செவ்வாய், 1 அக்டோபர், 2013

தனுசுவின் கவிதைகள்!!...காந்தி ஜெயந்தி!


காதி கட்டிய கிழவன்
இந்த
பெருங்கிழவன்!
இவன்
மோதி முட்டப் பணிந்தான்
பரந்து கிடந்த பரங்கியன்!.

மூத்திரை சகதியில் இருந்த
இந்த மூத்த இனத்தை
சூத்திரம் செய்து
பத்திரம் செய்தவன்!


இந்த
ஊருக்கு உழைத்தவனை
உலகுக்குச் சேர்த்தது
அவனது உண்மை!

அகிம்சை என்பதே
அவனின் எண்ணம்
அதை போதித்தான்
உலகம் புரியும் வண்ணம்!



உடைந்து கிடந்த இந்தியா
இடிந்து போன இந்தியர்
இகழ்ந்து பார்த்த உலகம்
இவனால்
திரும்பிப் பார்த்த அதிசயம்!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின் தேசப்பிதா...
நீ ஜனனம் கண்ட இந்நாளில்
உன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறோம்
வாழ்க பாரதம்!
வளர்க பாரதம்!


-தனுசு-

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. காந்தி ஜெயந்திக்கு ஏற்ற நல்லதொரு ஆக்கம். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. காந்தி பற்றிய அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. அருமை.... வாழ்த்துக்கள்...

    பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறப்பதற்கு தயாராக இருங்கள்...!

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிகள் T.T சார். பறவைகளை கண்டேன், என் மனமும் அவைகளோடு பறக்கக்கண்டேன்.

      நீக்கு
  4. படித்து பாராட்டிய வைகோ சார் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய ராஜராஜேஷ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .


    பதிலளிநீக்கு