செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தி

இன்று
அண்ணலின் ஜெயந்தி.
இந்த
அழகிய  ஜோதி
அகிம்சை ஓத
அவதரித்த போதி.!

இந்த 
மூர்த்தி
விடுதலையை 
சுவாசிக்கத்   தந்த திருமூர்த்தி !

இன்றும்
வாழும் ஒரே ஆத்மா
இந்த மகாத்மா!

இந்த 
வெற்றுடம்புக்குள்
எப்படி வந்தது
அப்படி ஒரு அமைதி.
இந்த 
குச்சி உடம்புக்குள்
எப்படி வந்தது
அப்படி ஒரு வைராக்கியம்!

தடி ஊன்றியபின்பும்
தண்டியில் தடம் பதித்து
வெண்முடி வீழ்த்தினார்
நம் கொடியேற்றினார் !

இந்த
வையகம் வியக்கும் வெற்றி
இவருக்கு கொடுத்த கிரகம்
சத்தியாக்கிரகம்!

இந்த
பிதாவையும்
பாரதமாதாவையும்
பிள்ளைகள் ஒன்றுகூடி
இன்று வணங்குகிறோம்
ஜெய்ஹிந்த்!
-தனுசு-

வெற்றி பெறுவோம்!!!!

3 கருத்துகள்:

  1. கவிதையை வெளியிட்ட சகோதரி பார்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    அண்ணலின் பிறந்த நாளில் அவரைப்பற்றிய சில செய்திகள்.

    காந்தியின் மனைவி இறந்த பின் தகனம் செய்யப்பட்டார்.சில மணி நேரத்துக்கு பிறகு ரகுனாத் என்பவர் ,அதனை பார்வையிட சென்றார். சிதையை பார்த்த ரகுனாத் ஆச்சரியப்பட்டார், அங்கு இரண்டு கண்ணடி வளையல்கள் எதுவும் ஆகாமல் அப்படியே கிடந்தன. நேராக காந்தியிடம் சொல்லி அவரை அழைத்துவந்து கான்பித்தார். அதைப்பார்த்த காந்தி அதனை எடுத்து தன்னோடு வைத்துக்கொண்டார், மேலும் கஸ்தூரிபா சிறந்த பதிவிரதை அதனால் இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்றார்.

    ராபர்ட் பெயின் என்பவர் எழுதிய "The life and death of Mahathma" எனும் புத்தகத்தில். இந்த குறிப்பை கானலாம்.


    பதிலளிநீக்கு
  2. ஆஹா! அற்புதம் கவிஞரே!
    மகாத்மாவை போற்றும் அழகியைக் கவிதை.
    இன்றும் நம்மோடு வாழும் ஆத்மா
    இந்த மகாத்மா!!! அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

    Its a amazing message that you have given Mr. Thanusu. I will try to find that book and read it. Thanks.

    பதிலளிநீக்கு
  3. ஜி ஆலாசியம் said...ஆஹா! அற்புதம் கவிஞரே!
    மகாத்மாவை போற்றும் அழகியைக் கவிதை.
    இன்றும் நம்மோடு வாழும் ஆத்மா
    இந்த மகாத்மா!!! அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

    கவிதையை ரசித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றிகள் ஆலாசியம். இனைய தொடர்பு பிரச்சினையாலயே என்னால் தொடர்ந்து ஆலோசனை தொகுப்புக்கு வர முடியவில்லை. மீண்டும் நன்றிகள் ஆலாசியம்.

    பதிலளிநீக்கு