வெள்ளி, 14 நவம்பர், 2014

CHILDREN'S DAY SPECIAL!!!.....கொஞ்சம் ரீவைண்ட் பண்ணலாம்!!....


கீதாம்மாவோட வலைப்பதிவுல  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்னிக்கு  சில‌ கேள்விகள் தொகுப்போட  'ரிலே ரேஸ்' வெளியாகியிருக்கு... நானும் தொடரலான்னு ஒரு எண்ணம்.. அதனால..

//1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு?//..


சரித்திரக் கதைகள் நிறையப் படிக்கிற வழக்கம் உண்டு.. அது சம்பந்தமாத்தான் கனவெல்லாம் வரும்.. குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி எதுவும் நினைவு இல்ல...ராஜா ராணி காலத்திய டிரஸ்ஸோடு இருப்பது மாதிரியான சில கனவுகள் மட்டும் லேசா நிழலாடுது!..

////2. பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்க முடியாத விஷயம்?/////

அப்பல்லாம் மாட்டு வண்டிகள் அதிகம்.. வண்டியோட பின்னாடி தொத்திக்கிட்டு, புஸ்தகப் பையை வண்டில போட்டுட்டு, அப்படியே ஊசலாட்டம் ஆடிக்கிட்டு பள்ளிக்குப் போன நினைவுகள் மறக்க முடியாத விஷயம்.. கூடவே வந்த அப்போதைய நண்பர்களை மறக்க முடியுமா?!!!. எதையும் எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே கொடுத்து, பெற்ற தருணங்கள்  அவை.. உயிரை வைத்துப் பழகிய நண்பர்களை இப்போது நினைத்தாலும் மனது என்னமோ செய்கிறது. இப்போது ஊர்பக்கம் போனாலும், எங்காவது பழைய தோழமையைப் பார்த்தால், உற்சாக அருவி பொங்கிவிடும்..

பள்ளி விட்டு, கூடல் மலைத் தெரு என்னும் தெரு வழியாக இறங்கி வருவது ரொம்பப் பிடித்த விஷயம்.. நீங்க பாக்கணுன்னா, இதோ இந்த காணொளி வழியா பாருங்க.. பாட்டு கடைசில, தனுஷ் ஓடி மேலே ஏறுறாரே.. அதுதான் அந்தத் தெரு!!..


///3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்?///

பொன்னியின் செல்வன்!!!!!..  நான் ரொம்ப ரொம்ப சின்ன வயசிலயே புக் படிக்க ஆரம்பிச்சாச்சு!!.. வீட்டுலயும் படிக்க நிறைய ஊக்கப்படுத்துவாங்க!..முதல்ல இதை எங்கப்பா கொடுத்து படிக்கச் சொன்னப்ப, அருமை தெரியலை.. வச்சிட்டேன்.. அப்புறம், ஒரு நாள் என் அண்ணன், 'நானெல்லாம் படிக்க ஆரம்பிச்சு இன்னும் வைக்கவேயில்ல தெரியுமா!!' அப்படின்னு சொன்னப்புறம் படிக்க ஆரம்பிச்சு... கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயமும் மனப்பாடமே ஆயிருச்சு!.. அப்பா, அதுல போட்டி வேற வைப்பாரு.. 'எந்த தலைப்பு, அதிக அத்தியாயங்களுக்கு வைக்கப்பட்டிருக்கு?' இந்த மாதிரி..அடுத்தாப்போல வேங்கையின் மைந்தன்... உலகத்தை மறந்து படிச்சிட்டிருந்த நாட்கள் நிறைய!!...

///4. மறக்க முடியாத மழை நினைவு?///..

ம்ம்.. 'வெள்ளை ரோஜா' திரைப்படம் வெளியாகியிருந்த சமயம்!.. உள்ளூர் தியேட்டருக்கு மழையையும் பொருட்படுத்தாம  போயிருந்தோம்..படம் விட்டு வரும் போது பார்த்தா, பாதையெல்லாம் முழங்கால் அளவு சேறு!!.. காலு வைக்கிறதே பெரிய கஷ்டமாயி, வீடு வந்தா போதும்னு ஆயிருச்சு!..

////5. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்?///

பல்லாங்குழி, அஞ்சாங்கல்லு இதெல்லாம் ரொம்ப சின்ன வயசுல.. பள்ளில கோகோ (கரெக்ட்டா?) அடிக்கடி விளையாடுறதுண்டு..அப்புறம் சீட்டு!!..

//6. பால்யத்திற்கு திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்?////

பள்ளி நாட்களில் இந்தி படிக்காமப் போனது பெரிய இழப்பா நினைக்கிறேன்.. பள்ளியிறுதியில சம்ஸ்கிருதம் எடுக்காமப் போனதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..வெளி மாநிலங்கள்ல அதிகம் இருக்கறதால, இந்தி எழுதப் படிக்கத் தெரியாதது பெரிய இழப்பா தெரியுது!!!. என் கூட படிச்ச பலர் பிரைவேட்டா இந்தி படிச்சாங்க.. அது மாதிரி படிக்கவும் சந்தர்ப்பங்கள் அமையல. அதே போல சம்ஸ்கிருதமும்.. அதிகமும் ஆன்மீகப் புத்தகங்கள் படிக்க சம்ஸ்கிருதம் நல்லா தெரிஞ்சிருந்தா நல்லது.. எனக்கு கொஞ்சம் தான் தெரியும்.. அதனால இது ரெண்டையும் செய்ய விரும்பறேன். 

'யார் வேண்டுமானாலும் இதைத் தொடரலாம்' அப்படின்னு கீதாம்மா சொல்லியிருந்தாங்க.. பதிவைப் படிக்கறவங்க அவங்க வலைப்பூவுலயோ அல்லது பின்னூட்டங்கள் வழியாவோ ஒரு ஃப்ளாஷ்பேக்' போய் வாங்களேன்!.. ஜாலியா இருக்கும்!!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்

காணொளியை வலையேற்றிய அன்பருக்கு நன்றி!..

2 கருத்துகள்:

  1. இனிய வணக்கம் சகோதரி...
    தொடர் ஓட்டப் பதிவால்
    என்னை பால்யத்துக்கு அழைத்துச்
    சென்றுவிட்டீர்கள்...
    அருமையான பதிவு சகோதரி...

    பதிலளிநீக்கு