சப்தமாதர்களின் முதலாவது தேவியான 'பிராம்மி' தேவியைக் குறித்த பாடல்...
ஆக்கும் தொழில் செய்யும் அன்பன் நாவில் உறைபவளே
அகிலம் முழுதும் உயிர்கள் படைக்கும் சக்தி தருபவளே
பிரம்ம தேவன் சக்தி பிராம்மி எனும் என் தாயே
பிள்ளை வரம் தந்தே பெரு மகிழ்ச்சி தருவாயே
நான்கு திருமுகங்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டு
நாளும் அன்னமதில் நடை பழகி வருபவளே
நலமருள் ஜபமாலை, கமண்டலமும் தரிப்பவளே
நல்லோர்க் கபயம் தந்து வரம் பலவும் தருபவளே
அம்பிகை திருமுகத்தில் தோன்றி வந்த பிரம்மாணி
அழகாய் பீதாம்பரம் அணிந்தருளும் ஜடாதாரணி
அன்னை உன் பெருமை சொல்ல சொல்ல இனிமையம்மா
அடியாள் அறியேனே அன்பு செய்து அருள்வாயம்மா
மான் தோல் தரித்து வந்து மா ஞானம் தருபவளே
மறதி நீக்குகின்ற மஹா சக்தி தேவியளே
மன்னுயிர் காக்கும் மாதா மண்டலத்தைக் காப்பவளே
மலரடி தொழுதேனே மனக் குறைகள் தீர்ப்பாயே!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அருமை அம்மா... மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குரொம்ப நன்றி டிடி சார்!. தொடர எனக்கும் ஆவல் தான். ஆனால் சக்தி ரதத்தில வந்த கவிதைகள் பகிர்வு என்பதால் சப்த மாதர்களில் இருவரைப் பற்றி எழுதவே வாய்ப்புக் கிட்டியது. விரைவில் தொடர அம்மையின் கருணையை வேண்டுகிறேன். இறைகருணையில் நாளை இவ்வருட நவராத்திரி கவிதைகளுக்கு ஆரத்தி!!.
நீக்குஅழகான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!!
நீக்குஇனிய வணக்கம் சகோதரி..
பதிலளிநீக்குசப்தகன்னியர் பற்றிய கவியாக்கம் அருமை...
"பிராம்மி" தேவியின் இயல்பும்.. அருளும்
கொடையும் அழகும் கவியில் கொண்டுவந்த விதம்
மனதை இனிக்கச் செய்கிறது..
தங்களின் பாராட்டும் மிக இனிமையாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரரே!!
நீக்கு