திங்கள், 13 ஜூலை, 2015

திருமதி சுபாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!..

தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி.சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதை சிறப்பிக்கும் முகமாக, குழும உறுப்பினர்கள் அனைவரும் பங்களித்து, பட்டாபிஷேக மலர் தயாரிக்கப்பட்டது.. இதை ஒருங்கிணைத்தவர்,  திருமதி.வீ.எஸ்.ராஜம் அவர்கள்.. பட்டாபிஷேக மலரை தொகுத்து, தயாரித்து அளித்தவர், திருமதி. தேமொழி அவர்கள்.

திருமதி சுபாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!...திருமதி.ராஜம் அவர்களுக்கும் திருமதி.தேமொழிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!.. குறிப்பாக, அட்டைப்படத் தேர்வு மிக அருமையாக இருக்கிறது.. மலரை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.. மலரில் என் பங்களிப்பும் இடம் பெற்றிருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி!..

என் தோழியரின் பங்களிப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. 

( கீழ்க்கண்ட பகுதி, மின் தமிழ் குழுமத்தின் வாழ்த்து இழையிலிருந்து !!..)

நண்பர்களே, 

முனைவர் பட்டம் பெற்ற நமது சுபாவிற்கு வாழ்த்துகள்.

அவரது பட்டமளிப்பு நாளில் அவரைப் பாராட்டி ...


அவரது பட்டமளிப்பு நாளிலேயே வெளியிடப்படுவதில்  அவரது நண்பர்களாகிய நாம் மகிழ்ச்சி அடைகிறோம்

மீண்டும் சுபாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

https://onedrive.live.com/view.aspx?cid=661f3cc49b9f3d49&page=view&resid=661F3CC49B9F3D49!1756&parId=661F3CC49B9F3D49!109&app=WordPdfசுபாவின் பட்டமளிப்பு விழா  படங்களுடன்...

அவரது இளமைக்காலப் படங்களும், கட்டுரை, கதை, வாழ்த்துக் கவிதைகள் நிறைந்த மலரை படித்து, நண்பர்களுடனும் பகிர்ந்து மகிழுங்கள்


மீண்டும் எனது நல்வாழ்த்துக்களை திருமதி.சுபாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்!!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக