ஆகவே மக்களே!.. மீண்டும் ஒரு 'கேப்' விட்டு வந்தே ஆச்சு!..(யாருப்பா அங்க 'நிம்மதியா இருந்தோம்' ங்கறது.. ஸாரி பாஸ்.. நோ வே.. என்ன பண்ணலாம் சொல்லுங்க!!..)
தலைப்பைப் பார்த்ததும், 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து'ன்னல்லாம் எழுதுவேன்னு ஐடியா பண்ணீங்கன்னா அதுக்கும் ஸாரி!.. இது வேற..
சமீபத்துல ஒரு வீட்டு கிரஹப்பிரவேசம் போயிருந்தேன்.. அட்டகாசமா, மாடுலர் கிச்சனெல்லாம் செட் பண்ணி வீடு சூப்பரா இருந்துது!.. வேடிக்கை பாத்துட்டே நின்னேனா!.. அப்படியே கண்ணு ஒரு பொருள விட்டு நகரவேயில்ல.. அது ஒரு அழகான, குட்டி அம்மி..
ஆச்சரியம் தாங்கல எனக்கு!.. நேரா போயி, (அந்த) வீட்டம்மாவக் கூட்டிட்டு வந்து கேட்டேன்!.. அவங்க சொன்னாங்க பாருங்க காரணமெல்லாம்.. கேட்டா நீங்களும் ஓடிப் போயி வாங்கிருவீங்க..
1.முதல் காரணம், திருவாளார் மின்சாரம்!.... கரண்ட் இல்லன்னா படாத பாடு படுது வீடு!.. அந்த வீட்டுக் குட்டிப் பையன் சட்னி இல்லன்னா டிபன் சாப்பிடமாட்டானாம்.. அவசரத்துக்கு கொஞ்சம் அரைக்க அம்மி இருந்தா சௌகரியம்..திடீர் விருந்தாளிகள் வந்தாலும் பிரச்னையில்லை!..
2.கைக்கு நல்ல எக்ஸர்சைஸ் ஆகுது!.. காலை பரபரப்பில மிக்ஸியை நம்பினாலும், வார விடுமுறை, அப்புறம் ஓய்வு நாட்களில் அம்மியில் அரைத்துத் தான் சமைக்கணும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறாராம்.. 'ஆர்த்ரைட்டீஸூக்கு அருமருந்து அம்மியில் அரைப்பது' ன்னு ஒரு பிரசங்கமே பண்ணினார்..
3.ருசி!..டேஸ்ட்டு வேணும்னா அம்மியே பெஸ்ட்டுன்னார். ஒரு முறை, அவசரத்துக்கு, அம்மிலயே கொஞ்சம் போல தோசைக்கு அரைச்சு செஞ்சாங்களாம்.. அதுக்கப்புறம், அந்த ருசிக்காகவே அம்மில அரைக்க ஆரம்பிச்சோம்னாங்க..
4. கொஞ்சமோ, கூடவோ, அளவு எதுன்னாலும் ஒரே அம்மி!..(மிக்ஸில வேற வேற ஜார் மாத்தணும்ல)
5. சர்வீஸ் பிரச்னை கிடையாது!.. நம்ம வீட்டு அந்தக் கால பாட்டிமார் போல ஓய்வில்லாமல், சலிக்காமல் உழைக்கும்!..
6.ரொம்பக் கடினமான, விரலி மஞ்சள் இத்யாதி சாமானையும் ரெண்டு தட்டு தட்டினா ஈஸியா பொடிச்சிடலாம்.. மிக்ஸி மாதிரி அங்கங்க மாட்டீட்டு சத்தம் போடாது!..முக்கியமா ஷாக் அடிக்காது!..
7. 'ஓவர் லோடு'ன்னு அவசர டைம்ல நின்னு வைக்காது...அப்புறம் சரி செய்யப் போராட்டம் நடத்த வேண்டியதில்ல..
(மாதிரி படம்) |
8. கரெக்ட் பதத்துல அரைக்க முடியுது!....(பாத்துட்டே அரைக்கறம்ல)..மிக்ஸில மூடி வச்சு அரைக்கறதால, கொற கொறப்பா அரைக்க வேண்டியத, அவசரத்துல கூட ஒரு சுத்து ஓட விட்டு, பேஸ்ட்டா அரைக்கற பிரச்னை இருக்குது!..அதே சமயம், மையா அரைக்க வேண்டியது, அவ்வளவு சரியா பல மிக்ஸிகள்ல அரைக்க முடியறதில்ல..
இப்படி சொன்னதக் கேட்டதும் எனக்கே அம்மி மேல ஆசை வந்திருச்சுன்னா பாத்துக்குங்க..
ஆனா ஒண்ணு, அம்மிக்குன்னு சின்னதா ஒரு மேடை போட்டு, அம்மியை கழுவி சுத்தம் பண்ணின தண்ணி போகன்னு ஒரு சின்ன ஓட்டை போட்டு வழி பண்ணி, தனியா வச்சிருந்தாங்க.
அம்மி விலை குறைச்சல்(மிக்ஸி விலையை விட).. அம்மியைத் திரும்பவும் யூஸூக்குக் கொண்டு வர்றதால, இதைச் செய்யறதையே தொழிலா வச்சிருக்கறவங்க வாழ்க்கைல திரும்பவும் ஒளி வரும்னு தோணுது!..முந்திக்காலத்துல, 'அம்மி பொளியறதுன்னு' கத்திட்டே ஒருத்தரு வருவாரு!.. குடுத்த காச வாங்கிட்டு, அம்மியக் கொத்தி ஒழுங்கு பண்ணித் தருவாரு.. அவங்கல்லாம் இப்ப என்ன ஆனாங்கன்னு தெரியலை இல்லையா?!!
போற போக்கப் பாத்தா, காஸ் விலை ஏறுது, கரண்ட் பில் ஏறுதுங்கறதால, எல்லா வீட்டுலயும் இந்த மாதிரி அம்மி, ஆட்டுக்கல், மினி உரல்(இப்பவே இது பல வீடுங்கள்ல இருக்கு), விறகு அடுப்பு, மண் பாத்திரம், மரப்பாத்திரம் இத்யாதில்லாம் விரைவில் எதிர்பார்க்கலாம் போல.
பழசெல்லாம் புதுசாகுது!.. அதுனால, பழைய காலப் பாத்திரங்கள், சாமான்கள் வச்சிருக்கறவங்க, அதத் தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்க நினைக்காதீங்க.. பத்து மடங்கு விலை குடுத்து அதுங்களையே இன்னும் பத்து வருஷத்துக்குள்ள திரும்பவும் வாங்க வேண்டியிருக்கும்.. ஒண்ணு அதுங்க ஃபாஷனாயிரும் இல்லாட்டி டாக்டர் அட்வைஸ் பண்ணுவாரு( 'தாமிரப் பாத்திரத்துல தண்ணி வச்சுக் குடிங்க'.. இந்த மாதிரி)
இங்க அம்மி கிடைக்கறதில்ல.. அடுத்தாப்புல சென்னை வர்றப்பதான் வாங்கணும்னு ஐடியா..
இப்போதைக்கு 'பை' சொல்லிக்கிறேன்..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!
படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.
ஆர்த்ரைட்டீஸூக்கு அருமருந்து அம்மியில் அரைப்பது...!அருமை..
பதிலளிநீக்குஅம்மி கொத்த சிற்பி எதர்கு .. நாமே கொத்திக்கலாம் என்று சுத்தியலை விரலில் போட்டுக்கொண்ட தடயம் இன்னும் விரலில் மறையாமல் இருக்கிறது ..!
வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப ரொம்ப நன்றிம்மா!...சுத்தியலை கைல போட்டிட்டீங்களா!!.. அச்சச்சோ!...
நீக்குநீங்கள் சொன்னது போல் எல்லா விதத்திலும், எந்த நேரத்திலும் பயன் தரும்... ஆனால் பல வீடுகளில் காட்சிப் பொருளாகவும் இல்லை...!
பதிலளிநீக்குதொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...
ஊக்கம் தரும் கருத்துரைக்கு ரொம்ப நன்றி டிடி சார்!
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
ரொம்ப நன்றி டிடிசார்!.. போய்ப் பார்த்து, நன்றி சொல்லீட்டேன்!..
நீக்குஅம்மியில் அரைப்பது ஆரோக்கியமும் உடற்பயிற்சியும் தானே எல்லாம் இழந்துவிட்டோம் வெளி நாடுகளில் சிலர் பாவிப்பதாக கேள்வி. வாங்கி வைத்திருந்தாலும் அரைக்க நமக்கு நேரம் இல்லையே. நல்ல பதிவு
பதிலளிநீக்குவலைச்சரம் வழியாக வந்தேன் தொடர வாழ்த்துக்கள்....!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி இனியா அவர்களே!.. தொடர்ந்து தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன் :))
நீக்குஎங்க வீட்லயும் அம்மி வெச்சிருக்கேன்.. வேலை மெனக்கெட்டு கன்யாகுமரி பக்கதுலே இருக்கற மயிலாடியிலிருந்து மும்பை வரைக்கும் ரயில் பயணம் செஞ்சு வந்தது அது :-)))))
பதிலளிநீக்குவெச்சிருக்கேன் அவ்ளோதான் :-)))
வாங்க சாந்தி!.. கவலைப்படாதீங்க.. திடீர்னு கைகொடுக்கும் அம்மி!..வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றி.. எப்ப டைம் கிடைச்சாலும் இந்தப் பக்கம் வாங்க!..
நீக்குவலைச்சரம் மூலம் வந்தேன்...நானும் அம்மிக் கொத்துரவங்க என்ன ஆனாங்கனு யோசிச்சுட்டு இருந்தேன்...நான் ஒரு குட்டி உரல் வச்ருக்கேன்...ரசத்துக்கு அதுல இடிப்பேன்..அம்மி வாங்கிரவேண்டியதுதான்..
பதிலளிநீக்குவாங்க கிரேஸ்!.. முதல் வருகைக்கு ரொம்ப நன்றி..
நீக்குகுழம்பு மசாலாவும் அம்மில அரச்சு செஞ்சு பாருங்க..
நீங்களும் எப்பப்ப முடியுதோ அப்பல்லாம் வருகை தரணுன்னு கேட்டுக்கிறேன்!..
படிக்கவே ரொம்ப மகிழ்வா இருக்குதுங்க ...
பதிலளிநீக்குஅப்படி ஒரு சூழல் வருகையில் ருசியோடு கூடவே ஆரோக்கியமும் கூடும் என்பதில் சந்தேகமில்லை ... நல்லா இரசனையுடன் எழுதுறிங்க .... விடாம எழுதவும் ... என் வாழ்த்துக்கள்
உங்க வார்த்தைகள் ரொம்ப ஊக்கம் தருது!.. ரொம்ப நன்றிங்க!
நீக்குபடிக்க நல்லாதான் இருக்கு .. நானும் இப்படித்தான் ஒரு அம்மி வாங்கிப் போட்டிருக்கேன்...ஆனா இருக்கும் அவசர யுகத்தில அத்தனைக்கும் ஆசைப்படுன்னு ஓடிட்டிருக்கறதால இதுக்கு நேரம் ஒதுக்க முடியலை... இப்ப படிக்கும்போது எப்பவாச்சுமாவது பயன்படுத்தலாம்னு தோன்றியது...
பதிலளிநீக்கு