புதன், 18 செப்டம்பர், 2013

MINI STORIES.2 ...சின்னஞ்சிறு கதைகள்..2 தவளைகளின் சத்தம்!!


அது ஒரு சைனீஸ் ரெஸ்டாரென்ட். ஊருக்கு நடுவில் இருந்தது. படாடோபமாக உடை உடுத்திய மனிதர்கள் பலர் வருவதும் போவதுமாக, மாலை வேளையில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது.

சற்று அழுக்கான உடை உடுத்திய ஒரு விவசாயி அங்கு வந்தான். வாசலில் இருந்த உணவுப் பட்டியலைப் பார்த்தவன், உணவகத்தின் உரிமையாளரைத் தான் சந்திக்க வேண்டுமெனக் கோரினான். அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம்!!. ஆயினும், உரிமையாளரிடம் அவனை அழைத்துச் சென்றனர்.

உரிமையாளர், மரியாதையாக அவனை வரவேற்று அமரச் செய்து விசாரித்தார். உரையாடல் கீழ்க்கண்டவாறு இருந்தது...

'உங்கள் உணவகத்தில், தவளைகளைக் கொண்டு சமைக்கப்படும் உணவு வகைகள் மிகுந்திருக்கின்றன. என்னால் அதிக அளவு தவளைகளை உங்களுக்கு   விற்க முடியும்.'

'அப்படியா?... மிகவும் நல்லது. எவ்வளவு தவளைகள்?'

'ஐநூறு.. ஆயிரம்...'

'அடேயப்பா!!.. எப்படி இவ்வளவு தவளைகள் தர இயலும்?'

'என் வீட்டருகில் ஒரு குளம் இருக்கிறது. அதில் நிறையத் தவளைகள். தினம் இரவு நேரத்தில் தூங்க விடாமல் சத்தமிட்டு அதிக அளவு தொந்த்ரவு செய்கின்றன. அவற்றின் சத்தத்தை வைத்துச் சொல்கிறேன். குறைந்தது ஆயிரமாவது இருக்கும்'.

'நல்லது.. அப்படியானால் அடுத்த வாரம் தவளைகளுடன் வாருங்கள். நல்ல விலை தருகிறேன்.'

விவசாயி விடை பெற்றுப் போனான். 

அடுத்த வாரம், விவசாயி கொண்டு வந்த தவளைகளைப் பார்த்து அதிர்ந்து போனார் உணவக உரிமையாளர்.

இரண்டே இரண்டு தவளைகளை மட்டுமே கொண்டு வந்திருந்தான் விவசாயி. 

'இது என்ன, இரண்டு தவளைகள் மாத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்கள்?. மீதி எங்கே?'.

'இல்லை, நான் தான் தவறாகக் கணித்து விட்டேன். தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, அதிக அளவில் தவளைகள் இருப்பதாக நினைத்து விட்டேன். உண்மையில் இவை இரண்டு மட்டுமே அந்தக் குளத்தில் இருந்தன. ஆனால் இவற்றின் சத்தமே மிக அதிகமாக இருந்தது..'.

உணவக உரிமையாளர் என்ன சொல்லியிருப்பார் என்பதை விடுங்கள்.. 

கதை சொல்லும் நீதி என்ன?

1. அடுத்த முறை உங்களை யாராவது நியாயமற்ற முறையில் கடுமையாக விமரிசித்தால் அல்லது கிண்டல் செய்தால், நினைவு கொள்ளுங்கள்.. இந்த இரண்டு தவளைகளை... பெரிது படுத்தி வருந்த வேண்டாம்.

2.பயம் என்ற இருட்டில் வைத்துப் பார்க்கும் போது, பிரச்னைகள் மிக பூதாகாரமாக தோற்றமளிப்பது இயல்பே...

இரவு நேரத்தில், உறங்கச் செல்லும் முன், ஆயிரம் தவளைகளின் சத்தத்துக்கு ஈடாக தொந்தரவு செய்யும் பிரச்னைகள், உறங்கி எழுந்ததும் மிக லேசாகத் தோற்றமளிப்பது இயல்பே..சில சமயம் தீர்வுகள் கூட உங்களுக்குப் புலப்படும். 

ஆகையால், பிரச்னைகளைக் கண்டு மிரளாதீர்கள்.  எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். சற்று அருகில் நெருங்கி, எப்படி கையாளுவது என்று யோசிக்கத் துவங்கினீர்களானால், மிரட்டிய பல பிரச்னைகள், உண்மையில் மிக எளிமையானவையே என்று உணர்வீர்கள்!!..

எல்லாவற்றிற்கும் மேலாக, காலம் என்று ஒன்று இருக்கிறது. அது தீர்த்து வைக்காத பிரச்னைகள் மிக மிகக் குறைவு. நம்பிக்கை கொள்ளுங்கள். விடியல் அருகில் இருக்கிறது.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி:. கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

 1. பிரச்னைகளைக் கண்டு மிரளாதீர்கள். எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். சற்று அருகில் நெருங்கி, எப்படி கையாளுவது என்று யோசிக்கத் துவங்கினீர்களானால், மிரட்டிய பல பிரச்னைகள், உண்மையில் மிக எளிமையானவையே என்று உணர்வீர்கள்!!..

  அருமையான தீர்வு..!

  பதிலளிநீக்கு
 2. எல்லாவற்றிற்கும் மேலாக, காலம் என்று ஒன்று இருக்கிறது. அது தீர்த்து வைக்காத பிரச்னைகள் மிக மிகக் குறைவு. நம்பிக்கை கொள்ளுங்கள். விடியல் அருகில் இருக்கிறது.

  காலம் கைகூடினால் தீராத பிரச்சினைகளும் தீரும்..!

  பதிலளிநீக்கு
 3. //நம்பிக்கை கொள்ளுங்கள். விடியல் அருகில் இருக்கிறது.//

  தன்னம்பிக்கை தரும் சந்தோஷமான செய்தியைச் சொல்லியுள்ள பதிவு.

  பாராட்டுக்கள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. In PROBLEM SOLVING classes also, I used to stress, that instead of dwelling on 1. what could have caused the problem. 2. who could have initiated the problem 2. why when all are similarly placed, I should be facing the problem alone....etc.,
  better move forward,
  always ask ;
  WHAT NEXT ?
  AND THAT WILL TAKE U TO THE NEXT STEP.

  SUBBU THATHA.

  பதிலளிநீக்கு
 5. 'So what?' may be the correct attitude to face any problem.

  Let me not brood over the past.Let me not expect bad coming to me in the future by asking "What next?' Let me say I am prepared to face anything that actually/really confront me.I shall not weaken myself by imaginative fears.I shall not live in a fantasy world by the false promises given to myself by my own self.
  'இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற வகுத்துக் கொண்டு தின்று விளையாடி மகிழ்ந்திருப்போம் தீமையெல்லாம் அழிந்துபோம் திரும்பி வாரா'

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா!!.

   நீக்கு
 6. பிரச்சினை இல்லாதவனை காட்டினால் உடனே உனக்கு ஒரு முட்டாளை காட்டுகிறேன் என்ற தத்துவம் எனக்கு மிகவும் பிடிக்கும். சின்னன்சிறு கதைகள் எனும் தலைப்பை விட நீதி போதனை கதைகள் என்பதுதான் சரியாக இருக்கும்.

  பாராட்டுக்கள், தொடரட்டும் கதைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்துப் படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி தனுசு அவர்களே!!

   நீக்கு