வெள்ளி, 6 செப்டம்பர், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்...
காந்திஜி
நேருஜி
நேதாஜி
இவர்களை  யாரென்று கேட்கிறான்
2ஜி யிலிருந்து
3ஜி அலைபேசிக்கு மாறிய
பாரத புத்திரன்.

==================
நேற்றுவரை
மகிழ்ச்சியோடு
தான் அணிந்த
பூவையும் பொட்டையும்

இன்று
துக்கத்தோடு அவைகளை
தன் கணவனுக்கு வைத்துவிட்டாள் படத்தில்.
விதவை.
=======================தென்னங்கள்
பனங்கள்
பருகியதில் தெரிந்தது போதை!
உன்
இதழ்கள் சுவைத்ததிலும்
ஏறியது போதை!
ஆனால்
பருகாமல்
சுவைக்காமல்
போதை ஏற்றுவது
படபடவென சிமிட்டும்
உன்
இமைகள் மட்டுமே!

=========
-தனுசு-

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மயக்கியளவுக்கு அமைந்ததற்கு தாங்கள் போன்றோரின் மயக்கிய பின்னூட்டங்களே. மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. ரசித்து பாராட்டிய தாங்களுக்கு மிக்க நன்றிகள் வைகோ சார்.

   நீக்கு
 3. தனுசு.. உமது கவிதேயே ஒரு
  தினுசு.. படிச்சது எல்லாம்
  புதுசு...

  வாழ்க.. நலமுடன்
  வளர்க .. பலமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்களின் வாழ்த்து மன மகிழ்வை தந்தது.மிக்க நன்றி வேப்பிலை ஐயா.

   நீக்கு