புதன், 26 செப்டம்பர், 2012

தாமரை


தாமரைப்பூவே
வையமும் வானமும்
கை வண‌ங்கும் அழகே!
நீயும்
நிலவும் ஒரினமா?

சூரியனும்
சந்திரனும்
ஒரு சேர தாலாட்ட
நீர் நிலையின் கோயிலென
சரஸ்வதி அமரும் பூவே...

வாலிபர்களை
வளைத்து வழியவைப்பதும்
கன்னியரே
உன்னை பறிக்க துடிப்பதும்
உன் அழகுக்கு சாட்சி!

நீ
குடியிருக்கும் குளத்தில்
அல்லி உன்னைப்பார்த்து
கோபம் கொள்கிறதோ!
பின் ஏன் சிவக்கிறது?
 தவளையும்
நீர்ப்பாம்பும்
மல்யுத்தம் செய்வது
உன்னை திருமணம் செய்யவா?

நண்டும்
கெண்டை மீனும்
நடனமாடுவது உன்னை கவரவா?

தும்பிகள்
உன்னை சுற்றி வருவது
பிரியா வரம் கேட்கவா?
நீ
பூத்ததால்
அந்த தடாகமும்
பெருமையோடு சிரிப்பதுதான் அலையா?



இத்தனை பாராட்டு சூழ
சிரிக்கும் பூவே
உன்னை
நானும் விரும்புவதில் தவறென்ன?

உன்னுடன்
சொல்லளந்து ஸ்நேகம் கொள்ள வந்தேன்
சம்மதமா?

-தனுசு-


வெற்றி பெறுவோம்!!!

3 கருத்துகள்:

  1. இத்தனை அழகாக பூக்கோலத்துடன் என் கவிதை பிரசுரமானதப் பார்த்து மட்டற்ற மகிழ்சி அடைகிறேன். மிக்க நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. கவிதை இனித்தது கவின்மிகு செந்தாமரைப் பூ ஊரியத் தேனாய்.
    அருமை கவிஞரே! பகிர்விற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஜி ஆலாசியம் said...
    கவிதை இனித்தது கவின்மிகு செந்தாமரைப் பூ ஊரியத் தேனாய்.
    அருமை கவிஞரே! பகிர்விற்கு நன்றிகள்.

    தாங்களின் பாராட்டுகள் அதைவிட இனித்தது நண்பரே, நன்றிகள் ஆலாசியம்.

    பதிலளிநீக்கு