வெள்ளி, 9 நவம்பர், 2012

GANGASHTAKAM.....கங்காஷ்டகம்


இந்தப் பாரத பூமியின் பெருமைகளுள் ஒன்றான, வற்றாத ஜீவ நதியாக விளங்கும் கங்கையின் பெருமைகளை சொல்லி முடியாது. எவனொருவன், மரணத்தருவாயில் கங்காஜலத்தை ஒரு துளியேனும் அருந்தி உயிர்விடுகிறானோ அவன் மரணமில்லாப்பெருவாழ்வை அடைகிறான். கங்காமாதா, தன்னில் நீராடுபவர் மட்டுமில்லாமல், தன்னை நினைத்துப் பூஜிப்பவர்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலை தருகிறாள். கங்கையின் மகிமைகளை விவரிக்கும் கங்காஷ்டகம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் அருளப்பட்டது. தீபாவளி தினத்தில், கங்காஷ்டகத்தை பாராயணம் செய்வ்தால், கங்காமாதாவின் பரிபூரண அனுக்கிரகம் கிடைத்து, வேண்டுவனவற்றை எல்லாம் பெறலாம்.

பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி |
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி ||

சிவனாரின், ஜடாமுடிமேல், மாலையாக இருக்கும் கங்கையே, உன் அணுவளவு நீரை எவர் பருகுகிறாரோ, ஸ்பரிசிக்கிறாரோ, அவர், சுவர்க்க லோக வாசம் பெறுவர்.

ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ|
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது||

பேரண்டத்தை உடைத்துக் கொண்டும், சிவனாரின், ஜடாமுடியில் சலசலத்துக் கொண்டும், சுவர்க்கத்திலிருந்து கீழே வந்து, மேருவின் குகையின் அருகிலிருக்கும் குன்றிலிருந்து பூமியில் விழுந்து, ஓடி, மானிடர்களின் பாவமூட்டையை விரட்டியடித்து, அதற்குப் பின் சமுத்திரத்தில் கலந்து விடும் புனித கங்கை நம் எல்லோரையும் பரிசுத்தமாக்கட்டும்.

மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி|
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் ||

யானைகளின் துதிக்கைகளும், முதலைகளும் கங்கையின் வேகத்தை கொஞ்சம் தடை செய்கின்றன. சித்த மாதர்கள் குளிக்கும் போது, அவர்கள் நெஞ்சில் அணிந்துகொண்டிருகும் குங்குமம் கரைவதால், கங்கை சற்று மஞ்சள் நிறமுள்ளதாக விளங்குகிறது. அதிகாலை, மாலை வேளைகளில், முனிவர்கள் பூஜைசெய்வதால், தர்ப்பை, பூக்கள் ஆகியவை கரையோரமாக மிதந்து செல்கின்றன. கங்கையில் மூழ்கிக் குளிக்கும் யானைகளின் காதோரம் வழியும் நீர்ப்பெருக்கால், வாசனை நிரம்பியதாகவும், அதனால் வண்டுகள் மொய்க்கும்படியாகவும் விளங்கும் நீரை உடையதாக விளங்குகிறது கங்கை. அத்தகைய கங்கையின் பிரவாகம் நம்மைக் காக்கட்டும்.

ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்|
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் ||

ஆதியில், ஆதிபிதாமஹர் என்று கூறப்படும் பிரம்ம தேவனின் நித்ய கர்மானுஷ்டானங்களுக்கான பாத்திரத்தில் இருக்கும் நீராகவும், அதன் பின், ஆதிசேஷனின் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் பகவான் ஸ்ரீமந் நாராயணனின் பாதத்தில் வசிப்பவளாகவும், அதன்பின், சிவனாரின் ஜடாமுடியின் பூஷணமாகவும் திகழும் ஜஹ்நு மஹரிஷியின் புதல்வியாகிய, பாவங்களைப் போக்கக் கூடிய கங்கை என்னைக் காக்கட்டும்.

சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ |
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ |
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ |
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி ||

கங்கை இமயத்தில் உற்பத்தியாகி, தனது நீரில் நீராடும் மக்களை உய்விக்கிறாள்.  அவர்களின் சம்சார பயத்தை நீக்கி சமுத்திரத்தில் கலக்கிறாள். ஆதி சேஷன் போலும், சிவனாரின் சிரசில் வில்வதளம் போலும் விளங்குகிறாள். அத்தகைய பெருமை வாய்ந்த கங்கை காசியில் ஓடி வருகிறாள்.

குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி |
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: ||

கங்கா மாதா!!, உன் நீரலை ஒருவர் மேல் பட்டு விட்டால், அவருக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. உன் தீர்த்தத்தை சிறுதுளி யேனும் பருகிவிட்டால் அவருக்கு சுவர்க்க வாசம் நிச்சயம். பெருகி ஓடும் உன் பிரவாகத்தில் ஸ்நானம் செய்தவருக்கு தேவேந்திரப் பதவி கூட எளிதாகக் கைகூடும்.

பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி |
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத ||

பகவதி தேவியான கங்கா தேவியே!, மின்னும் அலைகளைக் கொண்டவளே!!, எல்லா பாவங்களையும் அகற்றுபவளே !!, சுவர்க்கத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!!, உன் கரையோரம், உன் தீர்த்தத்தை மட்டும் பருகி, ஸ்ரீ கிருஷ்ணரை ஆராதிக்கிற என் மேல் மனமிரங்கி அருள்வாய்.

மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

தாயே ஜாஹ்னவி!!, சங்கரரோடு இயைந்திருப்பவளே!!, உன் கரையில் தங்கி, தலைமேல் கைகளைக் கூப்பிக் கொண்டு, ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், என் (உடலை விட்டு)பிராணன் பிரயாணம் செய்யும் சமயமும் வரலாம். அந்த நேரத்திலேனும், ஹரியும் ஹரனும் வேறு வேறானவர்கள் அல்லர் என்னும் நிலையான பக்தி எனக்கு உண்டாகட்டும்.

கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி ||

இந்த கங்காஷ்டகத்தை தூய்மையான மனதுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்பவரது பாவ‌மெல்லாம் நீங்கி, அவர்கள் விஷ்ணு லோகத்தை அடைவார்கள்.

வெற்றி பெறுவோம்!!!!

4 கருத்துகள்:

  1. If possible,please include also a devanagiri script for the sloka.

    subbu thatha.
    www.pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. //////sury Siva said...
    If possible,please include also a devanagiri script for the sloka.

    subbu thatha.
    www.pureaanmeekam.blogspot.com////

    Thank you so much sir. I'll try to do that.






    பதிலளிநீக்கு
  3. Somebody was telling to my wife who is poorva aashata(pooratam) people shall pray to ma ganges to better in life. i was searching for her. very nicely done. best wishes and please continue

    பதிலளிநீக்கு
  4. Poorva aashata(pooradam) people needs to chant ma ganges glory. well done.

    பதிலளிநீக்கு