ஞாயிறு, 1 ஜூலை, 2012

SRI KAMAKSHI STHOTHRAM...ஸ்ரீ காமாக்ஷி ஸ்தோத்திரம்காமாக்ஷி ஸ்தோத்திரம்

மங்கள சரணே மங்கள வதனே
மங்கள தாயினி காமாக்ஷி

குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்சர ஜனனி காமாக்ஷி

கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி
துஷ்ட விநாசினி காமாக்ஷி (குருகுஹ ஜனனி)

ஹிமகிரி தனயே மமஹ்ருதி நிலயே
சஜ்ஜன சதயே காமாக்ஷி (குரு குஹ ஜனனி)

கிரஹ நுத சரணே க்ருஹ சுத தாயினி
நவநவ பவதே காமாக்ஷி (குருகுஹ ஜனனி)

சிவமுக வினுதே பவஸூக தாயினி
நவநவ பவதே காமாக்ஷி (குருகுஹ ஜனனி)

பக்தஸூமானஸ தாப விநாசினி
மங்கள தாயினி காமாக்ஷி (குருகுஹ ஜனனி)

பரசிவ ஜாயே வரமுனி பாவ்யே
அகிலாண்டேசுவரி காமாக்ஷி (குரு குஹ ஜனனி)

ஹரித்ரா மண்டல வாசினி நித்யே
மங்கள தாயினி காமாக்ஷி (குரு குஹ ஜனனி)

குடும்பத்தில் சுபகாரியங்கள் தடைப்பட்டாலோ, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டாலோ, மேற்கண்ட காமாக்ஷி ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய நலம் உண்டாகும்.

பாராயணம் செய்யும் முறை:

ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் காமாக்ஷி விளக்கை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். முதலில் தெரிந்த விநாயகர் துதி சொல்ல வேண்டும். பிறகு விளக்கை ஏற்றி (நெய்விட்டு ஏற்றுதல் சிறப்பு), அதில் தீபலக்ஷ்மியை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். பிறகு மேற்கண்ட காமாக்ஷி ஸ்தோத்திரத்தை ஏழு முறை பாராயணம் செய்யவும்.

பிறகு, இயன்ற நிவேதனம் (பால், பழம், முடிந்தால் இனிப்பு) செய்து, வெற்றிலை, பாக்கு, பழம் நிவேதித்து கற்பூரம் காட்ட வேண்டும். இந்தத் தாம்பூலத்தை பூஜை முடிந்த பின் சுமங்கலிகளுக்குத் தருதல் வேண்டும்.

ஏழு முறை ஆத்மபிரதக்ஷிணம் (நின்ற இடத்தில், நமக்கு நாமே சுற்றுவது) செய்யவேண்டும். ஏழு முறை நமஸ்கரிக்க வேண்டும். ஒவ்வொரு பிரதக்ஷிணத்துக்கும் ஒவ்வொரு நமஸ்காரம் வீதம் செய்யலாம்.


பின், இரு கரங்களிலும் பூக்கள் எடுத்து விளக்குக்கு சமர்ப்பித்து, மஞ்சள் குங்குமம் கரைத்த ஆரத்தி நீரைச் சுற்றிக்காட்டி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இந்த நீரை, கால்படாத இடத்தில் ஊற்றுதல் அவசியம்.

இவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்கோ (11, 21, அல்லது ஒரு மண்டலம்) அல்லது வெள்ளி செவ்வாய்க்கிழமைகளிலோ செய்து வர காமாக்ஷிஅம்மனின் கிருபையால், சுபகாரியத் தடை விலகி நலம் உண்டாகும்.

வெற்றி பெறுவோம்.!!!! 

4 கருத்துகள்:

 1. நல்லதொரு பதிவு, அன்பு சகோதரி.
  எனக்காகவே போட்டது போல உள்ளது.
  நன்றிகள் பல.
  ஒரு ஐயம்:
  பிரம்மச்சாரி பையன்கள் சொல்லலாமா? இல்லை அம்மாவை முன்னிட்டு சொல்ல வேண்டுமா?
  ஏதேனும் விதிமுறை அப்படி இருக்கிறதா சகோதரி?
  நன்றி :)

  பதிலளிநீக்கு
 2. //பிரம்மச்சாரி பையன்கள் சொல்லலாமா?//

  தங்கள் கருத்துரைக்கு நன்றி. பிரம்மச்சாரி பையன்கள் தாராளமாகச் சொல்லலாம். தாம்பூலம் அம்மாவைக் கொண்டு தரச் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 3. காமாட்சி ஸ்தோத்திறம்
  நன்றாக உள்ளது
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. //Udhaya Kumar said...
  காமாட்சி ஸ்தோத்திறம்
  நன்றாக உள்ளது //


  தங்கள் மேலான கருத்துரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு