சென்று வா வீரா
சச்சின் எனும் பெயரா
நீ
விளையாட்டரங்கத்தில்
வீறுகொண்டு வருவது
வீச்சருவாள் கைகொண்டா
வெட்டி வீழ்த்திடுவாய்
விருந்தும் வைத்திடுவாய்
அதனால் வயிறும் நிறைத்திடுவாய்
இன்று
வள்ளுவன் இருந்திருந்தால்
தன் ஈரடி குறளுக்குப் பதிலாக
ஓரடி குறள் எழுதியிருப்பான்
உன் அடியைப்பார்த்து
இளங்கோ இருந்திருந்தால்
மஹா பாரத புத்திரன் எனும்
இன்னுமொரு காவியம்
எழுதியிருப்பான் உன் சகாப்தம் பார்த்து
சீராப்புராணம் பாடிய
உமறுப்புலவர் இருந்திருந்தால்
உன்னை சீராட்டும்புராணம்
ஒன்று எழுதியிருப்பார்
அழிவில்லாத்தது
உன் ஆட்டக்கலை
அதனால்
உனக்குத் தேவையில்லை
எக்காலத்திலும்
ஒரு சிலை
உன் வரலாற்றுப்பக்கங்களில்
சாதனை சாதனை எனும்
வார்த்தைகள் இடம்பெற்று
அந்த வார்த்தையே சோர்ந்து விட்டது
தோழனே
நீ மட்டும் அசரவில்லை
உன் களப்பணியில்
எங்களை
மிகவும் கவர்ந்தது
சட்டத்திற்கு நீ பணிவது என்றால்
கொள்ளையிட்டது
ஆடுகள நாயகா....
நீ ஆட்டக்களத்தில்
பொழிந்ததெல்லாம்
ஓட்டங்களெனும் நயாகரா
இன்று உனக்கு
வீர வணக்கத்துடன்
விடைதருகிறோம்
வாழ்த்துக்கள் !
சென்று வா வீரா
சச்சின் எனும் பெயரா
-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்!!!
அற்புதமான ஆட்டக்காரருக்கு பொருத்தமான, நெகிழ்ச்சியான பாராட்டுரை சகோதரரே!!... அருமையான வரிகளால் புகழ் மாலை சூட்டியிருக்கிறீர்கள்.. மனமார்ந்த பாராட்டுக்கள்!!!!
பதிலளிநீக்குசிறப்பிற்கு சிறப்பு சேர்த்தீர்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமூன்றே வார்த்தையில் கவித்துவமாய் இருவருக்கும் ஒரு சேர பாராட்டு. மிக்க நன்றி T.T சார்.
நீக்குதொகுப்பு ஆசிரியருக்கு வணக்கம். தாங்களின் பாராட்டுக்கள் என் கவிதையைப்படித்து சச்சினே பாராட்டியது போல் உணர்ந்தேன் . தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் மேலும்
பதிலளிநீக்குமெருகூட்டுகிறது. அவரைபாராட்டினால் பக்கம் பக்கமாக பாராட்டலாம், அத்தனைக்கும் அவர் பொருத்தமானவர்.
சச்சின் எனும் இந்த மனிதன் நமக்கு கிடைத்தது நம் இந்தியரின் அதிர்ஷ்டம் என்றே சொல்வேன், எத்தனையோ வீரர்களுக்கு விடை கொடுத்தோம், ஆனால் இன்று இவருக்கு விடை கொடுக்கும் போது மும்பை வாங்கடே ஸ்டேடியம் தாங்கியிருக்கும் அந்த "நம் இதயம் அழுகிறது, முகம் சிரிக்கிறது" எனும் வாசகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது.
விளையாட்டின் நுட்பங்கள் இவருக்கு அத்துபடியானதை விட, ஒழுக்கமே இவரை உயர்த்தியது. காசுக்கு அடிபனியாத இந்த வீரன் காந்தி, கலாம் வரிசையில் சேருகிறார்,
அவரை நேரில் பார்த்து கை கொடுத்து அனுப்பமுடியா விட்டாலும், நம் உள்ள உணர்வை இதன் மூலம் உணர்த்தி நன்றியும் வாழ்த்துக்களையும் தருவதோடு விடையும் தருவோம்.
சகோதரரே!!!..உங்களது கவிதை வரிகளும், பின்னூட்ட வரிகளும், கிரிக்கெட்டின் மேலும், சச்சின் என்ற மாமனிதன் மேலும் தாங்கள் வைத்திருக்கும் மதிப்பைப் புலப்படுத்துவதை விடவும், தங்களது தேசப்பற்றையே அதிகமாகப் பறைசாற்றுகிறது....மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..
நீக்குதக்கதொரு சமயத்தில் அற்புதமானதொரு கவிதை தந்து, அதை வெளியிட வைத்து, 'தொகுப்பு' வலைப்பூவிற்கு பெருமை சேர்த்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!!..
ஒரு சின்ன அன்பு வேண்டுகோள்...
நாம் இருவருமே 'வகுப்பறையில்' படித்தவர்கள்...சக மாணவர்கள்... ஒரு தாய் பெறாவிட்டாலும் உடன் பிறந்தவரானவர்கள்.. ஆகவே 'தொகுப்பு ஆசிரியர்' என்ற அடைமொழி வேண்டாமென்று நினைக்கிறேன். சிறந்த கவிஞரான தங்களது திறமை, மேன்மேலும் புகழடைந்து ஒளிர வேண்டுகிறேன்..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
சாதனைத்திலகம் சச்சினைப் புகழ்ந்து கவிதை படைத்துள்ளதும் ஓர் சாதனை தான். இதை எழுதியவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு தங்களுக்கு என் நன்றிகள்.
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி வைகோ அவர்களே.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு