காலம்!
நான்
அந்த காலத்திற்கே வருகிறேன்!

நமக்கான சொர்க்கமாய் இருந்த
நம் பள்ளிக்காலம்
ஒரு பனி பொழிந்த காலம்!
தளிர் முகமும்
வெளிர் மனமும்
நம் சொந்தமாய் இருந்தது!
கனவுகளும் கதைகளும்
கையில் இனித்தது!
பயணமும் ஒரே பாதையானது!

அந்த பாதையில்
இலக்கு  தெரியாமல்
பொருள் தெரியாமல்
கண் போன போக்கில் கால் போய்
மனம் போன போக்கில் இருந்தோம்!

ஆனால்
காலம் அதை புரியவைத்தது!
இனித்ததெல்லாம் புளித்தது!
அந்த புளிப்பை புரிந்துகொண்ட போது
பாதை மாறி
பயணமே பிரிந்தது!

இனிய தோழியே
நட்பின் மோகன இசையை பாடி சிரித்தோம்!
காலம்
இப்படித்தான் நடத்தும்
என தெரிந்திருந்தால்
பத்தோடு நாமும் சேர்ந்திருக்கலாம்!

சொல்லாமல் வந்த
சோகமும் துக்கமும்
சொல்லாமலேயே போனது!

அன்று
அர்த்தமின்றி ஆயிரம் பேசினோம்
இன்று பேச
ஆயிரம் இருந்தும் அர்த்தமுடன் மௌனம்!

இன்று நினைத்தாலும்
இனிக்கிறது அந்த காலம்!
காலம் கனிந்தால் மீண்டும் சந்திப்போம்!
உன்னை பார்த்தது முதல்
கனன்றுக்கொண்டு இருந்த நினைவுகள்
இங்கே குடிவந்து விட்டது!

உருவத்தில்
நீ
'செந்தாமரை"
பருவத்தில்
நீ
"செல்வி"
நீ
நலமும் வளமும் பெற
நாளும்
என் பிரார்த்தனை உண்டு!

பழைய நினைவுகள் உதித்ததால்
அம்பு பூட்டிய வில்லானது நெஞ்சு!
விரைப்பு வேதனையாவதால்
விடுவிக்கிறேன் வில்லிலிருந்து அம்பை!
இனி
இயல்பு நிலைக்கு தனுசு வரும்!

‍‍-தனுசு-


 ஆராதனையில் ஒரு ஆரோகணம்


காய்ந்து சருகாய்ப்போன
பூ ஒன்று
மீண்டும்
பூத்தது போல் ஒரு உணர்வு
அந்த
முகத்தை பார்த்தவுடன்!

அவளா?

உருவம் மாறி
உருக்குலைந்து
உடைந்து நிற்பது
அவளா?

என்னை
ஆரம்பத்திலேயே மறுத்தாளே
அவளா?

இது
சாத்தியப் படாது என்றாளே
அவளா?

இருமனம் இணையலாம்
இரு மதம் இணையுமா?
என் காதலை மறுத்தாளே
அவளா?

தீவிரமாய் துடிக்கிறாய்!
"தீவிரவாதி எனும்
அடைமொழி இடிக்கிறதே" என்றாளே
அவளா?

என் தொல்லை இனித்து
சுட சுட சங்கு வெளுத்தது!
என்னையும் ஏற்று
என் காதல்
ஆரோகணம் அடைய வைத்தாளே
அவளா?

ஆத்திரக்காரனுக்கு மட்டுமல்ல
அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு!
தவளை மட்டுமல்ல
ஆசையும் தன் வாயால் கெடும்!
என் வாயால் கெட்டு
ஊர் மெல்ல அவலானாளே
அவளா?

அந்த 'செந்தாமரை" மீது
சேர் பட்டு போக
ஊர் மாறி மறைந்தாளே அந்த "செல்வி"
அவளா?

அவளே!
இன்று அவளை
பழைய காதலி என்று
புறம் தள்ள முடியவில்லை!

பஞ்சம் வந்தால்
மஞ்சள் மேனியும் கருகுமா?
வெண்பாலும்
திரிந்து போகுமா?

புகை பட்ட புகைப்படம் போல்
தீ எரித்த திரி போல்
ஒளியில்லா குரலொலியில்
என் முன்னால் முன்னாள் உயிர்!

அவள் கண்ணில் படுவதுபோல்
கவனத்தை ஈர்க்கிறேன்!
அவளே எனக்கு செல்லமாய் சூட்டிய
"அமரா" எனும் பெயரை
உச்சரித்தாள்!
என்னுள் ஆயிரம்
மத்தாப்பூக்கள் பூக்கும் போது....

"என்னம்மா..." என்றொரு குரல்.
மீண்டும்
"அமரா" என  உச்சரித்து
அவள் மகனை
வாடா என அழைத்தாள்
என்னை கவனிக்காமலேயே!

என் மடிக்கணினியில்
கடவுச்சொல்லாக
அவளின் பெயர் இருப்பதைப்போல்
அவள்
மடியில் பிறந்தவனுக்கு
என் பெயர் வைத்திருக்கிறாளே!

ஒரு ஆரோகணம்
அவரோகணம் ஆகாமல்
ஆராதனையில் இருக்கிறது
இரு வேறு நிலையில்!
வாழ்க அந்த ராகம்!

-தனுசு-

வெற்றி பெறுவோம்!!!