வியாழன், 31 அக்டோபர், 2013

DEEPA OLI THIRUNAAL...தீப ஒளித் திருநாள்...

இந்தப் பாடலை,மிக அருமையாகப் பாடி, அழகான படங்களுடன் இணைத்திருக்கிறார், உயர்திரு.சுப்புத்தாத்தா.. கூடவே, மிக அழகாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்த்திருக்கிறார். கீழ்க்கண்ட  காணொளியில்  கேட்டு, கண்டு மகிழுங்கள்...


திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
தீமைகள் அகன்று நல்ல திருவருள் நிறையட்டும்!!
வாழ்வெல்லாம் வளம் தரவே வாழ்த்துக்கள் மலரட்டும்!!
வண்ணமிகு வாணங்கள் எங்கெங்கும் நிறையட்டும்!!

மத்தாப்பு வாணங்கள், மகிழ்வான நல்வாழ்த்து,
புத்தாடை, பூ வாசம், புகழ் சேர்க்கும் விருந்தோம்பல்,
சத்தான சிற்றுண்டி, சந்தோஷ சிரிப்பொலிகள்,
முத்தான நாளிதுவே மலர்மகளை வணங்கிடுவோம்!

பொன்மகளே!  திருமகளே!  பூவுலகின் தலைமகளே!!
பொன்னடிகள் எடுத்து வைத்து நம் இல்லம் எழுந்தருள்க!!
பொன்னொளியில் குடியிருந்து, புவி சிறக்க வரமருள்க!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!

எந்நாளும் எம் மக்கள் சிரித்திருக்க வரமருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!

ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!. பொங்கும் இன்பம் தங்குக எங்கும்!!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

14 கருத்துகள்:

 1. சிறப்பான கவிதை..

  இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி டிடி சார்!!

   நீக்கு
 2. ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
  பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
  வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
  தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!

  இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அம்மா!!, தங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 3. அகல் விளக்குகள் வரிசைக்கட்டி
  குத்து விளக்குகள் வண்ணம் கூட்டி
  பட்டும் பாட்டும்
  பட்டுத்தெறித்து
  பகல் போல் இரவு பொங்குது
  அது
  தீபாவளியென முழங்குது

  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான கவிதையுடன் கூடிய தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே!!!

   நீக்கு
 4. திசையெங்கும் சுடர் விரித்து
  தீயன ஒழித்து
  நல்லவை பெருகிட
  தன்னையே வியாபிக்கும்
  ஒளிச்சுடருக்கு
  அருமையான கவிதை சகோதரி...
  பரவட்டும் புத்தொளி
  நிரம்பட்டும் நிறை மங்களம்...

  பதிலளிநீக்கு
 5. அழகான வரிகளுடன் அருமையான கவிதை.

  கடைசியில் காட்டியுள்ள தீபமும் அழகு !

  மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!!. தங்களைப் போன்ற பெரியோர்களது நல்லாசியை என்றென்றும் வேண்டுகிறேன்!!. மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. பதில்கள்
  1. ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா!!!!!.. லிங்க் இணைத்துவிட்டேன்!!!

   நீக்கு
 7. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான கவிதையுடன் கூடிய தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

   நீக்கு