புதன், 14 ஜனவரி, 2015

HAPPY PONGAL!!.....இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..



அன்பு நண்பர்களுக்கு மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

எல்லார் வீட்டிலயும் பாலோடு சந்தோஷமும் சேர்ந்து பொங்கட்டும்னு மனமார வாழ்த்தறேன்!...

நகரங்களில் பொங்கல் கொண்டாட்டத்தின் உற்சாகம்  இன்னும் குறையலை! :))!!..

முதலில் மதுரையிலும், அப்புறம் சென்னையிலும் இருந்தப்ப வெவ்வேறு விதமான கொண்டாட்டங்கள்.. மதுரையில் பொங்கல் பெரும் உற்சாகத்தோட கொண்டாடப்படும் பண்டிகை..  மதுரையைச் சுத்தி இருக்கற கிராமங்கள்ல‌ பொங்கல் கொண்டாட்டத்தைப் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கணுங்கறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்!..

சென்னையிலும் ரொம்ப நல்லா கொண்டாடுவாங்க.. ஆனாலும், பாதி நாளுக்கு மேல, எல்லாரும் டிவி முன்னாடி உக்கார்ற பழக்கம் காரணமா, நண்பர்கள் உறவினர்களோடு சந்தோஷமா கொண்டாடுறது கம்மியாயிடுச்சு.. 'காணும் பொங்கல்'னு ஒண்ணு எதுக்கு இருக்கு?..அன்னிக்கு பாத்துக்கலான்னு எல்லாரும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' பார்க்கறதுக்கு ரெடியாயிடுறாங்க..இந்த பழக்கம், குறைஞ்சா நல்லாயிருக்கும்.. அடுக்கு மாடிக் குடியிருப்புகள்ல, பொங்கலுக்காக நடக்கற விழாக்கள், நிறைய நட்பு வட்டங்கள் ஏற்படுத்திக்க வாய்ப்பா அமையுது!..

பெங்களூரில் இது பெரிய கொண்டாட்டம்!...எக்கச்சக்க சம்பிரதாயங்களோடு கொண்டாடப்படும் பண்டிகை இது!.. இது தமிழர் திருநாள்னு நாம கொண்டாடுவது போல், இங்கே சங்கராந்திப் பண்டிகைன்னு கொண்டாடறாங்க!....நாம் செய்வது போல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் எல்லாம் உண்டு!. (கூகுளார் உபயத்துல படங்கள் போட்டிருக்கேன்!..)..

ஆனா, போகியையும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடுறாங்க.. ஸ்பெஷல் பூஜை எல்லாம் உண்டு!.. பொங்கல் அன்னிக்கு, எள்ளு வெல்லம், கொப்பரைத் துண்டுகள், சர்க்கரைக் கட்டிகள் (சர்க்கரை பொம்மைகள் செய்யும் போது, அதே மாதிரி இந்த கட்டிகளும் செய்வாங்க) பொட்டுக்கடலை, எல்லாம் கலந்த கலவையை நிவேதனம் செஞ்சு, உற்றார் உறவினர்களுக்கெல்லாம் தாம்பூலத்துடன் தரும் பழக்கம் உண்டு.. கண்டிப்பா, இதை வயசுல பெரியவங்களுக்குக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும்!..

இதை பொங்கல் துவங்கி, ரதசப்தமி வரை செய்யலாம்.. ஒரு சின்ன டப்பால, இந்தக் கலவை வச்சு, தாம்பூலம், சர்க்கரை பொம்மை, சின்ன கரும்புத் துண்டு எல்லாம் கொடுத்து நமஸ்கரிப்பாங்க..அது போல், தாம்பூலத்தை அவரவர் இடங்களுக்குக் கொண்டு கொடுப்பாங்க.. வீட்டுக்கு அழைச்சு தரதில்லை..

இந்த தாம்பூலம் தர பழக்கம் காரணமா, கட்டாயம் உறவு நட்புகளைச் சந்திப்பாங்க.. சின்ன சின்ன குழந்தைகளெல்லாம், ஆர்வமா, எள்ளு, வெல்லம் கலவை எடுத்துட்டு போயி, எல்லார் வீடுகள்லயும் கொடுப்பாங்க.. பார்க்கவே நல்லாயிருக்கும்..


சின்ன சின்ன மண் குடுவைகள்ல, இந்த கலவையை வச்சு நிவேதனம் செய்வாங்க.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர்க்கடலை, மொச்சைப்பருப்பு, பரங்கிக்காய் எல்லாம் கட்டாயம் உணவில் சேர்க்கணும்.. மூலைக்கு மூலை, இதைப் பெரிய குவியலாப் போட்டு வித்திட்டிருக்காங்க.. எல்லா கடை முன்னாடியும் சரியான கூட்டம்!..

 எந்த ஊரானாலும் சரி, பண்டிகை நெருங்கும் போது, எல்லாருக்கும் ஒரு சந்தோஷம் வந்துடும்!.. கடை வீதிகள்ல, பொருட்கள் வாங்கறதுக்கு வரவங்களைப் பாத்தா தெரியும்!..எல்லார் முகத்திலயும் பண்டிகை பரபரப்பும் சந்தோஷமும் பார்க்கவே நல்லாயிருக்கும்.. அதனால, எங்க இருந்தாலும், பண்டிகைக்கு முதல் நாள்,  கடை வீதிகள்ல ஒரு 'ரவுண்ட்' போறதை வழக்கமா வச்சிருக்கேன்.. பண்டிகைன்னாலே சந்தோஷம் தானே!.. இந்த சந்தோஷம் எல்லாருக்கும் தினம் தினம் தொடரணுன்னு பிரார்த்திக்கிறேன்!.. 

திரும்பவும் எல்லாருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. படங்களும் செய்திகளும் பகிர்வும் அருமை. பாராட்டுக்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி!..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி!.. தாங்களும் உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!..

      நீக்கு