சனி, 16 ஜூன், 2012

மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதி

மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதி

அலைமகளைப் போற்றி, மஹாகவி பாரதியார் எழுதிய அற்புதப் பாடல் இது.


பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள்
நாற்கரத் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியர் பசுமையை விரும்பிடுவாள்


நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தலிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தன் தோளிலும் - உடல்
வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்


பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிவிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.


மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் - உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.


வெற்றி கொள் படையினிலும் -பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் - நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம்
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.


வெற்றி பெறுவோம்!!!!

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு, சகோதரி..... உங்கள் நல்ல பணி சிறக்கட்டும்......

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு, சகோதரி..... உங்கள் நல்ல பணி சிறக்கட்டும்......

    பதிலளிநீக்கு
  3. தங்களின் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு