புதன், 18 டிசம்பர், 2013

AATHIRAIYAN ADI INAIGAL POTTRI!!...ஆதிரையான் அடியிணைகள் போற்றி!!!


ஆக்கலொடு காத்தழித்தும் மறைத்தும் அருள்செயும்
அண்ணலார் திருநடனம் அடியார்க்கு ஆரமுது
எண்ணில்லா பிரபஞ்சமதை இயக்கும் திருநடனம்
புண்ணியம் செய்தாலே பொருந்தும் சிந்தையிலே

பித்தன்  பிறை நுதலான் பேயாடும் காட்டுறையும் 
சித்தன் சிவ நாமம் சிந்தனையில் நிறுத்துவோர்தம்
அத்தன் அருட்கடலான் அனலோடு புனல் ஏந்தும்
கூத்தன் குவலயத்தைக் காத்தருள்வான் பதம் போற்றி!

விடையேறும் பெம்மான் விரிசடையோன் இணையடிகள்
வேதங்கள் துதி பாடித் தொழுதேத்தும் மலரடிகள்
வேதனைப் பிறப்பறுத்து வீடு தரும் பொன்னடிகள்
விலகாது சிந்திக்க வினை தீரும் கேள் மனமே!!

மண்ணானான் விண்ணானான் மன்னுயிர்கள் தானானன்
கண்ணான பக்தர்தம் கருத்ததனில் நிலையானான்
பெண்ணானான் ஆணானான் பெருவாழ்வு தானானான்
பண்ணானான் பதம் பாட பாரினிலே துயரேது!

ஆதிரையான் தாளடிகள் அருந்தவத்தால் சேர்ந்திடுவோம்!!
பாதி மதி சூடியவன் பதமலர்கள் போற்றிடுவோம்!!!
மோதி வரும்  பிறவிச் சுழல் முழுவதுமே கடந்திடுவோம்!!!
நாதமொடு பாடி நிதம் நமசிவாய என்றிருப்போம்!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

 1. இன்று திருவாதிரைக்கு ஏற்ற மிகச்சிறப்பான பகிர்வு.

  பார்க்கவும் படிக்கவும் ‘களி’ப்பூட்டியது. ;)

  அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. இன்று திருவாதிரைக்கு ஏற்ற மிகச்சிறப்பான பகிர்வு.

  பார்க்கவும் படிக்கவும் ‘களி’ப்பூட்டியது. ;)

  அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. ஆதிரையான் தாளடிகள் அருந்தவத்தால் சேர்ந்திடுவோம்!!
  பாதி மதி சூடியவன் பதமலர்கள் போற்றிடுவோம்!!!
  மோதி வரும் பிறவிச் சுழல் முழுவதுமே கடந்திடுவோம்!!!
  நாதமொடு பாடி நிதம் நமசிவாய என்றிருப்போம்!!!

  அழகான வரிகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 4. ஆகா...! சிறப்பான பகிர்வு... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துக்களுக்கும் தகவல் தந்தமைக்கும் மனமார்ந்த நன்றி!!.. பார்வையிட்டுவிட்டேன்!!!..

   நீக்கு