செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

தனுசுவின் கவிதைகள்.....எனது உறுதிமொழிகள்!!!


சுதந்திர நன்னாளாம்
இன்று நாம் ஒன்று கூடி
பதவர்ணத்தைப் பாடி
எடுப்போம் ஒரு உறுதிமொழி

என் முதல் வணக்கம்
எனக்கு முழு சுயராஜ்யம்
பெற்று தந்த எம் முன்னோர்க்கு .

என் முதல் மரியாதை
என் மூச்சாம்
தாய் நாட்டின் கீதத்திற்கு..


என் முதல் அலங்காரம்
நான் வணங்கும்
என் தேசியக்கொடிக்கு

 என்  முதல் பணி

நான் வாழும்
என் கோயிலான தேசியத்திற்கு

என் முதல் பெருமை
என் பாரதம் ஒளிர
பல்லினமும் சேர்ந்ததற்கு

என் முதல் கடமை
என் உயிரின் உரிமையை
நாட்டின் ஒற்றுமைக்காக உயிலாக்குவது.

வாழ்க
சுதந்திரதினம். .

-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக