ஞாயிறு, 17 நவம்பர், 2013

THIRUVANNAMALAI THIRUKKAARTHIGAI DEEPATH THIRUNAAL (17/11/2013)...திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருநாள்!!
இந்தப் பாடலை, உயர்திரு.சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்க  கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கவும்... மிக அருமையாக, அழகாகப் பாடி அளித்திருக்கிறார். உயர்திரு.சுப்புத்தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள், பணிவான நமஸ்காரங்கள்.

பொன்னார் மேனியன் அண்ணாமலையான்
பொன்னடி போற்றித் தொழுதேத்தும் திருநாள்!!.
கண்ணுதற் கடவுளின் கழலிணை தொழுது
கார்த்திகை தீபம் காணும் ஒரு நன்னாள்!!.

விண்ணையும் மண்ணையும் படைத்ததொரு பரமன்
விண் கடந்து மண் கடந்து நின்றதொரு நன்னாள்!!.
வியந்ததனை திருமாலும் பிரம்மனும் போற்றி
விருப்போடு பூசைகள் செய்ததும் இன்னாள்!!.

முதலில்லா முடிவில்லா முக்கண்ண தேவன்
மூவுலகம் நிறைந்தொளிரும் சோதியான தின்னாள்!!.
முதலான பரமனை முனிவரும் அமரரும்
முக்தியைத் தரவேண்டித் தொழுததும் இன்னாள்!!.

கிரிவலம் செய்திட பவ வினை தீரும்
கிரியே சிவமாகித் தோன்றியதும் இன்னாள்!!.
சித்தரும் பக்தரும் முக்தரும் தொழுதே
சிவ சிவ என்றே செபித்திடும் நன்னாள்!!.

உண்ணாமலையம்மை உகந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலையாரின் அருளுறையும் திருத்தலம்!!.
கண்ணான யோகியர் கனிந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலை மகிமை சொன்னாலும் தீருமோ!!.

அண்ணாமலை தீபம் காண்பதும் பேறு!.
அண்ணாமலை என்றே சொல்வதும் பேறு!!.
அண்ணாமலை நினைக்க முக்தியே சேரும்!.
அண்ணாமலையானின் அடிதொழுது போற்றுவோம்!!

அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்

12 கருத்துகள்:

 1. திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும் என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா!!. தங்களுக்கும் என் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

   நீக்கு
 2. திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நன்றி டிடி சார்!!!.. தங்களுக்கும் என் திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!. இயன்ற போது, 'ஆலோசனை'க்கும் வருகை தரக் கேட்டுக் கொள்கிறேன்!!!!!.

   நீக்கு
 3. http://www.youtube.com/watch?v=DSe6blv7r68
  Everyone in the group singing a stanza in his/her own raaga and make the trip around the Annamalai hills a Divine Joy.
  I had a dream like this
  subbu thatha.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை. தொடர்ந்து என் பாடல்களை தங்களது குரலில் பாடி எனக்கு ஆசி அளித்து வருகிறீர்கள்!!. தாங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு எவ்விதத்தில் நான் ஈடு செய்ய முடியும்?!!!!. தங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்!!!!!

   நீக்கு
 4. அருமையான பதிவு. கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு என் பணிவான நன்றி ஐயா!!.. தங்களுக்கும் என் திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

   நீக்கு
 5. தினமும் நல்லன பெற வேண்டி
  திருமுன் வேண்டி நிற்கிறோம்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் தோழி ...!
  உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
  திருகார்த்திகையை முன்னிட்டு அண்ணாமலையானையும் போற்றி புகழ்ந்து பாடியது அருமை.
  சுப்பு தாத்தா இன்னும் அதை அவர் குரலில் பாடி மேலும் மெருகூட்டியுள்ளார். நன்றி தொடர்கிறேன் வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 7. தங்களை வருக!!.. வருக!!.. என மனமார வரவேற்கிறேன். அன்புத் தோழி, தங்கள் வருகை என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. மிக்க நன்றி!!..

  பதிலளிநீக்கு