புதன், 31 மார்ச், 2021

KANTHARALANGAARAM...SONG 2..கந்தரலங்காரம்.. பாடல் 2.


 பாடல்..2.

  அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்

எழுத்துப் பிழையறக் கற்கின்றி  லீரெரி மூண்டதென்ன

விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்

கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

 

புதன், 10 மார்ச், 2021

KANTHARALANGAARAM.. SONG 1...கந்தரலங்காரம்..பாடல் 1.

     பாடல்..1.


          பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்

சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்

ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

 

திங்கள், 8 மார்ச், 2021

KANTHARALANGAARAM... KAAPPU... கந்தரல‌ங்காரம். ..காப்பு.

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!..

வெகு நாட்களாயிற்று உங்களையெல்லாம் சந்தித்து.. மீண்டும் ஒரு நெடுந்தொடருடன் வந்திருக்கிறேன்!. முருகனருளால்!...

கந்தரலங்காரம்.. ஸ்ரீ அருணகிரிநாதரின் அருட் கொடை... இதற்கு உரை பலரும் எழுதியிருக்கிறார்கள்.. அவர்கள் சொன்னதை விடவும், புதிதாக நான் ஏதும் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எனினும், முருகனருளை முன்னிட்டுத் தொடங்குகிறேன்...என் செயலாவது யாதொன்றும் இல்லை.. கந்தனே சரண்!.. இதன் மூலம் கந்தனை சிறிது நேரம் இணைந்தே தியானிக்கலாம் வாருங்கள்!...

திங்கள், 21 ஜனவரி, 2019

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU... PART 4..மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு!.. பகுதி..4.

Image result for goddess simhavahini


சிம்மவாஹினி!!!!!!!...

சிம்ம வாஹனம் என்றாலே, ஸ்ரீதுர்க்கை, அதில் ஆரோகணித்திருக்கும் திருவுருவமே அன்பர் நெஞ்சத்துள் தோன்றும்...

ஆயிரம் வடிவும், ஆயிரம் பெயரும் கூரிய விழிகள் பொழியும் கருணையும் பிறவி வேரறுத்திடும் எழிலும் திறமும் தாளிணை சிறப்பும் கூறிடல் இயலுமோ??!..

சனி, 31 டிசம்பர், 2016

HAPPY NEW YEAR 2017!!!.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES
Image result for HAPPY NEW YEAR 2017 WITH GOD IMAGES

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!..  2017ம் ஆண்டில், எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழவும், இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்!.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்களுக்கு நன்றி....கூகுள் படங்கள்.