திங்கள், 17 டிசம்பர், 2012

THIRUPPALLIYEZHUCHI....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பள்ளியெழுச்சி'


1.போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

2.அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

3.கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

4.இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

5.பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

6.பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

7.அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

8.முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

9.விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

10.புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!

சனி, 8 டிசம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்......என் அம்மாவின் ஆசி



இவள்
உறவுகளில் திருக்குறள்
உணர்வுகளில் மறைபொருள்
இவளை
நினைத்தால் உயிர்க்கும்
அழைத்தால் சிலிர்க்கும்
அவள்
என் அம்மா.

கருவறையில்
நான்
உறக்கம் கலைத்தபோது என்னை
உருக்குலையாமல்
உலகில் அவதரிக்க வைத்தது....

திருவாய் மலர்ந்து
அவளை
உச்சரிக்க முயன்றபோது
உச்சந்தலை முகர்ந்து
இன்னும் பேசத் தந்தது......

பள்ளி சென்ற போது
முதல் புள்ளி வாங்க வைத்தது.....
துள்ளி ஆடிய போது
இவன் கில்லி என்று பெயரானது.....

பட்டம் பெற்றது....
அதனால்
புகழ் பெற்றது.....
பொருள் பெற்றது.....
அதை தந்து
பெயர் பெற்றது....

உடல் நலம்
பெற்று இருப்பது...
விபத்திலிருந்து
என் உயிர் மீட்பது....
வீண் பழியிலிருந்து
எனைக் காப்பது.....

இன்னும்.....

இடி மழைக்கு
சலசலக்காத
காட்டுமரமானது....
எதையும் எதிர்கொள்ள
அலைமீது ஓடும்
கட்டுமரமானது.....

சுமை ஏறும் போதெல்லாம்
சுகம் உணரச் செய்தது
என்னை
ஆலமரமாக்கி
பரவசம் தருவது....

இவை யாவும் எனக்கு
உன் ஆசியின்றி வேறில்லை
என் அம்மா.

-தனுசு-

சனி, 1 டிசம்பர், 2012

THIRUNEETRU PATHIGAM.....திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருநீற்றுப்பதிகம்



மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு 
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு 
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு 
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு 
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு 
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு 
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு 
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு 
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு 
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு 
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் 
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு 
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு 
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு 
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு 
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு 
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு 
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு 
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு 
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு 
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு 
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு 
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு 
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட 
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு 
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு 
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் 
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் 
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

வெற்றி பெறுவோம்!!!
படம் நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 26 நவம்பர், 2012

THIRUVILAKKKU AKAVAL....திருவிளக்கு அகவல்

குத்து விளக்கு தெய்வாம்சம் பொருந்தியது. இதன் அடிப்பாகம் பிரம்மா,   நடுப்பகுதி விஷ்ணு, மேற்பகுதி சிவன் ஆகியவர்களின் அம்சமாகும். விளக்கில் ஊற்றும் நெய், திரி, சுடர் ஆகியவை முறையே, சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகியவர்களின் அம்சமாகும். ஆக, விளக்கை வழிபாடு செய்தால் சகல தேவர்களையும் வழிபாடு செய்த பலன் பெறலாம். ஐந்து முக தீபம் கோயில் கருவறையில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தைத் தரக் கூடியது. குத்துவிளக்கு பூஜை சகல நன்மைகளையும் தர வல்லது.

திருவிளக்கு அகவல் என்று போற்றப்படும் இந்தத் துதியைப் பெரும்பாலான இல்லங்களில் விளக்கேற்றும் சமயத்தில் பாராயணம் செய்கிறார்கள். அழகு தமிழில் அமைந்துள்ள இந்த அருமையான துதியைப் பாராயணம் செய்து வணங்குபவர்களுக்கு இறையருளால் எல்லா நலமும் கிடைக்கும். திருக்கார்த்திகை தீப தினத்தன்று இந்தத் துதியைப் பாராயணம் செய்து விளக்கேற்றுவது சிறப்பு.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
சோதி மணிவிளக்கே  ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே  காமாக்ஷித் தாயாரே
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளக்கு
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷண‌ங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன் தேவி வடிவம் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன் முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணியாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
குடும்பக் கொடி விளக்கே குற்றங்கள் பொறுத்திடம்மா!
குறைகள் தீர்த்திடம்மா!! குடும்பத்தைக் காத்திடம்மா!
கற்பகவல்லித்தாயே வளமெல்லாம் தாருமம்மா!!
சகலகலாவல்லி நீயே! சகல வித்தைகளும் தாருமம்மா!!
அபிராமவல்லியே! அடைக்கலம் நீயே அம்மா!
தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

வெற்றி பெறுவோம்!!!

சனி, 24 நவம்பர், 2012

SRI THULASI ASHTOTHRA SATHA NAAMAVALI....ஸ்ரீ துளசி அஷ்டோத்திர சத நாமாவளி

கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, பிருந்தாவன துவாதசி என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் துளசிதேவிக்கும் அன்றைய தினம் திருமணம் நடந்ததாக ஐதீகம். இது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும். 
பிருந்தாவன துளசி விரதம்: பகுதி 1
பிருந்தாவன துளசி விரதம்: பகுதி 2
ஸ்ரீ துளசிக்கு பூஜை செய்ய உதவும் ஸ்ரீ துளசி அஷ்டோத்திர சத நாமாவளி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. துளசிச் செடியின் கீழ் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, பூஜிக்க எல்லா நலன்களும் பெறலாம். 
  1. ஓம் துளஸ்யை நம:
  2. ஓம் பாவந்யை நம:
  3. ஓம் பூஜ்யாயை நம:
  4. ஓம் வ்ருந்தாவநநிவாஸிந்யை நம:
  5. ஓம் ஜ்ஞாநதாத்ர்யை நம:
  6. ஓம் ஜ்ஞாநமய்யை நம:
  7. ஓம் நிர்மலாயை நம:
  8. ஓம் ஸர்வபூஜிதாயை நம:
  9. ஓம் ஸத்யை நம:
  10. ஓம் பதிவ்ரதாயை நம:
  11. ஓம் வ்ருந்தாயை நம:
  12. ஓம் க்ஷீராப்திமதநோத்பவாயை நம:
  13. ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:
  14. ஓம் ரோகஹந்த்ர்யை நம:
  15. ஓம் த்ரிவர்ணாயை நம:
  16. ஓம் ஸர்வகாமதாயை நம:
  17. ஓம் லக்ஷ்மீஸக்யை நம:
  18. ஓம் நித்யஸுத்தாயை நம:
  19. ஓம் ஸுதத்யை நம:
  20. ஓம் பூமிபாவந்யை நம:
  21. ஓம் ஹரித்யாநைகநிரதாயை நம:
  22. ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:
  23. ஓம் பவித்ரரூபிண்யை நம:
  24. ஓம் தந்யாயை நம:
  25. ஓம் ஸுகந்தந்யை நம:
  26. ஓம் அம்ருதோத்பவாயை நம:
  27. ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:
  28. ஓம் துஷ்டாயை நம:
  29. ஓம் ஸுக்தி த்ரிதய ரூபிண்யை நம:
  30. ஓம் தேவ்யை நம: 
  31. ஓம் தேவர்ஷிஸம்ஸ்துத்யாயை நம: 
  32. ஓம் காந்தாயை நம:
  33. ஓம் விஷ்ணுமந: ப்ரியாயை நம:
  34. ஓம் பூதவேதாலபீதிக்ந்யை நம:
  35. ஓம் மஹாபாதகநாஸிந்யை நம:
  36. ஓம் மநோரதப்ரதாயை நம:
  37. ஓம் மேதாயை நம:
  38. ஓம் காந்தாயை நம:
  39. ஓம் விஜயதாயிந்யை நம:
  40. ஓம் ஸங்கசக்ரகதாபத்மதாரிண்யை நம:
  41. ஓம் காமரூபிண்யை நம:
  42. ஓம் அபவர்கப்ரதாயை நம:
  43. ஓம் ஸ்யாமாயை நம:
  44. ஓம் க்ருஸமத்யாயை நம:
  45. ஓம் ஸுகேஸிந்யை நம:
  46. ஓம் வைகுண்டவாஸிந்யை நம:
  47. ஓம் நந்தாயை நம:
  48. ஓம் பிம்போஷ்ட்யை நம:
  49. ஓம் கோகிலஸ்வராயை நம:
  50. ஓம் கபிலாயை நம:
  51. ஓம் நிம்நகாஜந்மபூம்யை நம: 
  52. ஓம் ஆயுஷ்யதாயிந்யை நம:
  53. ஓம் வநரூபாயை நம:
  54. ஓம் துக்கநாஸிந்யை நம:
  55. ஓம் அவிகாராயை நம:
  56. ஓம் சதுர்புஜாயை நம:
  57. ஓம் கருத்மத்வாஹநாயை நம:
  58. ஓம் ஸாந்தாயை நம:
  59. ஓம் தாந்தாயை நம:
  60. ஓம் விக்னநிவாரிண்யை நம:
  61. ஓம் ஸ்ரீவிஷ்ணுமூலிகாயை நம:
  62. ஓம் புஷ்ட்யை நம:
  63. ஓம் த்ரிவர்கபலதாயிந்யை நம:
  64. ஓம் மஹாஸக்த்யை நம:
  65. ஓம் மஹாமாயாயை நம:
  66. ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:
  67. ஓம் ஸுமங்கல்யர்சனப்ரீதாயை நம:
  68. ஓம் ஸெளமங்கல்யவிவர்திந்யை நம:
  69. ஓம் சாதுர்மாஸ்யோத்ஸவாராத்யாயை நம:
  70. ஓம் விஷ்ணுஸாந்நியதாயிந்யை நம:
  71. ஓம் உத்தானத்வாதஸீபூஜ்யாயை நம:
  72. ஓம் ஸர்வதேவப்ரபூஜிதாயை நம:
  73. ஓம் கோபீரதிப்ரதாயை நம:
  74. ஓம் நித்யாயை நம:
  75. ஓம் நிர்குணாயை நம:
  76. ஓம் பார்வதீப்ரியாயை நம:
  77. ஓம் அபம்ருத்யுஹராயை நம:
  78. ஓம் ராதாப்ரியாயை நம:
  79. ஓம் ம்ருகவிலோசநாயை நம:
  80. ஓம் அம்லாநாயை நம:
  81. ஓம் ஹம்ஸகமநாயை நம:
  82. ஓம் கமலாஸநவந்திதாயை நம:
  83. ஓம் பூலோகவாஸிந்யை நம:
  84. ஓம் ஸுத்தாயை நம:
  85. ஓம் ராமக்ருஷ்ணாதிபூஜிதாயை நம:
  86. ஓம் ஸீதாபூஜ்யாயை நம:
  87. ஓம் ராமமன:ப்ரியாயை நம:
  88. ஓம் நந்தநஸம்ஸ்த்திதாயை நம:
  89. ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம:
  90. ஓம் முக்தாயை நம:
  91. ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயிந்யை நம:
  92. ஓம் ப்ராதர்த்ருஸ்யாயை நம:
  93. ஓம் க்வாநிஹந்த்ர்யை நம:
  94. ஓம் வைஷ்ணவ்யை நம:
  95. ஓம் ஸர்வஸித்திதாயை நம:
  96. ஓம் நாராயண்யை நம:
  97. ஓம் ஸந்ததிதாயை நம:
  98. ஓம் மூலம்ருத்தாரிபாவந்யை நம:
  99. ஓம் அஸோகவநிகாஸம்ஸ்த்தாயை நம:
  100. ஓம் ஸீதாத்யாதாயை நம:
  101. ஓம் நிராஸ்ரயாயை நம:
  102. ஓம் கோமதீஸரயூதீரஸோபிதாயை நம:
  103. ஓம் குடிலாலகாயை நம:
  104. ஓம் அபாத்ரபக்ஷ்யபாபக்ந்யை நம:
  105. ஓம் தாநதோயவிஸுத்திதாயை நம:
  106. ஓம் ஸ்ருதிதாரணஸுப்ரீதாயை நம:
  107. ஓம் ஸுபாயை நம:
  108. ஓம் ஸர்வேஷ்டதாயின்யை நம:
துளசி ஸ்தோத்திரம்.

பிருந்தா பிருந்தாவநீ விச்வபூஜிதா விச்வபாவநீ
புஷ்பஸாராநந்தரீ ச துளசி கிருஷ்ணஜீவனீ |
ஏதந் நாமாஷ்டகஞ் சைவ ஸ்தோத்திரம் நாமார்த்த ஸம்யுதம்
ய: படேத்தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோச்வமேத பலம்லபேத் ||

ஸ்ரீ விஷ்ணுவால் துளசியைப் போற்றிச் சொல்லப்பட்ட இந்த எட்டு திருநாமங்களும் மிக மகிமை வாய்ந்தவை. இதைப் பாராயணம் செய்பவர்கள், அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.

வெற்றி பெறுவோம்!!!!!