பாடலை, கீழ்க்கண்ட லிங்கில், உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு மகிழலாம். மத்யமாவதி ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்..
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..(முத்து)
அனுபல்லவி:
இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள் தீர்ந்திடவே எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)
சரணம்;
1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும் நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும் வாழ வேண்டும் தேவியரே!! (முத்து)
2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள் பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!! (முத்து)
இந்த வருட நவராத்திரி கவிதைகள் இனிதே நிறைவுற்றன..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்..
