திங்கள், 14 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 4.... நவராத்திரி கவிதைகள்.. பகுதி..4.. திருமால் விரும்பும் திருவே லக்ஷ்மீ...

திருமால் விரும்பும் திருவே லக்ஷ்மீ!
திடமாய் தொழுவோர் திறமே லக்ஷ்மீ!!
திருவிளக்கு ஒளியே திருமகள் லக்ஷ்மீ!!!
தெளிந்த மதியில் திகழ்பவள் லக்ஷ்மீ!!!!

பிறையின் சோதரி புகழ் தரும் லக்ஷ்மீ!
பெம்மான் மார்பில் உறைபவள் லக்ஷ்மீ!!
பத்மம் ஏந்திடும் பத்மை லக்ஷ்மீ!!!
பற்றது நீங்கிட பதம் தரும் லக்ஷ்மீ!!!!

பொன்னில் செல்வி பொலிவே லக்ஷ்மீ!
பொறை நிறை மனதில் நிறைபவள் லக்ஷ்மீ!!
பொங்கும் மங்கலம் தருவாள் லக்ஷ்மீ!!!
பொழுதுகள் சிறந்திட‌ அருள்வாள் லக்ஷ்மீ!!!!

நித்யை நந்தினி ரஞ்சனி லக்ஷ்மீ!
நித்ய பிரகாசிநி நீங்கா லக்ஷ்மீ!!
நிறைவின் உருவே  நிர்மலை லக்ஷ்மீ!!!
நிதமும் துதிப்போம் நிறைவாள் லக்ஷ்மீ.!!!!

அன்பர்கள் அனைவருக்கும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி சார்!!. (சுறு சுறுப்புக்கு என்ன டானிக் சாப்பிடறீங்கன்னு சொல்லி உதவ முடியுமா.. போஸ்ட் பண்ணி அரை மணிக்குள் கமென்ட்... ஆச்சரியமூட்டுகிறீர்கள்!!)

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி கவிநயா!.

   நீக்கு
 3. அருமையான பாடல். அழகான படம். இனிய விஜயதஸமி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா!!

   நீக்கு
 4. திருவின் ஆசிடை
  எந்நாளும் தங்கட்டும்
  நலமும் வளமும்
  எப்போதும்
  பொங்கட்டும்... இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனங்கனிந்த வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே!!..

   நீக்கு