வெள்ளி, 20 ஜூலை, 2012

இது என்ன மழை?
சூடான வெய்யில்
சுதி இறங்கி
வதங்கி
மறைந்தது.

நீலவானமும்
கருமையில் நிறைந்து
குளுமையை லேசாய் தெளித்தது.

பஞ்சு துகள்கள்
பறந்து வருகிறதோ
எனும் எண்ண‌ம்
நெஞ்சில் வரும்முன்
வானம் உடைந்து
நீர்க்கல்லாகி விழுகிறது.

தோட்டத்தில் தொங்கிய
துணிகளை அள்ள
வீட்டு அம்மாக்கள்
சிட்டாய் பறக்கிறார்கள்.

சாலையோர ஜனங்கள்
என்னவென்று
எட்டிப்பார்க்கும் முன்
ஈரமாகும் உடைகள்.

நடைபாதை கடைகள்
நிமிர்ந்து பார்த்து
நாட்டியமாடி
நாலுகால் பாய்ச்சலில் மறைகிறது.

தெருவோர மரங்களும்
தேனீர் கடைகளும்
தற்காலிக மழையின்
புகலிடமாக மாறியது.

மின்சாரம் பொசுங்கியது
சாலையில் திடீர் வெள்ளம்
குடையில்லா பாதசாரி
கோபத்தில் மக்கள்.

மழையில் ஈரமான
மண்ணின் வாசத்தை
முகர்ந்தபடி
என்
வீட்டு வாசப்படியில்
அமர்ந்து
இந்த காட்சிகளை ரசிக்கிறேன்.

வெளியில் எங்கும் போகாததால்
இந்த
திடீர் மழையில் சிக்காமல்
நான் மட்டும் தப்பிதேன்.

நீங்கள்
எப்படி இருக்கிறீர்கள்?

-தனுசு-

3 கருத்துகள்:

 1. எனது கற்பனையில் வந்தது போலவே அத்தனை பொருத்தமான ஒரு படத்துடன் எனது கவிதையை வெளியிட்ட சகோதரி பார்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. கவிஞரின் பார்வையில் மழை நன்றாகவே பெய்திருக்கிறது.
  ஹும்!இந்தவருடம் தென் மேற்குப்பருவ மழை பெய்வது மிகவும் தள்ளிப் போய்விட்டது ஜூன் 12ல் திறக்க வேண்டிய மேட்டூர் இன்னமும் திறக்கப்படவில்லை.

  கவிஞர் சற்றே மழை மேகங்களை தமிழ் நாட்டூக்குக்கடத்திவந்தால் தேவலை.

  பதிலளிநீக்கு
 3. kmr.krishnan said...கவிஞர் சற்றே மழை மேகங்களை தமிழ் நாட்டூக்குக்கடத்திவந்தால் தேவலை.////

  நாம் காவிரிக்கு கர்னாடகமிடமும், முல்லை-பெரியாருக்கு கேரளவிடமும் போக வேண்டிய அவசியம் இருக்காதுதான் .

  ரசித்து பின்னூட்டமிட்டதற்கு மனமார்ந்த
  நன்றி கிருஷ்னன் சார்,

  பதிலளிநீக்கு