கண்டங் கறுத்தான் கவினுருவாய் உளம் நிறைந்து
நின்றருளுந் தோற்றம் நிலையாக மனம் வைப்போம்!
தண்ணிலவு தனைச்சூடி வெண்ணீறு தனிலாடி
பொய்யறுத்தார் நெஞ்சகத்தில் புனலாக அருள்சுரப்பான்
அண்ணாமலையான் அனலோடு புனல் ஏந்தி
பெண்ணை ஒருபாகம் கொண்டருளும் பேரொளியான்!
விண்ணாகி மண்ணாகி விரிந்திருப்பான் பொன்னடிகள்
கண்ணுள்ளே வைத்து கசிந்துருகிப் போற்றிடுவோம்!
எங்கும் நிறைந்திருப்பான் எம் ஐயன் பொழி கருணை
தங்கும் அடியவர் தம் தாள் பணிந்து வணங்கிடுவோம்!
பொங்கும் கங்கையினை சடை ஏந்தும் பொன்னவனை
சங்கம் முழங்கிடவே தாள் பணிந்து வணங்கிடுவோம்!
மின் தமிழ் குழுமத்தில், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, 'சித்திரை ரத'த்துக்காக எழுதி வெளியாகிய கவிதை!..
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!
பதிலளிநீக்குமுத்திரை பதிக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்..
சிறப்பான வரிகள் அம்மா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
ஈசனைப் புகழ்ந்து பாடும் இப்பதிகத்தை
பதிலளிநீக்குயானும் பாடி சிவனருள் பெறுவேன்.
தங்களுக்கு மிக்க நன்றி.
சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.com