ஞாயிறு, 7 ஜூலை, 2013

கிளிமொழி (தனுசுவின் குறுங்கவிதைகள்...)

கிளிமொழி
ஹேய்.....
பச்சைக்கிளியே
நீ
திக்கி திக்கி சொல்வதென்ன?
கிளி மொழியை
கற்றுத் தருகிறாயா?

ஆண்களை வீழ்த்த பெண்களுக்கு!


சீர்
நாத்தனார்
மாமியார்
மாமனார்
இவர்களுக்கு
புதுக்கவிதை பிடிக்காது.

இவர்கள் அந்த காலத்து ஆட்கள்
ஆதலால் என்கிறீர்களா...

இல்லை இல்லை...
இந்த
புதுக்கவிதையில்
'சீர்" வருவதில்லை
அதனால்.
வெற்றுக் கணக்கு
ஸ்விஸ் வங்கியில்
இந்தியர்கள்
பல்லாயிரம் கோடி பதுக்கல்!
இது
இன்றைய செய்தி.

அட பெரும்புத்தி பெருச்சாளிகளா
யாருக்கும் பயன் இல்லாமல்
பதுக்கி வைத்திருப்பது
பணமல்ல
வெறும் நம்பர்கள்.

அன்புடன்

 -தனுசு-

2 கருத்துகள்:

 1. குறுங்கவிதைகளுக்கேற்ற படங்களும் அருமை... பாராட்டுக்கள்...

  வெறும் நம்பர்கள் உணர வேண்டியது...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. என் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பது போல் படங்களை தேர்வு செய்து வெளியிடும் ஆசிரியர், சகோதரி பார்வதி அவர்களுக்கு என் முதல் நன்றிகள்.

  கவிதையை ரசித்து தன் பாராட்டை தெரிவித்த நண்பர் தனபால் அவர்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு