திங்கள், 31 டிசம்பர், 2012

HAPPY NEW YEAR 2013.....புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைய நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றெ அகங்களித்தல்வேண்டும்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவேதருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தளமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

...................... (அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.)
வாசகப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களது ஆசியாலும், தொடர்ந்து நீங்கள் தரும் நல் ஆதரவாலும் மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து வரும் ஆண்டிலும், 'ஆலோசனை'க்கும் 'ஆலோசனைத் தொகுப்பு'க்கும் உங்கள் மேலான அன்பையும் ஆதரவையும் ஆசிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். 

மிக்க நன்றியுடனும் அன்புடனும்

பார்வதி இராமச்சந்திரன்.


வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வதெனத்தெரியவில்லை.

  காலை முதலிருந்தே என் பதிவிலே 2013 துவக்கத்திலே நமக்கெல்லாம் என்னென்ன வேண்டும் என்னென்ன வேண்டாம்
  என அற நெறிப்பாதையிலே சில கருத்துக்களைச் சொல்லல்லாம் என இருந்த எனை உங்கள் பதிவு என் கண்களைக்
  குளமாகச் செய்தது.

  அருட்பெருஞ்சோதிதனை வழிபட்ட வள்ளலார் பாடலை நான் இன்று பாடி அதை யூ ட்யூபிலே போடுகிறேன்.
  தங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

  மற்றுமொருமுறை இவ்வழி காட்டிய தங்களுக்கு என் இதய பூர்வமான நன்றி.

  2013 ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள்.

  இன்று நாளை என்றெல்லாமல், என்றெல்லாம் இறை சிந்தனையுடன் ஒரு நாளைத் துவங்குகிறோமோ அதுவே நம் வாழ்விலே புது நாள்.
  திரு நாள்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 2. ////// sury Siva said...
  தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வதெனத்தெரியவில்லை///////

  தங்கள் வருகைக்கும் ஆசிகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  இறைவனது திருவருளே நம்மையெல்லாம் வழிநடத்துகிறது.

  /////2013 ஆண்டு புதுவருட வாழ்த்துக்கள்.

  இன்று நாளை என்றெல்லாமல், என்றெல்லாம் இறை சிந்தனையுடன் ஒரு நாளைத் துவங்குகிறோமோ அதுவே நம் வாழ்விலே புது நாள்.
  திரு நாள். //////

  தங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளையும் திருநாளாக ஆக்கிட தங்கள் ஆசியையும் இறையருளையும் மனமார வேண்டுகிறேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு