ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

SRUNGERI DHARISANAM... CHATHUR MAASYA KAALA BIKSHA VANTHANAM..சிருங்கேரி தரிசனம்.. சாதுர்மாஸ்ய கால பிக்ஷா வந்தனம்.


சிருங்கேரி தரிசனம் தொடரை, இறையருளால் எழுதுவதால், பெரியோர்களின் ஆசி கிடைத்ததன் பலனாக,  சாதுர்மாஸ்ய விரத காலத்தில், சிருங்கேரி சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.. சில நாட்கள் முன்பு, சென்று திரும்பினோம்..

சந்நியாசிகள், மழைக் காலத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதையும், அதன் காரணமாக, குறிப்பிட்ட காலம் வரை, எங்கும் வெளியே செல்லாமல், ஓரிடத்திலேயே நிலையாகத் தங்குவதையும் நாம் அறிவோம்.. அந்த வேளையில், இல்லறத்தார்கள், சந்நியாசிகளுக்கு வேண்டிய பொருட்களை பிக்ஷையாகத் தந்தால் அவர்கள் தலைமுறையே நலம் பெறும். ஆகவே, சந்நியாசிகளுக்கு, சாதுர்மாஸ்ய விரத காலத்தில் பிக்ஷையிட வேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த மேல் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

இறையருளாலும், குருவருளாலும், 'ஸ்ரீ சிருங்கேரி  ஜகத்குரு சேவா சமிதி' மூலமாக, சமஷ்டி பிக்ஷா வந்தனம் சமர்ப்பிக்கும் பேறு பெற்றோம் நாங்கள்.. அனைத்து விதமான காய்கறி, பழங்கள், மளிகை சாமான்கள், வஸ்திரம், பூ, பாதுகைகள் முதலானவை ஸ்ரீகுருவுக்கு பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டன.. பக்தர்களுக்கு, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ மஹாசந்நிதானம் அவர்களும், ஜகத்குரு ஸ்ரீ சந்நிதானம் அவர்களும் ஆசி வழங்கினர்.. படங்கள் இணைத்திருக்கிறேன்...
தொடரை தொடர்ந்து படித்து, ஆசி வழங்கி வரும் அனைத்துப் பெரியோர்களையும் பணிகிறேன்!..

பதிவின்  ஆரம்பத்தில் இருக்கும் படம் மட்டும் கூகுள் இமேஜஸ் உதவியால் போடப்பட்டது..... மற்றவை,  நிகழ்வின் போது எடுக்கப்பட்டவை.....

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

1 கருத்து: