திங்கள், 21 அக்டோபர், 2013

THANUSUVIN KURUNGAVITHAIGAL... தனுசுவின் குறுங்கவிதைகள்..

என் கவலை

ஆந்திரா இரண்டாக பிரித்து
தெலுங்கானா உதயம்

எனக்கொரு குழப்பம்

எனக்கு பிடித்த
காரமான சாப்பாட்டை
இனி
எந்த பெயர் சொல்லி அழைப்பேன்?!!....

பேஸ் புக்

பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது
வெட்டியாய்
அரட்டை அடிக்க உட்கார்ந்த
குட்டிச் சுவரும்....

மடியில்

நான் பெற்ற குழந்தை
வேலைக்காரியின் மடியில்.
என் மடியில்
மடிக்கணினி.....

-தனுசு-

10 கருத்துகள்:

 1. பழைய மைசூர் ராஜதானி கர்நாடகா ஆனபோதிலும் மைசூர் பாகு அதே பெயர் கொண்டு தான் அழைக்கப்பட்டது .

  ஆக, ஆந்திரா மீல்ஸ் பெயர் மாறாது.

  முதல்லே ஆவக்காய் ஊறுகாய் சாதம அடுத்தது மிளகு பருப்புபொடி சாதம். அப்பறம் காப்சிகம் முழுசு முழுசா போட்ட சாம்பார் சாதம்.
  தொட்டுக்க வெங்காய உருளைக்கிழங்கு மசாலா.சேனை வறுவல். ஆப்பிள் பச்சடி, அதற்கப்பறம் மோர்குழம்பு சாதம்.
  பின்னே ரசம். எலுமிச்சம்பழ ரசம். வடகம், அப்பளம்.
  ஒரு குலோப் ஜாமுன். ஆம வடை.
  பருப்பு பாயசம்.
  பின்னே தத்யோன்னம். மாங்காய் தொக்கு.
  பீடா. ஒரு வாழைப்பழம்.
  இதி ஆந்திரா மீல்ஸ் சம்பன்னம்.

  ததாஸ்து.

  இப்பவும் அந்த விசாகப்பட்டினம் பைவ் ஸ்டார் ஹோட்டல் லேயும் ,
  ஹைதராபாத் த்வாரகா ஹோட்டல்லேயும் ஸ்பெஷல் ஆந்த்ரா மீல்ஸ் சாப்பிட்டு ரூபா 50 ஆ என்றது நினைவுக்கு வர்றது.

  ஆமாம். 1984ல்.
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெனுவை படிக்கும் போதே நாவில் நீர் சொட்டுகிறது. அ முதல் ஃ வரை அத்தனையும் பிரியமான வகையராக்கள்.

   தாங்களின் நீண்ட கருத்து என்னை அத்தனை உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 2. எல்லாமே அருமைதான், இருப்பினும் இன்றைய யதார்த்தத்தை அப்படியே எடுத்துரைக்கும் மூன்றாவது குறுங்கவிதை மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து என் கவிதைகளை படித்து உற்சாகமூட்டும் தாங்களுக்கு மிக்க நன்றி வைகோ சார்.

   நீக்கு
 3. மடிக்கணினி என்பது யாரோ பெற்ற பிள்ளை. ஒரு பழமொழி இருக்கிறதே, 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை தானே வளரும்' என்று! அது தான் நடக்கிறதோ? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதைக்கேற்ற ஒரு லிங்க் கொடுத்து பாராட்டிய தாங்களுக்கு மிக்க நன்றிகள்.

   நீக்கு
 4. காலத்தின் கோலங்கள்
  இங்கே அருமையான கவிவடிவம்
  பெற்றிருக்கிறது...
  நண்பர் தனுசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
  வல்லமையில் உங்கள் பதிவுகளை
  படித்து இன்புற்ற நான் இங்கும்
  அதே சுவை கண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும் வல்லமையிலும் என் கவிதைகளை படித்து ரசிக்கும் தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

   நீக்கு