ஞாயிறு, 20 ஜனவரி, 2013

SRI SUBRAMANYA KARAVALAMBASHTAGAM....ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்

Image result for LORD MURUGA IMAGES

ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்  முருகப்பெருமானைக் குறித்து செய்யப்பட்ட அற்புதத் துதிகளுள் ஒன்று. ஒவ்வொரு ஸ்லோகமும், 'வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்(வள்ளிதேவியின் நாயகனே, எனக்குக் கைகொடுத்துக்காப்பாயாக)'என்று நிறைகிறது. ஆகவே, மிகப் பெரிய ஆபத்துகளோ, பெருந்துயரோ வரும் காலங்களில் இதைப் பாராயணம் செய்தால், முருகப்பெருமானின் திருவருள், கைகொடுத்து காப்பாற்றி அந்த சூழலில் இருந்து விடுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் துதியைக் காலை நேரத்தில், பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், ஜென்மஜென்மாந்திரங்களில் செய்த பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்று பலஸ்ருதி கூறுகிறது.

1.ஹே ஸ்வாமிநாத கருணாகர தீந பந்தோ
ஸ்ரீ பார்வதிச முக பங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீ சாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

2.தேவாதி தேவஸூத தேவ கணாதிநாத
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாதா
தேவரிஷி நாரத முநீந்த்ர ஸூகீத கீர்த்தே
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

3.நித்யான்னதான நிரதாகில ரோக  ஹாரின்
தஸ்மாத் ப்ராதன பரிபூரித பக்த காம
ச்ருத்யாகம் ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 

4.க்ரெளஞ் சாஸூரேந்த்ர பரிகண்டந சக்தி சூல
பாஸாதி ஸஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ரவாஹ
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

5.தேவாதி தேவரத மண்டல மத்யமேத்ய
தேவேந்த்ர பீட நகராத்ருத சாபஹஸ்த
சூரம் நிஹத்ய அஸூரகோடி ப்ரிர்த்யாமன
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

6.ஹாராதி ரத்ன மணியுக்த கிரீடஹார
கேயூர குண்டல ஸஸத் கவசாபிராம
ஹே ! வீர ! தாரக ஜயாமரப்ருந்த வந்த்ய
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

7.பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை :
பஞ்சாம்ருதை : ப்ரமுதிதேந்த்ர முகைர் முநீந்த்ரே :
பட்டாபிஷிக்த ஹ்ரியுக்த பராஸநாத
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

8.ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத திஷ்ட சித்தம்
ஸிக்த்வாதுமா மவ கலாதர காந்தகாந்த்யா
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம்.

9.ஸூப்ரஹ்மண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தித்விஜோத்தமா :
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸூப்ரம்மண்ய ப்ரஸாதத :
ஸூப்ரம்மண்யாஷ்டகமிதம் ப்ராதருத்தாய ய : படேத் :
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷணாதேவ நச்யதே !

வெற்றி பெறுவோம்!!!!

3 கருத்துகள்:

  1. ஸ்வாமினாத கரவலாம்பாஷ்டகத்தை பாடிட அருள் செய்தமைக்கு தங்களுக்கு நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    www.kandhanaithuthi.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. /////sury Siva said...
    ஸ்வாமினாத கரவலாம்பாஷ்டகத்தை பாடிட அருள் செய்தமைக்கு தங்களுக்கு நன்றி/////

    இதை வெளியிட அருளிய இறை கருணைக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு