சனி, 26 ஜனவரி, 2013

SRI LALITHA ASHTOTHRA SATHA NAAMAVALI.....ஸ்ரீ லலிதா அஷ்டோத்திர சதநாமாவளி

பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள், செவ்வாய் கிழமைகளில் அம்பிகையின் திருவுருவப்படத்திற்கோ, திருவிளக்கிற்கோ வழிபாடுகள் செய்வது இகபர சுகங்களை அளிக்கும். திருவிளக்கு வழிபாடு செய்வது குறித்து மேலும் விபரங்கள் அறிய, இங்கு சொடுக்கவும். முப்பெருந்தேவியரின் வடிவமான ஸ்ரீ லலிதா தேவியின் அஷ்டோத்திரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையின் அஷ்டோத்திரத்தைச் சொல்லி பூஜிக்க, வேண்டும் பலன்களைப் பெறலாம். 
  1. ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நம:
  2. ஓம் ஹிமாசல மஹாவம்ஸ பாவனாயை நம:
  3. ஓம் ஸங்கரார் தாங்க ஸெளந்தர்ய ஸரீராயை நம:
  4. ஓம் லஸன்மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோ நம:
  5. ஓம் மஹாதிஸய ஸெளந்தர்ய லாவண்யாயை நமோ நம:
  6. ஓம் ஸஸாங்க ஸேகர ப்ராண வல்லபாயை நம:
  7. ஓம் ஸதா பஞ்சதஸாத்மைக்ய ஸ்வரூபாயை நம:
  8. ஓம் வஜ்ரமாணிக்ய கடக கிரீடாயை நமோ நம:
  9. ஓம் கஸ்தூரீ திலகோத்பாஸி நிடிலாயை நமோ நம:
  10. ஓம் பஸ்மரே காஹ்கித லஸம்மஸ்தகாயை நம:
  11. ஓம் விகசாம்போருஹதள லோசனாயை நம:
  12. ஓம் ஸரச்சாம்பேய புஸ்பாப நாஸிகாயை நம:
  13. ஓம் லஸத் காஞ்சத தாடங்க யுகளாயை நம:
  14. ஓம் மணிதர்பண ஸங்காஸ கபோலாயை நம:
  15. ஓம் தாம்பூல பூரித்லஸ்மேர வதனாயை நம:
  16. ஓம் ஸுபக்வ தாடிமீபீஜ ரத்னாயை நம:
  17. ஓம் கம்புபூக ஸமச்சாய கந்தராயை நம:
  18. ஓம் ஸ்தூல முக்தா பலோதார ஸுஹாராயை நம:
  19. ஓம் கீரிஸ பத்தமாங்கல்ய மங்களாயை நம:
  20. ஓம் பத்ம பாஸாங்குஸ லஸத் கராப்ஜாயை நம:
  21. ஓம் பத்மகைரவ மந்தார ஸுமாலின்யை நம:
  22. ஓம் ஸுவர்ண கும்பயுக்மாப ஸுகுசாயை நம:
  23. ஓம் ரமணீய சதுப்பாஹு ஸம்யுக்தாயை நம:
  24. ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நம:
  25. ஓம் ப்ருஹத் ஸெளவர்ண ஸெளந்தர்ய வஸனாயை நம:
  26. ஓம் ப்ரூஹந் நிதம்ப விலஸத் ரஸனாயை நம:
  27. ஓம் ஸெளபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோ நம:
  28. ஓம் திவ்ய பூஷண ஸந்தோஹ ரஞ்ஜிதாயை நமோ நம:
  29. ஓம் பாரிஜாத குணாதிக்ய பதாப்ஜாயை நம:
  30. ஓம ஸூபத்மராக ஸங்காஸ சரணாயை நம:
  31. ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நம:
  32. ஓம் ஸ்ரீ கண்டநேத்ர குமுத சந்த்ரிகாயை நம:
  33. ஓம் ஸசாமர ராமவாணீ வீஜிதாயை நம:
  34. ஓம் பக்தரக்ஷண தாக்ஷிண்ய கடாக்ஷாயை நம:
  35. ஓம் பூதேஸாலிங்கனோத்பூத புள‌காங்க்யை நம:
  36. ஓம் அனங்க ஜனகாபாங்க வீக்ஷணாயை நம:
  37. ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஹிரோரத்ன ரஞ்ஜிதாயை நம:
  38. ஓம் ஸசீமுக்யாமரவது ஸேவிதாயை நம:
  39. ஓம் லீலாகல்பித ப்ரம்ஹாண்ட மண்டலாயை நம:
  40. ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நம:
  41. ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நம:
  42. ஓம் ஸநகாதி ஸமாராத்ய பாதுகாயை நம:
  43. ஓம் தேவர்ஷிபி: ஸ்தூயமான வைபவாயை நம:
  44. ஓம் கலஸோத்பவ துர்வாஸ பூஜிதாயை நம:
  45. ஓம் மத்தேபவக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நம:
  46. ஓம் சக்ரராஜ மஹாயந்த்ர மத்யவர்த்யை நமோ நம:
  47. ஓம் சிதக்னி குண்டஸம்பூத ஸுதேஹாயை நமோ நம:
  48. ஓம் ஸாங்க கண்டஸம்யுக்த மகுடாயை நம:
  49. ஓம் மத்த ஹம்ஸவதூமந்த கமனாயை நம:
  50. ஓம் வந்தாரு ஜனஸந்தோஹ வந்திதாயை நம:
  51. ஓம் அந்தர்முக ஜனானந்த பலதாயை நம:
  52. ஓம் பதிவ்ரதாங்கனாபீஷ்ட பலதாயை நம:
  53. ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நம:
  54. ஓம் நிதாந்த ஸச்சிதானந்த ஸம்யுக்தாயை நம:
  55. ஓம் ஸஹஸ்ர ஸூர்ய ஸம்யுக்த ப்ரகாஸாயை நம:
  56. ஓம் ரத்னசிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நம:
  57. ஓம் ஹானிவ்ருத்தி குணாதிக்ய ரஹிதாயை நம:
  58. ஓம் மஹாபத்மாடவீ மத்ய நிவாஸாயை நம:
  59. ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தீனாம் ஸாக்ஷிபூத்யை நம:
  60. ஓம் மஹாதாபௌக பாபானாம் வினாஸுன்யை நம:
  61. ஓம் துஷ்ட பீதி மஹாபீதி பஞ்ஜனாயை நம:
  62. ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேராகாயை நம:
  63. ஓம் ஸமத ஹ்ருதயாம்போஜ நிலயாயை நம:
  64. ஓம் அனாஹத மஹாபத்ம மந்திராயை நம:
  65. ஓம் ஸஹஸ்ரார ஸ்ரோஜாத வாஸிதாயை நமோ நம:
  66. ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோ நம:
  67. ஓம் வாணீ காயத்ரீ ஸாவித்ரீ ஸாவித்ரீ ஸன்னுதாயை நம:
  68. ஓம் நீலா ரமாபூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நம:
  69. ஓம் லோபமுத்ரர்சித ஸ்ரீமச் சரணாயை நம:
  70. ஓம் ஸஹஸ்ர ரதி ஸெளந்தர்ய ஸரீராயை நம:
  71. ஓம் பாவனாமாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நம:
  72. ஓம் நத ஸம்பூர்ண விஞ்ஞான ஸித்திதாயை நம;
  73. ஓம் த்ரிலோசன க்ருதோலலாஸ பலதாயை நம:
  74. ஓம் ஸ்ரீஸூதாப்தி மணித்வீப மத்யகாயை நம:
  75. ஓம் தக்ஷாத்வர விநிர்ப்பேத ஸாதனாயை நம:
  76. ஓம் ஸ்ரீநாத ஸோதரீபூத ஸோபிதாயை நம:
  77. ஓம் சந்த்ரஸேகர பக்தார்தி பஞ்ஜனாயை நம:
  78. ஓம் ஸர்வோபாதி விநிர்முக்த சைதன்யாயை நம:
  79. ஓம் நாமபாராயணாபீஷ்ட பலதாயை நம:
  80. ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நம:
  81. ஓம் ஸ்ரீ  ஷோடஸாக்ஷரீ மந்தர மத்யகாயை நம:
  82. ஓம் அனாத்யந்த ஸ்வயம்பூத திவ்யமூர்த்யை நம:
  83. ஓம் பக்தஹம்ஸவதீமுக்ய நியோகாயை நமோ நம:
  84. ஓம் மாத்ருமண்டல ஸ்ம்யுக்த லலிதாயை நமோ நம:
  85. ஓம் பண்டதைத்ய மஹாஸத்வ நாஸனாயை நம:
  86. ஓம் க்ருரபண்ட ஸிரச்சேத நிபுணாயை நம:
  87. ஓம் தாத்ரச்யுத ஸுராதீஸ ஸுகதாயை நம:
  88. ஓம் சண்ட முண்ட நிஸும்பாதி கண்டனாயை நம:
  89. ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஸிக்ஷணாயை நம:
  90. ஓம் மஹிஷாஸூர தோர்வீர்ய நிக்ரஹாயை நம:
  91. ஓம் அப்ரகேஸ மஹோத்ஸாஹ காரணாயை நம:
  92. ஓம் மஹேஸ யுக்த நடன தத்பராயை நம:
  93. ஓம் நிஜபர்த்ரு முகாம்போஜ சிந்தனாயை நம:
  94. ஓம் வ்ருஷபத்வஜ விஜ்ஞான தப; ஸித்யை நம:
  95. ஓம் காமக்ரோதாதி ஷட்வர்கே நாஸனாயை நம:
  96. ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராரோக பஞ்ஜனாயை நமோ நம:
  97. ஓம் விதேஹ முக்தி விஞ்ஞான ஸித்திதாயை நமோ நம:
  98. ஓம் ராஜராஜார்சித பத ஸரோஜாயை நம:
  99. ஓம் ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸுதத்வாயை நம:
  100. ஓம் ஸ்ரீ வீரபக்த விக்ஞான நிதாநாயை நம:
  101. ஓம் அஸேஷ துஷ்டதனுஜ ஸூதநாயை நம:
  102. ஓம் ஸாக்ஷாத்ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை நம:
  103. ஓம் ஹயமேதாக்ர ஸலம்பூஜ்ய மஹிமாயை நம:
  104. ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுதா வேஷாட்யாயை நம:
  105. ஓம் ஸுமபாணேக்ஷூ கோதண்ட மண்டிதாயை நம:
  106. ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்களாயை நம:
  107. ஓம் மஹாதேவ ஸமாயுக்த மஹாதேவ்யை நம:
  108. ஓம் சதுர்விம்ஸதி தத்வைக ஸ்வரூபாயை நமோ நம:.
வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

SRI SUBRAMANYA KARAVALAMBASHTAGAM....ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்

Image result for LORD MURUGA IMAGES

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்  முருகப்பெருமானைக் குறித்து செய்யப்பட்ட அற்புதத் துதிகளுள் ஒன்று. ஒவ்வொரு ஸ்லோகமும், 'வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்(வள்ளிதேவியின் நாயகனே, எனக்குக் கைகொடுத்துக்காப்பாயாக)'என்று நிறைகிறது. ஆகவே, மிகப் பெரிய ஆபத்துகளோ, பெருந்துயரோ வரும் காலங்களில் இதைப் பாராயணம் செய்தால், முருகப்பெருமானின் திருவருள், கைகொடுத்து காப்பாற்றி அந்த சூழலில் இருந்து விடுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் துதியைக் காலை நேரத்தில், பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், ஜென்மஜென்மாந்திரங்களில் செய்த பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்று பலஸ்ருதி கூறுகிறது.

1.ஹே ஸ்வாமிநாத கருணாகர தீந பந்தோ
ஸ்ரீ பார்வதிச முக பங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீ சாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

2.தேவாதி தேவஸூத தேவ கணாதிநாத
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாதா
தேவரிஷி நாரத முநீந்த்ர ஸூகீத கீர்த்தே
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

3.நித்யான்னதான நிரதாகில ரோக  ஹாரின்
தஸ்மாத் ப்ராதன பரிபூரித பக்த காம
ச்ருத்யாகம் ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 

4.க்ரெளஞ் சாஸூரேந்த்ர பரிகண்டந சக்தி சூல
பாஸாதி ஸஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ரவாஹ
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

5.தேவாதி தேவரத மண்டல மத்யமேத்ய
தேவேந்த்ர பீட நகராத்ருத சாபஹஸ்த
சூரம் நிஹத்ய அஸூரகோடி ப்ரிர்த்யாமன
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

6.ஹாராதி ரத்ன மணியுக்த கிரீடஹார
கேயூர குண்டல ஸஸத் கவசாபிராம
ஹே ! வீர ! தாரக ஜயாமரப்ருந்த வந்த்ய
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

7.பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை :
பஞ்சாம்ருதை : ப்ரமுதிதேந்த்ர முகைர் முநீந்த்ரே :
பட்டாபிஷிக்த ஹ்ரியுக்த பராஸநாத
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

8.ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத திஷ்ட சித்தம்
ஸிக்த்வாதுமா மவ கலாதர காந்தகாந்த்யா
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

9.ஸூப்ரஹ்மண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தித்விஜோத்தமா :
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸூப்ரம்மண்ய ப்ரஸாதத :
ஸூப்ரம்மண்யாஷ்டகமிதம் ப்ராதருத்தாய ய : படேத் :
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷணாதேவ நச்யதே !

வெற்றி பெறுவோம்!!!!

வெள்ளி, 11 ஜனவரி, 2013

SRI HANUMATH PANCHARATHNAM....ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்

ஸ்ரீராம பக்த சிரோன்மணியான ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழ்பாடும் ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம், ஸ்ரீ ஆதிசங்கர பகவ்த் பாதரால் அருளப்பட்ட மகிமை பொருந்திய துதியாகும். ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருஅவதார தினமான, மார்கழி மாதம், மூல நட்சத்திரத்தன்று,  (இவ்வருடம் 11/1/2013 அன்று வருகிறது) ஸ்ரீராமரையும் ஸ்ரீ ஹனுமானையும் பூஜித்து, இந்த துதியைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர், ஸ்ரீ ஹனுமானின் அருளால், இவ்வுலகில் அனைத்து போக பாக்கியங்களையும் அடைந்து, பின் சாயுஜ்ய நிலையை அருளும் ஸ்ரீ ராம பக்தியையும் அடைவர் என்று பலஸ்ருதி கூறுகிறது. 
ஸ்ரீ ராமஜெயம்.
1.வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
           ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
உலகப் பற்றில்லாதவரும், (ஸ்ரீராமநாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே)ஆனந்தக் கண்ணீர் பெருக, ரோமாஞ்சனம் கொள்ளும் தூய பக்தியுள்ளவரும், ஸீதாபதியான ஸ்ரீராமரின் தூதரும், வாதாத்மஜருமான ஸ்ரீ ஹனுமானைத் தியானம் செய்கிறேன்.
2.தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
  ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
இளஞ்சூர்யனைப் போன்ற சிவந்த முகமுடையவரும், கருணை நிரம்பிய கண்களை உடையவரும்,  சஞ்சீவினி மலையைக் கொணர்ந்து (ஸ்ரீராம ராவண) யுத்தத்தின் போது மூர்ச்சித்து விழுந்தவர்களின் உயிர் நாடியைத் தூண்டிய‌ பெருமையுள்ளவரும், அஞ்சனாதேவியின் பாக்யத்தால் அவதரித்த மகிமை பொருந்தியவருமான  ஸ்ரீ ஹனுமனைத் துதிக்கிறேன்.
3.சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்
  கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
மன்மதனின் பாணத்தை வென்றவரும், மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், சங்கு போன்ற கழுத்தை உடையவரும், சிவந்த உதடுகளை உடையவரும் வாயு புத்ரனுமான ஸ்ரீ ஹனுமனை சரணடைகிறேன்.
4.தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
  தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
 ஸீதாதேவியின் துயரத்தை நீக்கியவரும், ஸ்ரீ ராமரின் வைபவத்தை உலகத்தோர் அனைவரும் அறியும்படி பிரகடனம் செய்தவரும், பத்துதலையுடைய ராவணனின் புகழை கிழித்து எறிந்தவருமான ஸ்ரீ ஹனுமனின் திருவுருவம் என் கண்ணெதிரே ஒளிருகிறது.
5.வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
  தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
வானரர்களின் தலைவரும், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூரியனைப் போன்றவரும்(அல்லி மலர்வதற்கு சந்திரனின் கிரணங்கள் தேவை. சூரியன் இருக்கும் வரை அல்லி மலராது. ஆகவே, இங்கு, ராக்ஷஸர்களை  அல்லிப் பூக்களுக்கும் ஸ்ரீஹனுமானை சூரியனுக்கும் உருவகம் செய்கிறார் ஸ்ரீ பகவத்பாதர்), தீனர்களைக் காக்கும் விரதம் பூண்டவரும், வாயு பகவான் செய்த தவத்தின் பலனாக அவதரித்தவருமான ஸ்ரீ ஹனுமானைக் கண்டடையும் பேறு பெற்றேன்.

6.ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
  சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
வாயுபுத்ரனான ஸ்ரீ ஹனுமானின் பஞ்சரத்ன ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்பவர், இவ்வுலகில் எல்லா போக பாக்கியங்களையும் அனுபவித்து, ஸ்ரீ ராம பக்தி மிக்கவராவார்.


வெற்றி பெறுவோம்!!!

வெள்ளி, 4 ஜனவரி, 2013

தனுசுவின் கவிதைகள்.....அனுபவம் சொன்ன அசரீரி



அதிகாலை நேரம் விடிந்தும்
போர்வையும் விலகவில்லை
என் பார்வையும் திறக்கவில்லை
ஓரக்கதவின் இடைவெளியில்,

"தூங்காதே!
அனுபவிக்க அனுப்பி வைத்தால்
வெட்டியாய் கழிக்கிறாய் பொழுதை...
போ...
போய் அனுபவி
அதுதான் வாழ்க்கை" என்று
ஒலித்தது ஒரு அசரீரி!

எதை அனுபவிக்க?
கேட்டதற்கு
மீண்டும் ஒலித்தது
அசரீரி

பிறப்பை
பிழைப்பை
மழையை
மாலையை
கவிதையை
நடு நிசியை
வாச மல்லியை
கடலை
குளிரை
இளம் தளிரை
நிலவை
மேகத்தை
விளையாட்டை
வேடிக்கையை
ஆட்டத்தை
அன்பை
நட்பை
நேசத்தை
இன்னும்
அடுக்கிகொண்டே போனது
அசரீரி குரல்

இதனை
அனுபவித்து ஆவதென்ன?
பிறந்த பயன் அடைய
ஆண்டவனைக்  காட்டு
அல்லது அவனை அடைய வழி காட்டு என்றேன்,

அதற்கு
இத்தனையும் முழு
ஈடுபாட்டோடு அனுபவி
அதில்
நீ சொன்ன அவனைக்  காணலாம் என்றது
அசரீரி குரல்.
-தனுசு-