செவ்வாய், 18 ஜூன், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்....


அன்புச் சகோதரர் திரு.தனுசு குறுங்கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவரது குறுங்கவிதைகள் சிலவற்றை 'ஆலோசனை தொகுப்பில்' வெளியிட அன்புடன் இசைந்துள்ளார். இதோ அவரது குறுங்கவிதைகளில் சில இங்கு...

அனிச்சை செயல்

அன்று
பத்தாம் வகுப்பு படிக்கும் போது
இயற்பியலில்
"அனிச்சை செயல்" பற்றிய பொருள் விளங்காது

இன்று
இளம் நங்கைகள்
என்னை கடந்து போகயில்
என்
இளந்தொந்தி
என்னையறியாமல்
உள் வாங்கும் போது
அந்த
அனிச்சை செயலின் பொருள் விளங்கியது.
 =======================


மெழுகுவர்த்தி....

தாத்தாவுக்கு
தொண்ணூறாவது பிறந்த நாள் விழா!
சுற்றிலும் குடும்பத்தார்
கேக் வெட்ட அழைத்து வந்தோம் அவரை

அந்த பாச மிகு காட்சியைப் பார்த்து
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தியும்
ஆனந்தக் கண்ணீர் விட்டது...
==========================

திருநங்கை

பிரம்மா
இனி நீ
இரவில்
ஓவர் டைம் பார்க்காதே
பார்
நீ பணிச்சுமையால்
செய்திருக்கும் குழப்பத்தை.
 =====================================

-தனுசு-

8 கருத்துகள்:

  1. யதார்த்தமான வரிகள் அனைத்தும் அருமை... தொடருங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால் அவர்களே. கண்டிப்பாய் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. குறுங்கவிதைகள் அருமை..
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. கவிதைகளை ரசித்து பாராட்டிய ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் ரசிக்கும்படி உள்ளது

    பதிலளிநீக்கு
  6. பிரும்மா ஓவர் டைமிலே செய்த மிஸ்டேக்கா ?

    டபிள் த வேஜஸ் வாங்கிண்டும் ஒருவன் மிஸ்டேக் செய்யறான்னா அவனை
    அந்த வேலைலேந்து தூக்கணும்.

    அந்த கவிதை சின்னது தான். ரசித்தேன் அப்படின்னு சொல்ல முடியவில்லை.
    என்ன சொல்லட்டும் ?

    அழுதேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. கவிதையை ரசித்து பாராட்டிய கவியாழி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. சுப்பு தாத்தா அவர்கள் ; "அந்த கவிதை சின்னது தான். ரசித்தேன் அப்படின்னு சொல்ல முடியவில்லை.
    என்ன சொல்லட்டும் ?

    அழுதேன்.

    இதுவரை நான் எழுதிய பல கவிதைகளுக்கு பாராட்டும், உற்சாகமூட்டும் வார்த்தைகளும் பலப்பல கிடைத்தன. இன்று என்னை புல்லரிக்க வைத்தது தாங்களின் கருத்துரையில் வந்த அந்த 'அழுதேன்' எனும் வார்த்தை.

    பிறப்பது நம் கையில் இல்லாத போது ஏன் இந்தப் பிறப்புக்கு மட்டும் இப்படி ஓரு ஏளனம்.ஏறக்குறைய சமுதாயத்தை விட்டு ஒதுக்கியோ ஒதுங்கியோ இருப்பதும் யாரால்?.

    தாங்களின் கருத்தில் வந்த

    //// "பிரும்மா ஓவர் டைமிலே செய்த மிஸ்டேக்கா ?

    டபிள் த வேஜஸ் வாங்கிண்டும் ஒருவன் மிஸ்டேக் செய்யறான்னா அவனை
    அந்த வேலைலேந்து தூக்கணும்'//// இது நகைசுவையாக இருந்தாலும் தாங்களின் அந்த அழுதேன் எனும் வார்த்தையும் தாங்களை அவர்கள் எந்தளவுக்கு பாதிதிருக்கிறார்கள்
    .என்பது புரிகிறது.

    இறை மனது உள்ளவர்கள் தான் அடுத்தவர்களுக்காக அழுவார்கள், தாங்களின் மேன்மையான அந்த மனம் கண்டு உள்ளபடியே நெகிழ்கிறேன் ஐயா.

    நன்றிகளுடன்
    -தனுசு-

    பதிலளிநீக்கு