சனி, 12 ஜூலை, 2014

THALATTU!...தாலாட்டு!!!..

எங்க குடும்பத்தில குழந்தை பிறந்தா தொட்டிலிடும் போது பாடும் பாட்டு இது.. திரு.ஐயப்பன் கிருஷ்ணன்(ஜீவ்ஸ்) அவர்கள் சொன்னதற்கிணங்க முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.. இங்கயும் பதிவு பண்ணலான்னு ஒரு எண்ணம்..யாராச்சும் நிசமா, தாலாட்டு பாடணுன்னு ஆசைப்பட்டா தாராளமா இந்த பாட்ட ட்ரை பண்ணுங்க..



வைகுந்த வாழ்பதியோ!..வசுதேவ புத்திரரோ!
தீராத எம் குறையை தீர்க்க வந்த வெண்மதியோ
மாதேவர் கண்மணியோ மணியுள்ள பூஷணமோ
பூலோகம் வாழவந்தோ புண்ணியரோ என்னுயிரோ!

(வைகுந்த...)

தங்கத்தில் பாலாடை, தனிப்பவளத் தாழ்வடமும்
தட்டாமல் தந்திடுவார் தங்கமான அம்மானும்
தவங்கிடந்து பெத்தெடுத்த தங்கச்சிலை நீயுறங்க‌
தந்தத்தால் தொட்டிலிட்டுத் தந்தாராம் தாத்தாவும்

(வைகுந்த...)

முப்பிரிக் காப்புமிட்டு முத்தமிட்டாள் அத்தையடா!
முன்னோர்கள் ஆசி பெற‌ பூஜை செய்தார் தந்தையடா!
மையிலே பொட்டுமிட்டு மகிழ்ந்திருந்தாள் பாட்டியடா!
மன்னவனே கண்வளராய்! மகிழ்வுடனே கண்வளராய்!

(வைகுந்த...)

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. அழகான தாலாட்டு..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆராரோ ஆரிராரோ
    நான் பெற்ற பிள்ளைத்தேரோ
    ஊராரும் உண்டு மகழும்
    இனிப்பான
    கன்னித்தேனோ.

    எனக்கு விருத்தத்தில்
    விருந்து வைக்கும்
    வற்றாத உன் சிரிப்பு

    என் அருத்தத்தை
    அறிந்து கொண்டேன்
    உனக்கு ஆண்டுகள் நூறு
    அதற்கு நான் பொறுப்பு.

    கண்பட்டு துடிக்கிறேன்
    உன் வசீகர வனப்பின்
    பிறப்பால் இன்று

    உன்னோடு
    நானும் துயில்கிறேன்
    உன் கண்ணுறக்க அழகில்
    கிறக்கம் கொண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப அழகான, அருமையான கவிதை சகோதரரே!.. மிக்க நன்றி!

      நீக்கு