1.நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
இளம் வயதினராக, ஒருவரோடு ஒருவர் பரஸ்பரம் இணைந்து, சிவசக்தி ஸ்வரூபராகவும், மலைமகளோடும், வ்ருஷப கொடியோடும் அருட்காட்சி தந்தருளும் சங்கரர், பார்வதிதேவி இருவருக்கும் நமஸ்காரம்.
2.நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்
சிவனும் சிவையும், (தாம் இருவரும்) இணைதலாகிய இனிய விழா கண்டும், தம்மை நமஸ்கரித்த பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தும், ஸ்ரீ நாராயணன் விரும்பி அர்ச்சிக்கும் பாதுகைகளைக் கொண்டும் விளங்கும் ஸ்ரீ சங்கரர், பார்வதி தேவிக்கு எங்கள் நமஸ்காரம்.
3.நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!
ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவர்களும்,, பிரம்மா, விஷ்ணு தேவேந்திரன் முதலியவர்களால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி சந்தனம் முதலியவை தரித்தவரகளுமான, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதிதேவிக்கும் நமஸ்காரம்.
4. நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
இந்த ஜகத்தையே காத்தருளும் லோக நாயகனும் நாயகியும் ஆனவர்களாயும், வெற்றித்திருவுருவாய் விளங்குபவர்களாயும், இந்திராதி தேவர்களால் போற்றப்படுகிறவர்களாயும் விளங்குகிற ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.
5. நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
பிறவிப்பிணிக்கு அருமருந்தானவர்களாயும் 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தாகிய கூண்டில், (கிளிகளாக) விளையாடுபவர்களாயும், இவ்வுலகனைத்தையும் படைத்தும் காத்தும் பிரளய காலத்தில் ஒடுக்கியும் அருளும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.
6.நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
மிக சுந்தரமான தோற்றமுடைய சிவனாரும், சிவையாகிய சக்தியும், மிகவும் அத்யந்தமாக, தமது உள்ளத்தாமரைகளால் இணைந்து இருக்கிறார்கள். இவ்வுலகனைத்துக்கும் நன்மை செய்பவர்களாய் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதிக்கும் நமஸ்காரம்.

கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
கலிதோஷம் நீக்குபவராயும், மங்கலமான சரீரம் கொண்டவராயும், கைலாஸத்தில் வாசம் செய்யும் இறைவருமான ஸ்ரீசங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.
8.நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
(மும்)மலங்களைப் நீக்குபவரும், இவ்வுலகனைத்திலும் உயர்ந்தவரும், உள்ளார்ந்த தியானத்தில் தேக்கப்பட்டவருமாயும் இருக்கிற ஸ்ரீ சங்கரருக்கு, பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.
9.நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
பௌர்ணமி நிலவு போன்ற திருமுகத்தாமரைகளுடனும், சூர்ய. சந்திர, அக்னியாகிய முக்கண்களுடனும், தேரை வாகனமாகக் கொண்டு செல்பவர்களான, ஸ்ரீசங்கரருக்கும் பார்வதிதேவியருக்கும் நமஸ்காரம்.
10.நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
ஜடாமுடி அணிந்தும், மூப்பு, இறப்பு முதலியவை இல்லாதவராயும், விஷ்ணு, பிரம்மாதி தேவர்களால் பூஜிக்கபடுபவராயும் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.
11.நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
முக்கண்கள் உடையவராயும், வில்வ தளம், மல்லிகை மாலை இவற்றை தரித்தவராயும், சோபை, சாந்தம் முதலியவற்றின் நாயகராயும் மிளிர்கின்ற ஸ்ரீசங்கரருக்கும், பார்வதிதேவிக்கும் நமஸ்காரம்.
12.நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
'பசு' எனப்படுகின்ற, ஜீவாத்மாக்களைப் பாதுகாப்பவராயும், இவ்வுலகனைத்தையும் காப்பதையே எப்போதும், மனத்தில் வைத்தவராயும், அனைத்து தேவாசுர கணங்களால் போற்றப்படுபவராயும் இருக்கின்ற, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.
13.ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!!
பன்னிரண்டு பத்யங்களைக் கொண்ட இந்த ஸ்லோகத்தை அனுதினமும், பக்தியுடன், மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்பவர், ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து, நூறாண்டுகள் வாழ்ந்து முடிவில், சிவலோகப் ப்ராப்தி அடைவர்.
வெற்றி பெறுவோம்!!!!!