சனி, 16 நவம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்.....சச்சின்.!!!!

Sachin Tendulkar Rare Pics
சென்று வா  வீரா
சச்சின் எனும் பெயரா

நீ
விளையாட்டரங்கத்தில்
வீறுகொண்டு வருவது
வீச்சருவாள்  கைகொண்டா
வெட்டி வீழ்த்திடுவாய்
விருந்தும் வைத்திடுவாய்
அதனால் வயிறும் நிறைத்திடுவாய்

இன்று
வள்ளுவன் இருந்திருந்தால்
தன் ஈரடி குறளுக்குப் பதிலாக
ஓரடி குறள் எழுதியிருப்பான்
உன் அடியைப்பார்த்து


இளங்கோ இருந்திருந்தால்
மஹா பாரத புத்திரன் எனும்
இன்னுமொரு காவியம்
எழுதியிருப்பான் உன் சகாப்தம் பார்த்து

சீராப்புராணம் பாடிய
உமறுப்புலவர் இருந்திருந்தால்
உன்னை சீராட்டும்புராணம்
ஒன்று எழுதியிருப்பார்


அழிவில்லாத்தது
உன் ஆட்டக்கலை
அதனால்
உனக்குத்  தேவையில்லை 
எக்காலத்திலும்
ஒரு சிலை

உன் வரலாற்றுப்பக்கங்களில்
சாதனை சாதனை எனும்
வார்த்தைகள் இடம்பெற்று
அந்த வார்த்தையே சோர்ந்து விட்டது
தோழனே
நீ மட்டும் அசரவில்லை

உன் களப்பணியில்
எங்களை
மிகவும் கவர்ந்தது
சட்டத்திற்கு நீ பணிவது என்றால்
கொள்ளையிட்டது
உன் துணிவு

ஆடுகள நாயகா....
நீ ஆட்டக்களத்தில்
பொழிந்ததெல்லாம்
ஓட்டங்களெனும் நயாகரா
இன்று உனக்கு
வீர வணக்கத்துடன்
விடைதருகிறோம்
வாழ்த்துக்கள் !

சென்று வா வீரா
சச்சின் எனும் பெயரா

-தனுசு-





படங்கள் நன்றி: கூகுள் படங்கள்!!!

8 கருத்துகள்:

  1. அற்புதமான ஆட்டக்காரருக்கு பொருத்தமான, நெகிழ்ச்சியான பாராட்டுரை சகோதரரே!!... அருமையான வரிகளால் புகழ் மாலை சூட்டியிருக்கிறீர்கள்.. மனமார்ந்த பாராட்டுக்கள்!!!!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பிற்கு சிறப்பு சேர்த்தீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றே வார்த்தையில் கவித்துவமாய் இருவருக்கும் ஒரு சேர பாராட்டு. மிக்க நன்றி T.T சார்.

      நீக்கு
  3. தொகுப்பு ஆசிரியருக்கு வணக்கம். தாங்களின் பாராட்டுக்கள் என் கவிதையைப்படித்து சச்சினே பாராட்டியது போல் உணர்ந்தேன் . தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் மேலும்
    மெருகூட்டுகிறது. அவரைபாராட்டினால் பக்கம் பக்கமாக பாராட்டலாம், அத்தனைக்கும் அவர் பொருத்தமானவர்.

    சச்சின் எனும் இந்த மனிதன் நமக்கு கிடைத்தது நம் இந்தியரின் அதிர்ஷ்டம் என்றே சொல்வேன், எத்தனையோ வீரர்களுக்கு விடை கொடுத்தோம், ஆனால் இன்று இவருக்கு விடை கொடுக்கும் போது மும்பை வாங்கடே ஸ்டேடியம் தாங்கியிருக்கும் அந்த "நம் இதயம் அழுகிறது, முகம் சிரிக்கிறது" எனும் வாசகம் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது.

    விளையாட்டின் நுட்பங்கள் இவருக்கு அத்துபடியானதை விட, ஒழுக்கமே இவரை உயர்த்தியது. காசுக்கு அடிபனியாத இந்த வீரன் காந்தி, கலாம் வரிசையில் சேருகிறார்,
    அவரை நேரில் பார்த்து கை கொடுத்து அனுப்பமுடியா விட்டாலும், நம் உள்ள உணர்வை இதன் மூலம் உணர்த்தி நன்றியும் வாழ்த்துக்களையும் தருவதோடு விடையும் தருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரரே!!!..உங்களது கவிதை வரிகளும், பின்னூட்ட வரிகளும், கிரிக்கெட்டின் மேலும், சச்சின் என்ற மாமனிதன் மேலும் தாங்கள் வைத்திருக்கும் மதிப்பைப் புலப்படுத்துவதை விடவும், தங்களது தேசப்பற்றையே அதிகமாகப் பறைசாற்றுகிறது....மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..

      தக்கதொரு சமயத்தில் அற்புதமானதொரு கவிதை தந்து, அதை வெளியிட வைத்து, 'தொகுப்பு' வலைப்பூவிற்கு பெருமை சேர்த்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!!..

      ஒரு சின்ன அன்பு வேண்டுகோள்...

      நாம் இருவருமே 'வகுப்பறையில்' படித்தவர்கள்...சக மாணவர்கள்... ஒரு தாய் பெறாவிட்டாலும் உடன் பிறந்தவரானவர்கள்.. ஆகவே 'தொகுப்பு ஆசிரியர்' என்ற அடைமொழி வேண்டாமென்று நினைக்கிறேன். சிறந்த கவிஞரான தங்களது திறமை, மேன்மேலும் புகழடைந்து ஒளிர வேண்டுகிறேன்..

      அன்புடன்
      பார்வதி இராமச்சந்திரன்.

      நீக்கு
  4. சாதனைத்திலகம் சச்சினைப் புகழ்ந்து கவிதை படைத்துள்ளதும் ஓர் சாதனை தான். இதை எழுதியவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு தங்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி வைகோ அவர்களே.

    பதிலளிநீக்கு