வெள்ளி, 11 ஜனவரி, 2013

SRI HANUMATH PANCHARATHNAM....ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம்

ஸ்ரீராம பக்த சிரோன்மணியான ஸ்ரீ ஆஞ்சநேயரின் புகழ்பாடும் ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம், ஸ்ரீ ஆதிசங்கர பகவ்த் பாதரால் அருளப்பட்ட மகிமை பொருந்திய துதியாகும். ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருஅவதார தினமான, மார்கழி மாதம், மூல நட்சத்திரத்தன்று,  (இவ்வருடம் 11/1/2013 அன்று வருகிறது) ஸ்ரீராமரையும் ஸ்ரீ ஹனுமானையும் பூஜித்து, இந்த துதியைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர், ஸ்ரீ ஹனுமானின் அருளால், இவ்வுலகில் அனைத்து போக பாக்கியங்களையும் அடைந்து, பின் சாயுஜ்ய நிலையை அருளும் ஸ்ரீ ராம பக்தியையும் அடைவர் என்று பலஸ்ருதி கூறுகிறது. 
ஸ்ரீ ராமஜெயம்.
1.வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
           ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
உலகப் பற்றில்லாதவரும், (ஸ்ரீராமநாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே)ஆனந்தக் கண்ணீர் பெருக, ரோமாஞ்சனம் கொள்ளும் தூய பக்தியுள்ளவரும், ஸீதாபதியான ஸ்ரீராமரின் தூதரும், வாதாத்மஜருமான ஸ்ரீ ஹனுமானைத் தியானம் செய்கிறேன்.
2.தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
  ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
இளஞ்சூர்யனைப் போன்ற சிவந்த முகமுடையவரும், கருணை நிரம்பிய கண்களை உடையவரும்,  சஞ்சீவினி மலையைக் கொணர்ந்து (ஸ்ரீராம ராவண) யுத்தத்தின் போது மூர்ச்சித்து விழுந்தவர்களின் உயிர் நாடியைத் தூண்டிய‌ பெருமையுள்ளவரும், அஞ்சனாதேவியின் பாக்யத்தால் அவதரித்த மகிமை பொருந்தியவருமான  ஸ்ரீ ஹனுமனைத் துதிக்கிறேன்.
3.சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்
  கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
மன்மதனின் பாணத்தை வென்றவரும், மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவரும், சங்கு போன்ற கழுத்தை உடையவரும், சிவந்த உதடுகளை உடையவரும் வாயு புத்ரனுமான ஸ்ரீ ஹனுமனை சரணடைகிறேன்.
4.தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
  தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
 ஸீதாதேவியின் துயரத்தை நீக்கியவரும், ஸ்ரீ ராமரின் வைபவத்தை உலகத்தோர் அனைவரும் அறியும்படி பிரகடனம் செய்தவரும், பத்துதலையுடைய ராவணனின் புகழை கிழித்து எறிந்தவருமான ஸ்ரீ ஹனுமனின் திருவுருவம் என் கண்ணெதிரே ஒளிருகிறது.
5.வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
  தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
வானரர்களின் தலைவரும், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூரியனைப் போன்றவரும்(அல்லி மலர்வதற்கு சந்திரனின் கிரணங்கள் தேவை. சூரியன் இருக்கும் வரை அல்லி மலராது. ஆகவே, இங்கு, ராக்ஷஸர்களை  அல்லிப் பூக்களுக்கும் ஸ்ரீஹனுமானை சூரியனுக்கும் உருவகம் செய்கிறார் ஸ்ரீ பகவத்பாதர்), தீனர்களைக் காக்கும் விரதம் பூண்டவரும், வாயு பகவான் செய்த தவத்தின் பலனாக அவதரித்தவருமான ஸ்ரீ ஹனுமானைக் கண்டடையும் பேறு பெற்றேன்.

6.ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
  சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
வாயுபுத்ரனான ஸ்ரீ ஹனுமானின் பஞ்சரத்ன ஸ்லோகத்தை பக்தியுடன் பாராயணம் செய்பவர், இவ்வுலகில் எல்லா போக பாக்கியங்களையும் அனுபவித்து, ஸ்ரீ ராம பக்தி மிக்கவராவார்.


வெற்றி பெறுவோம்!!!

2 கருத்துகள்:


  1. இந்த பஞ்சரத்தினத்தின் முதல் பாடலின் முதல் வார்த்தை " வீதாகில " என்று துவங்குகிறது என நினைக்கிறேன்.
    தாகில என்று டைப் அடிக்கப்பட்டிருக்கிறது. திரும்பவும் கவனிக்கவும்.

    என்னுடைய ஈ மெயிலைப் படித்தீர்களா ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. ///// sury Siva said...

    இந்த பஞ்சரத்தினத்தின் முதல் பாடலின் முதல் வார்த்தை " வீதாகில " என்று துவங்குகிறது என நினைக்கிறேன்.
    தாகில என்று டைப் அடிக்கப்பட்டிருக்கிறது. திரும்பவும் கவனிக்கவும்./////

    தவறுக்கு மிக மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா. தாங்கள் கூறியது உண்மை. திருத்தம் செய்துவிட்டேன். தங்கள் வழிகாட்டுதலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.



    பதிலளிநீக்கு