வெள்ளி, 18 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 9... நவராத்திரி கவிதைகள்... பகுதி..9 ஆரத்தி எடுப்போம்!!


பாடலை, கீழ்க்கண்ட லிங்கில், உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு மகிழலாம். மத்யமாவதி ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்..
 
பல்லவி:
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே  உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..(முத்து)

அனுபல்லவி:

இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள்  தீர்ந்திடவே  எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)

சரணம்;
1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும்  நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும்  வாழ வேண்டும் தேவியரே!!  (முத்து)

2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள்  பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!!  (முத்து)

இந்த வருட நவராத்திரி கவிதைகள் இனிதே நிறைவுற்றன..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்..

8 கருத்துகள்:

  1. பாடல் மிகவும் அருமை...

    // நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!! //

    வாழ்த்துக்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
  2. மங்களம் எல்லாம் வழங்கும் இந்த ஆரத்தி பாடலை
    மத்யமாவதி ராகத்தில் பாட அனுமதி வேண்டுகிறேன்.

    சுப்பு தாத்தா.\
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.movieraghas.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.என் அனுமதி என்றெல்லாம் சொல்ல வேண்டாம். தாங்கள் பாடிக் கேட்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  3. அதிகாலை வேளையில்
    ஆரத்தி எடுத்து அன்னைக்கு
    சூட்டப்பட்ட பாமாலை
    நெஞ்சில் இனித்தது சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான நிறைவான மன நிறைவளிக்கும் ஹாரத்திப்பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு