ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

THIRUVE VARUGA!...திருவே வருக!..


ஸ்ரீலக்ஷ்மி தேவியே திருவருள் புரிக!
ஸ்ரீஜய ஆண்டிலே வளமெல்லாம் தருக!


ஸ்ரீதேவி உன்னருள் எங்குமே நிறைக!
ஸ்ரீயாக எம் உளம் நிலைத்தருள் புரிக!

கருணையை மழையென எம்மிடம் பொழிக!
கவலைகள் நீக்கியே மனதிடம் தருக!
பொன் பொருள் குறைவற கொடுத்தருள் புரிக!
பொன்னிலும் உயர்ந்ததோர் மனம் தந்தருள்க!

விண்ணிலும் மண்ணிலும் நின்னருள் தங்கும்!
வெற்றியும் சக்தியும் துலங்கிடும் எங்கும்!
வானவர் தானவர் தாள் பணிந்திடுவார்!
வாழ்வுதந் திடும்தேவி என்று தொழுதிடுவார்!

இன்னருள் பொழியவே பொன்மகள் வருக!
ஈடில்லா வாழ்வருளி நலமெல்லாம் தருக!
பொன் மலர் திருவடி பற்றினோம் அருள்க!
பொலிவான வருங்காலம் பரிசளித் திடுக!

வையம்  செழிப்புடன் வாழ்ந்திட வேண்டும்!
வானம் பொய்க்காது பொழிந்திட வேண்டும்!.
நன்மைகள் பெருகி நலம் நிறைந்திட வேண்டும்!
நல்லவர் காலமே வென்றிட வேண்டும்!

மாதர் தம் தொல்லைகள் அகன்றிட வேண்டும்!
மானிடர் அன்பாலே இணைந்திட வேண்டும்!
எல்லையில் வரம் தரும் இலக்குமி தேவி!
இகமெல்லாம் வாழவே இன்னருள் தா நீ!

இந்தப் பாடலை அருமையாகப் பாடி அளித்த உயர்திரு.சுப்புத் தாத்தாவுக்கு என் மனமார்ந்த நன்றி!.. பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்!..

https://www.youtube.com/watch?v=S8THuIQHXbM

அன்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. 

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

11 கருத்துகள்:

 1. மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா!.. தங்களுக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

   நீக்கு
 2. பதில்கள்
  1. நன்றி!.. தங்களுக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

   நீக்கு
 3. வணக்கம் !
  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா !
  இன்று தான் தங்களின் தளத்தினை அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மீண்டும் மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள் உங்கள் பகிர்வுகளுக்கும் இனிய புத்தாண்டு எல்லா நலனையும் வளத்தையும் அள்ளி வழங்கிட .முடிந்தால் வாருங்கள் என் தளத்தில் எப்போதும் கவிதைப் பூக்கள் பூத்திருக்கும் அவை தங்கள் மனதிற்கும் மகிழ்வு தந்தால் பெருமை கொள்வேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!...தங்கள் தளத்திற்குக் கண்டிப்பாக வருகை தருகிறேன்.. தங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
  2. தங்களுக்கு இயலும் போது என் மற்றொரு தளத்திற்கும்www.aalosanai.blogspot.com ( சுட்டி சைட் பாரில் மேலே இருக்கிறது) வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
 4. வணக்கம் ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கள் அனவருக்குக்கும்.
  அருமையான வேண்டுதலும் கவியும். இன்று தான் தங்கள் தளம் அறிந்தேன் இனி தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்!.. தங்கள் முதல் வருகைக்கும் இனிமையான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!.. தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. தங்களுக்கு நேரமிருக்கும் போது, என் மற்றொரு தளத்திற்கும் (www.aalosanai.blogspot.com)வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்!

   நீக்கு
 5. இந்தப் பதிவின் பாடல் மூலமாக, தங்கள் வலைப்பூவில் புத்தாண்டை வரவேற்றமைக்கு மிக்க நன்றி தாத்தா!.. தங்களின் அன்புக்கு என்றென்றும் நன்றியுடையேன்!

  பதிலளிநீக்கு