வெள்ளி, 28 செப்டம்பர், 2012

UMA MAHESHWARA STHOTHRAM.....ஸ்ரீ உமாமஹேச்வர ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஆதிசங்கரரால் அருளப்பட்டது இந்த உமாமஹேச்வர ஸ்தோத்திரம். உமாமகேச்வர விரத தினமான, புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று, விரதமிருந்து, சிவபெருமானை பக்தியுடன்  பூஜித்து, இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.  இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்பவர் , ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து முடிவில் சிவலோகமடைவர் என்று பலஸ்ருதி கூறுகிறது. இந்த விரதம் பற்றிய செய்திகளை அறிய இங்கு சொடுக்கவும்.

1.நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

இளம் வயதினராக, ஒருவரோடு ஒருவர் பரஸ்பரம் இணைந்து, சிவசக்தி ஸ்வரூபராகவும், மலைமகளோடும், வ்ருஷப கொடியோடும் அருட்காட்சி தந்தருளும் சங்கரர், பார்வதிதேவி இருவருக்கும் நமஸ்காரம்.

2.நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

சிவனும் சிவையும், (தாம் இருவரும்)  இணைதலாகிய‌  இனிய விழா கண்டும், தம்மை நமஸ்கரித்த பக்தர்களுக்கு வேண்டும் வரம் தந்தும்,  ஸ்ரீ நாராயணன் விரும்பி அர்ச்சிக்கும் பாதுகைகளைக் கொண்டும் விளங்கும் ஸ்ரீ சங்கரர், பார்வதி தேவிக்கு எங்கள் நமஸ்காரம்.

3.நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!

ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவர்களும்,, பிரம்மா, விஷ்ணு தேவேந்திரன் முதலியவர்களால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி சந்தனம் முதலியவை தரித்தவரகளுமான, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதிதேவிக்கும் நமஸ்காரம்.

4. நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

இந்த ஜகத்தையே காத்தருளும் லோக நாயகனும் நாயகியும் ஆனவர்களாயும், வெற்றித்திருவுருவாய் விளங்குபவர்களாயும், இந்திராதி தேவர்களால் போற்றப்படுகிறவர்களாயும் விளங்குகிற ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

5. நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

பிறவிப்பிணிக்கு அருமருந்தானவர்களாயும்   'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தாகிய கூண்டில், (கிளிகளாக) விளையாடுபவர்களாயும், இவ்வுலகனைத்தையும் படைத்தும் காத்தும் பிரளய காலத்தில் ஒடுக்கியும் அருளும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

6.நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

மிக சுந்தரமான தோற்றமுடைய சிவனாரும், சிவையாகிய சக்தியும், மிகவும் அத்யந்தமாக, தமது உள்ளத்தாமரைகளால் இணைந்து இருக்கிறார்கள். இவ்வுலகனைத்துக்கும் நன்மை செய்பவர்களாய் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதிக்கும் நமஸ்காரம்.
7.நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

கலிதோஷம் நீக்குபவ‌ராயும்,  மங்கலமான‌ சரீரம் கொண்டவராயும், கைலாஸத்தில் வாசம் செய்யும் இறைவருமான‌  ஸ்ரீசங்கரபார்வதியருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.

8.நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

(மும்)மலங்களைப்  நீக்குபவரும், இவ்வுலகனைத்திலும் உயர்ந்தவரும், உள்ளார்ந்த தியானத்தில் தேக்கப்பட்டவருமாயும் இருக்கிற ஸ்ரீ சங்கரருக்கு, பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.

9.நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

பௌர்ணமி நிலவு போன்ற திருமுகத்தாமரைகளுடனும், சூர்ய. சந்திர, அக்னியாகிய முக்கண்களுடனும்,  தேரை வாகனமாகக் கொண்டு செல்பவர்களான, ஸ்ரீசங்கரருக்கும் பார்வதிதேவியருக்கும் நமஸ்காரம்.

10.நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

ஜடாமுடி அணிந்தும், மூப்பு, இறப்பு முதலியவை இல்லாதவராயும், விஷ்ணு, பிரம்மாதி தேவர்களால் பூஜிக்கபடுபவராயும் இருக்கும் ஸ்ரீ சங்கரருக்கும், பார்வதி தேவிக்கும் நமஸ்காரம்.

11.நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

முக்கண்கள் உடையவராயும்,   வில்வ தளம், மல்லிகை மாலை இவற்றை தரித்தவராயும்,  சோபை, சாந்தம் முதலியவற்றின் நாயகராயும் மிளிர்கின்ற ஸ்ரீசங்கரருக்கும், பார்வதிதேவிக்கும்  நமஸ்காரம்.

12.நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

'பசு' எனப்படுகின்ற,  ஜீவாத்மாக்களைப் பாதுகாப்பவராயும், இவ்வுலகனைத்தையும் காப்பதையே எப்போதும், மனத்தில் வைத்தவராயும், அனைத்து தேவாசுர கணங்களால் போற்றப்படுபவராயும் இருக்கின்ற, ஸ்ரீ சங்கரருக்கும் பார்வதி தேவிக்கும் எங்கள் நமஸ்காரம்.

13.ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!!

பன்னிரண்டு பத்யங்களைக் கொண்ட இந்த ஸ்லோகத்தை அனுதினமும், பக்தியுடன், மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்பவர், ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து, நூறாண்டுகள் வாழ்ந்து முடிவில், சிவலோகப் ப்ராப்தி அடைவர்.

வெற்றி பெறுவோம்!!!!!

2 கருத்துகள்:

 1. I've read some good stuff here. Definitely worth bookmarking for revisiting.
  Welcome to my blog [url=http://www.about-dogs.zoomshare.com/]www.about-dogs.zoomshare.com[/url].

  பதிலளிநீக்கு
 2. அம்மையப்பனை அனுதினமும் தொழுது
  அவர் தம்அடி வாழ
  எம்மையும் ஆட்கொள்வாய் ஏகனே என்றே
  இம்மையில் மறுமை வேண்ட
  தம்மோடு எம்மையும் ஆற்றுப் படுத்திய
  சிவபார்வதி சிநேகரையும் போற்றுதுமே!
  ஓம் ஸ்ரீ ஆதிசங்கராய நம!
  ஓம் நவப் பார்வதி பதையே!
  ஓம் நமசிவாய!!!

  நல்லதொரு திருப்பணி! அருமையானப் பதிவு!!
  பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி!!!

  பதிலளிநீக்கு