சனி, 21 டிசம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்!!.....பிரம்மச்சாரி!!!


என்
உடம்புக்கு முடியவில்லை 
கண் இரண்டிலும் சோர்வின் அலை 
ஊண் எடுப்பதில் ஆர்வமில்லை 
நான் நலம் குன்றியதால்
வந்தது எனக்குப் பெரும் கவலை

யார் வருவார் தலையை வருட
யார் தருவார் வெந்நீர் பருகிட
என் கையே எனக்கு உதவி
பிணி அறியாது மனிதரின் தகுதி

இருமினால் தொண்டைவலி
திரும்பினால் உடல் வலி
படுக்கையில் இருக்கிறேன்
போர்த்திவிட யாருமின்றி
குளிர் காய்ச்சலில் இருக்கிறேன்
கவனிக்க ஆளின்றி

சுக்கிரனும்
சந்திரனும்
சுக ஸ்தானத்தில் இருந்தென்ன
சூரியனாய்
சுட்டெரிக்கும்
வீரிய வைரஸ்
என்னை வாட்டுவதென்ன

நெற்றிப் பொட்டும்
நெஞ்சுக்கூடும்
வலியில் என்னை இறுக்குது
வாய் கசப்பும் 
வாந்தி மயக்கமும்
வரிந்துகட்டி வாட்டுது

மருந்து 
மாத்திரை
கவனித்து கொடுப்பார் யாருமில்லை
அதற்காக நான்
உற்றோ
உறவோ
இல்லாத அனாதையுமில்லை

அன்பான அம்மா
ஆதரவான மனைவி
பாசமான பிள்ளைகள்
எல்லோரும் இருக்க 
திரைகடலோடி திரவியம் தேடும்
தீய கொடுமைக்கு ஆளானதால்
சொந்தங்கள் பிரிந்து 
தனிமையில் வாழும்
சம்சாரி எனும் பிரம்மச்சாரி. 

-தனுசு-

படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.

9 கருத்துகள்:

  1. வழக்கம் போல, ஒரு 'தனுசு பாணி' கவிதை.. கவிதையின் ஆழத்தில், குடும்பத்தைப் பிரிந்த ஒரு தலைவனின் ஏக்கம் துல்லியமாக வெளிப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். குடும்பம் நலமாக இருக்க, சகல சுகங்களையும் துறந்து, எல்லாம் இருந்தும் அனைத்தையும் தியாகம் செய்து, அந்நிய தேசத்தில் உழைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வணக்கம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை வெளியிட்டு பாராட்டும் தந்த தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. என் கவிதை தாங்களின் மனதை தொட்டதை அறிந்து மகிழ்ந்தேன்.நன்றிகள் .

      நீக்கு
  3. ’கல்யாணம் ஆகியும் பிரும்மச்சாரி’

    அயல் நாட்டு வருமான மோகத்தால் வந்துள்ள அவஸ்தைகள்.

    மஹா கஷ்டம், இவருக்கு மட்டுமல்ல, எங்கோ பிரிந்து வாடும் இவரின் மனைவிக்கும்.

    ”என்ன வளம் இல்லை இந்தத்திருநாட்டில் ... ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?” என்ற வாத்யார் பாடலே நினைவுக்கு வருகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கவிதையை ரசித்து வாத்தியார் பாடல் போட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் வைகோ சார்.

      நீக்கு
  4. உணவு கட்டுப்பாடிருந்தால் இப்படி
    உடல் நலம் குறித்து புலம்ப வேண்டாமே

    கல்யாணமான பிரம்மசாரிகள்
    கண்டதையும் உண்டு பின் கலங்குவார்கள்..

    கல்யாணமாகாத பிரம்மசாரிகள்
    கட்டுபாட்டிலிருப்பதால் கட்டை பிரம்மசாரிகள்..

    அது சரி..
    அந்த பிரம்மாவுக்கும் சாரிக்கும் என்ன சம்பந்தம்

    பிரம்மா வைனவர்
    சாரி பௌத்தர்

    வில்லாளன் கொஞ்சம்
    விளக்குங்களேன்...

    பதிலளிநீக்கு