வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்.

நிலவே
அழகிப்போட்டிகள்
ஏன்
அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள் தெரியுமா?

வெளியில் நடத்தினால்
முதல் பரிசை
நீ
வென்றுவிடுவாய் என்பதால்.

சுறுசுறுப்பாய் சிறகடிக்கும்
சிட்டுக் குருவியே
நீ
எந்த லேகியம்
சாப்பிடுகிறாய்
உன் சுறுசுறுப்புக்கு


ரம்ஜான் கொண்டாட
பிறை பார்த்தனர்
முஸ்லிம் மக்கள்

தெரிந்தது பிறை

ஒருவன் சொன்னான்
நிலவும் ஒரு மாதம் நோன்பிருந்ததோ
பார்
எப்படி
இளைத்து விட்டது.

-   தனுசு - 

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

 1. ஒன்னும் சொல்வதற்கில்லை...

  வாருங்கள்... http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. எல்லாக் குறுங்கவிதைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்து பாராட்டியா தாங்களுக்கு மிக்க நன்றி வைகோ சார் அவர்களே.

   நீக்கு
 3. இனிய வணக்கம் சகோதரி
  நலமா??
  நறுக்கென்ற கருக்கொண்ட
  குறுங்கவிதைகள் அத்தனையும் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே!! தங்கள் வருகைக்கு நன்றி. இறையருளால் நலமுடன் இருக்கிறேன். தாங்கள் நலமா?.குறுங்கவிதைகள் எழுதிய சகோதரர் தனுசுவுக்கு தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்திருக்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   நீக்கு
  2. பாராட்டிய தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
  3. இனைய பிரச்சினையால் கொஞ்சம் தாமதம் அது தான் உடனடியாக வரமுடியவில்லை. மிக்க நன்றி சகோதரி.

   நீக்கு