சனி, 13 அக்டோபர், 2012

NAVAMANGALI STHOTHRAM....நவமங்களி ஸ்தோத்திரம்


'நவமங்களி ஸ்தோத்திரம்' சர்வ மங்களங்களையும் அருளும் மகிமை வாய்ந்த ஸ்லோகமாகும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், பூஜை முடிந்த பிறகு, இருவரிகளுக்கு ஒரு ஸ்லோகம் வீதம் சொல்லி ஒன்பது நமஸ்காரங்கள் செய்து நமஸ்கரிக்க எல்லா நலன்களும் உண்டாகும். நவராத்திரியில் தினமும், இந்த ஸ்லோகத்தை சொல்லி நமஸ்கரிக்க, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி ஸ்வரூபிணியான, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் பரிபூரண அனுக்கிரகத்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறி, பரிபூரணமான நல்வாழ்வு கிட்டும்.

காத்யாயநி மஹாமாயே பவாநி புவனேஸ்வரி|
ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தர ஸ்ரீக்ருபாமயி||

காத்யாயநி, மஹாமாயை, பவாநி, என்ற திருநாமங்களால் துதிக்கப்படும் ஹே! புவனேஸ்வரி, சம்சாரமாகிய கடலில் மூழ்கித் தவிக்கும் என்னை கரையேற்றி அருளுவாய்.

தன்யோ (அ)ஹம் அதிபாக்யோ (அ)ஹம் பாவிதோ (அ)ஹம் மஹாத்மபி: 
யத்ப்ருஷ்டம்ஸூ மஹத்புண்யம் புராணம் வேதவித்ருதம் ||

மிகுந்த புண்யங்கள் செய்திருந்ததால் அல்லவோ, ஹே தேவி, நான் உனக்கு அடிமையாகும் பாக்யம் கிடைக்கப் பெற்றேன்.

நமோ தேவ்யைப்ரக்ருத்யை ச விதாத்ர்யை ஸததம் நம: |
கல்யாண்யை காமதாயை சவ்ருத்யை ஸித்யை நமோ நம: ||

பிரகிருதி ரூபமானவளே!!, கல்விக்கு அதிபதியானவளே,  விருப்பங்களை நிறைவேற்றித் தரும் கல்யாணி!!,  விருத்தி(வளர்ச்சி)யையும், சித்தியையும் தருபவளே!!, உனக்கு நமஸ்காரம்.

ஸச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம: |
பஞ்ச க்ருத்யை விதாத்ர்யைச புவனேச்வர்யை நமோ நம: ||

சச்சிதானந்த ரூபமாக விளங்குபவளே!!, சம்சாரக் கடலே!!, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களால் உலக உயிர்களை ரட்சிக்கும் ஹே புவனேஸ்வரி, உனக்கு நமஸ்காரம்.

க்ரீடா தே லோகரசனா ஸகா தே சிந்மய: சிவ: |
ஆஹாரஸ் தே ஸதானந்த: வாஸஸ் தே ஹ்ருதயம் மம ||

மணிமுடியில், சிவபெருமானுடைய அடையாளத்தைத் தரித்திருப்பவளே!!, எப்போதும் ஆனந்தமாக விளங்குபவளே, என்னுடைய ஹ்ருதய கமலத்தில் வாசம் செய்து அருளுக.

நம: சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம: |
பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம: ||

சிவமாக விளங்குபவளே(சிவனாருக்கு உடையவளே!!), கல்யாணி, சாந்தரூபமாகவும், த்ருப்தியுடனும் விளங்குபவளே!!, உனக்கு நமஸ்காரம்.

ஜயஜய ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே |
யஜ்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஜயாவஹே ||

வெற்றிக்கு ஆதாரமாக விளங்குபவளே, வெற்றியை அருளுபவளே, வெற்றித் திருவுருவாக விளங்கும் ஹே தேவி!! உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸூகதே மோக்ஷதே தேவி ப்ரஸன்னா பவ ஸூந்தரி |
புஷ்பஸாரா ராநந்த‌நீயா துளஸீ க்ருஷ்ண ஜீவநீ||

சுகம், மோக்ஷம் ஆகியவற்றை அருளும் ஹே தேவி!!, எப்போதும், ஆனந்தமயமாக அருளுபவளே, கிருஷ்ணரையே ஜீவனாகக் கொண்டவளான ஸ்ரீ துளசியில் பிரசன்னமாக இருப்பவளே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

நமஸ்தே துளஸீரூபே நமோ லக்ஷ்மீ ஸரஸ்வதீ |
நமோ துர்க்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி. ||

துளஸீ ரூபமாக விளங்குபவளுக்கு நமஸ்காரம், லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கா பகவதி ஆகிய முப்பெருந்தேவியரின் திருவுருவாகவும், சர்வ ரூபிணியாகவும் விளங்கும் உனக்கு நமஸ்காரம்.

நவராத்திரி தினங்களில் அம்பிகையை ஆராதித்து,

வெற்றி பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக