சனி, 8 டிசம்பர், 2012

தனுசுவின் கவிதைகள்......என் அம்மாவின் ஆசி



இவள்
உறவுகளில் திருக்குறள்
உணர்வுகளில் மறைபொருள்
இவளை
நினைத்தால் உயிர்க்கும்
அழைத்தால் சிலிர்க்கும்
அவள்
என் அம்மா.

கருவறையில்
நான்
உறக்கம் கலைத்தபோது என்னை
உருக்குலையாமல்
உலகில் அவதரிக்க வைத்தது....

திருவாய் மலர்ந்து
அவளை
உச்சரிக்க முயன்றபோது
உச்சந்தலை முகர்ந்து
இன்னும் பேசத் தந்தது......

பள்ளி சென்ற போது
முதல் புள்ளி வாங்க வைத்தது.....
துள்ளி ஆடிய போது
இவன் கில்லி என்று பெயரானது.....

பட்டம் பெற்றது....
அதனால்
புகழ் பெற்றது.....
பொருள் பெற்றது.....
அதை தந்து
பெயர் பெற்றது....

உடல் நலம்
பெற்று இருப்பது...
விபத்திலிருந்து
என் உயிர் மீட்பது....
வீண் பழியிலிருந்து
எனைக் காப்பது.....

இன்னும்.....

இடி மழைக்கு
சலசலக்காத
காட்டுமரமானது....
எதையும் எதிர்கொள்ள
அலைமீது ஓடும்
கட்டுமரமானது.....

சுமை ஏறும் போதெல்லாம்
சுகம் உணரச் செய்தது
என்னை
ஆலமரமாக்கி
பரவசம் தருவது....

இவை யாவும் எனக்கு
உன் ஆசியின்றி வேறில்லை
என் அம்மா.

-தனுசு-

1 கருத்து:

  1. தாயும் தாய்ப்பாசமும்
    தூய்மை என்பதை
    சொல்லாமல் சொல்லுது
    இந்த பால்வண்ணப் படம்.

    பால் குடித்த களைப்பில்
    தாயின் மார்பில்
    உறங்குது குட்டி "நானோ"
    என் தாயிடமும்
    நான்
    இப்படித்தான் இருந்திருப்பேனோ?

    பதிலளிநீக்கு