வெள்ளி, 20 மார்ச், 2015

IYAKKUNAR SIGARAM, K.BALACHANDERIN THIRAIPADANGALIL PENNIYA SINTHANAIGAL...இயக்குனர் சிகரம், கே.பாலசந்தரின் திரைப்படங்களில் பெண்ணியச் சிந்தனைகள்!..

பிப்ரவரி மாத 'இலக்கியவேல்' இதழில், இயக்குனர் சிகரம், திரு.கே.பாலசந்தர் அவர்களின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில் நான் எழுதி, வெளியான கட்டுரை இது.. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி இங்கு பதிகின்றேன்.. இலக்கியவேல் இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!..

இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமான இடம், இயக்குனர் சிகரத்திற்கு உண்டு.. இவரைப் பற்றி அறியாதோர் இல்லை.. பலப்பல வருடங்களாக, மாறுபட்ட கோணங்களில் பல திரைப்படங்களைக் கொடுத்து வரும் அவரது கலைப்பணியைப் பற்றிய அறிமுகம் தேவைப்படுவோர் வெகு சொற்பமே!...