எல்லோரையும் போல்
எனக்கும்
மாலை சூடி
மேளம் கொட்டி
ஊரும் உறவும் சூழ
கல்யாணம் நடந்தது!
வறுமையில் திண்டாடியபோதும்
குலம் தழைக்க
கண்ணா
நீ பிறந்தாய்
கொண்டாடினோம்!
இன்று நீ
குழந்தை தொழிலாளி!
"கூடாது" என்று சட்டம் சொல்கிறது!
வறுமை கூடாது என
சட்டம் இயற்ற முடியாத இவர்களால்
நான் எங்கு போய் முட்டிக்கொள்ள?
நீ
கருவறையில் உறங்குகையில்
நான்
விழித்தூக்கம் இழந்தேன் உனக்காக!
இந்த உலகை காக்க வருபவன்!
ஊரை ஆள வருபவன்!
கனவில் மிதந்து
எண்ணியே சுமந்தேன்!
வேர் விட்டிருந்த வறுமையால்
மழையும் வெயிலும் மறந்து
கல்லும் மண்ணும் சுமந்தேன்!
உடல் சோர்ந்து
ஓய்வை தேடிய போதும்
அது எனக்கு
வலியும் வேதனையும் தரவில்லை உன்னால்!
உன்னை உலகுக்கு கொண்டுவர
இந்த
வலுவில்லா தேகம் பட்ட வேதனை கேட்டால்
வலுவான கோட்டையும் அழுதுவிடும்!
மூச்சை உள்ளிழுத்து
முக்கி
பனிக்குடம் உடைத்து
உறையை கிழித்து
குருதி பொங்க
உன் நிலவு முகத்தை
நிலத்தில் விழவைத்தேன்!
அன்று பட்ட வேதனைகள் தாண்டி
இன்று என்
கண் பார்க்கும் வேதனை என் சொல்வேன்?
இதற்குதானா
உன்னை
இந்த உலகுக்கு கொண்டுவந்தேன்!
என் வறுமை என் பிள்ளை வரை தொடருவதா?
இறைவன்
பொதுவானவன் என்றால்
ஏழையை ஏன் படைத்தான்!
"உலகை ஆள்பவன் இறைவன்"
இது மிகப்பொருத்தம்!
ஆனால்
நாட்டை ஆள்பவரெல்லாம் ஊழல்வாதி!
நாளும் சிக்கிச் சிதைவதோ
ஏழைகள் இலாகாதான்.
ஓரெட்டு பணிசெய்ய
அதை
ஐந்தெட்டு பார்த்திருக்க வைத்த
வறுமையின் உருவமே!
நீ மறைந்தே இரு
கண்ணுக்கு தெரிந்தால்
உன்னை கூறு போட
ஏழைகள் கூட்டம் காத்திருக்கு.
-தனுசு-
நன்றி படம் உதவி -தினமலர்.
இது தகவல்.
14 வயதுக்கு உட்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் குழந்தைகள்.
இவர்களை எந்த பணியில் அமர்த்தினாலும் அது குற்றமே.
பிச்சை எடுக்க வைத்தல். குழந்தைகள் மீது வன்கொடுமை, துன்புறுத்துதல்,தெருவோரம் அலையும் அனாதை குழந்தைகள் போன்ற அவலங்களைப் பார்க்கும் போது உடனடியாக நாம் தொடர்பு கொள்ள வேண்டியது 1098 என்ற சைல்ட் லைன்.
அன்புடன்
-தனுசு-
I really appreciate this post. I have been looking all over for this! Thank goodness I found it on Bing. You’ve made my day! Thx again
பதிலளிநீக்கு