புதன், 22 மே, 2013

தனுசுவின் கவிதைகள்....குற்றம் செய்!

ஆற்றலுக்கு ஆணையும்
அழகுக்கு பெண்ணையும்
படைத்தது இயற்கை!
சில கண்ணில்லா காமாந்தகர்களால்

இந்த ஆற்றல்
ஆணாதிக்கமாக மாறுவதால்
அசிங்கப்பட்டு நிற்கும் ஆண்களில் நானும் ஒருவன்.

கலவி
அன்பின் உச்சம்
காமம்
கலவியின் கௌரவத்தை குறைக்கும் எச்சம்.

காமத்தின் கொடுமை
அதற்கு
கண்ணில்லாமல் போனது
காலத்தின் கொடுமை
அதை
கண்மூடி பார்ப்பது

பெண்
காமத்துக்கு படைக்கப்பட்ட உடமையா?
பெண்ணினத்தை
அப்படி நினைப்பது உலகத்தின் மடமையா?

பத்து வயது பூர்த்தியாக
பத்து நாள் இருக்கும்
பள்ளி செல்லும் பிள்ளை  மீது
பள்ளியறை சுகம் காண
பாயும் வெறியனையும்..

தன் மதி தவறும் போது
தங்கையையும்
தற்காலிக தாரமாக்க
நினைக்கும்
தரங்கெட்டவனையும்.....

சுற்றமோ
சொந்தமோ
யாருமின்றி சேலையோடு செத்துக்கிடந்தால்
சுடுகாட்டிலும்
பிணத்தை புசிக்கும் கழுகையும்....

புதரென்று பொருள் கொண்டு
புறம் தள்ளாமல்
இந்த உயிர்களை
மயிரென்று வெட்டித்தள்ள மனம் கொள்வோம்!

எதிர் கொள்ள நேரிடும்
இந்த சட்டத்தை
விட்டத்தில் போட்டு
சாட்டையை சுழற்றி நாம் ஒரு விதி செய்வோம்!

காமத்தின் உச்சத்தில்
சதை மேயும் மிருகத்தை
தயங்காமல்
நாமே அழித்து
கொன்றொழிக்கும் குற்றம் செய்வோம்!!!

-தனுசு-

படம் நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. சரியாகச் சொன்னீர்கள்...

  கொலை செய்தாலும் தவறில்லை...

  பதிலளிநீக்கு
 2. இனியொரு விதி செய்வோம்
  அதை எந்த நாளும் காப்போம்..

  பதிலளிநீக்கு
 3. கவிதையை ரசித்ததோடு இல்லாமல் என் மன நிலையையே உங்கள் கருத்துகளும் ஆமோதிப்பதை பார்க்கும் போது சரியான நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கிறேம் என்பது மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது. சாதாரன கவிதைகளுக்கு கிடைக்கும் பாராட்டைவிட மனதை தாக்கும் சம்பவங்களை கவிதையாக்கும் போது கிடைக்கும் பாராட்டும் ஆதரவும் இன்னும் சமூக அக்கரை கூடுகிறது.

  மதிப்பிற்குரிய தனபால் அவர்களுக்கும். ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் கவிதையை ரசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு